நெட்பிளிக்ஸ் எப்படி உருவானது? ஒரு சிறிய அபராதத்தால் மாறிய உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தின் கதை!

தாமதமாக சிடி கொடுத்ததற்காக விதிக்கப்பட்ட 40 டாலர் அபராதம் எப்படி ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியது?
தீர்வு
தீர்வு Gemini image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

பிரச்னைகள் எங்கு உருவாகிறதோ பெரும்பாலும் அதற்கான தீர்வுகளும் அங்கேயே தான் மறைந்திருக்கின்றன. ஒரு சவாலை எதிர்கொள்ளும் பொழுது வெளியில் தேடுவதை விட அந்தப் பிரச்னையின் சூழலை உன்னிப்பாக கவனித்தால் எளிதில் தீர்வு கண்டுவிடலாம்.

முள்ளிருக்கும் செடியிலேயேதான் அதை எடுப்பதற்கான வழியும் இருக்கும். விஷமுள்ள சில தாவரங்கள் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே அதற்கான மாற்று மருந்தாகச் செயல்படும் மூலிகைகளும் வளர்ந்திருக்கும். நம் வேலை அல்லது குடும்ப சூழ்நிலைதான் நமக்கு பதற்றத்தைத் தருகிறது என்றால், நம்மை அமைதிப்படுத்தும் வழியையும் அதே சூழ்நிலையில் இருந்து தான் நாம் கண்டறிய வேண்டும்.

ஒரு கணினி மென்பொருளில் (Software) திடீரென ஒரு கோளாறு (Bug) ஏற்பட்டு அந்த செயலி வேலை செய்யாமல் முடங்கிவிட்டால், மென்பொருள் பொறியாளர்கள் தீர்வைத்தேடி எங்கோ செல்வதில்லை. அந்தக் கோளாறு ஏற்பட்ட குறியீடுகளை (Source Code) மீண்டும் வரி வரியாக ஆராய்ந்து எந்த வரி குறியீடு பிரச்னையை ஏற்படுத்தியதோ அதிலேயே அதைச் சரி செய்வதற்கான வழியையும் கண்டுபிடிக்கிறார்கள்.

தீர்வை நோக்கி நகர்வதற்கான சில வழிகள்:

பிரச்னை ஏன் வந்தது என்று அதற்கான காரணத்தை ஆராய்ந்தால், அதை எப்படி சரிசெய்வது என்ற புள்ளி தானாகவே விளங்கும். எனவே பிரச்னைக்கான காரணத்தை முதலில் கவனிக்க வேண்டும். அத்துடன் பிரச்சனையை ஒரு சுமையாகப் பார்க்காமல் அது நமக்கு கற்றுக்கொடுக்கும் ஒரு பாடமாக பார்த்தால் அதாவது அதைப்பற்றிய நம் பார்வையை மாற்றிக்கொண்டால் தீர்வு தானாகவே கிடைக்கும்.

பிரச்னைகள் இருக்கும் இடத்திலேயே அதற்கான தீர்வுகளும் ஒளிந்திருக்கின்றன. பெரும்பாலான நேரங்களில் நாம் தீர்வை வெளியிலிருந்து தேட முயன்று தோற்று விடுகிறோம். பிரச்னையின் மூலத்தைக் கூர்ந்து கவனித்தால் அதிலிருந்து எப்படி மீள்வது என்பதற்கான வழியும் நமக்குத் தெரியவரும். எனவே ஒரு சிக்கலை அதன் மூலத்திலிருந்தே அணுக வேண்டும். அப்போது தான் நிரந்தரமான தீர்வு கிடைக்கும்.

தீர்வு
தீர்வுGemini image

விஷமுள்ள பாம்பு இருக்கும் இடத்திற்கு அருகிலேயே அந்த விஷத்தை முறிக்கும் மூலிகைச் செடியும் வளர்ந்திருக்கும் என்று கிராமப்புறங்களில் கூறுவார்கள். அதுபோலவே நம் வாழ்க்கைப் பிரச்னைகளுக்கான தீர்வுகளும் அந்தப் பிரச்னை உருவான இடத்திலேயே தான் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஓவர் புத்திசாலியா இருந்தா இதுதான் பெரிய பிரச்சனையா... பலரும் அறியாத பகீர் உண்மை!
தீர்வு

எனவே பிரச்னை என்று வரும்போது பதற்றப்படாமல் அதன் ஆணிவேர் எங்கே இருக்கிறது என்று கூர்ந்து கவனித்தால் தீர்வு தானாகவே புலப்படும். ஒரு பூட்டு தயாரிக்கும் போதே அதற்கான சாவியும் சேர்த்தே தயாரிக்கப்படுவதைப்போல, ஒவ்வொரு பிரச்னைக்குள்ளும் அதைத் தீர்ப்பதற்கான வழியும் ஒளிந்திருக்கும்.

1990களின் பிற்பகுதியில் 'பிளாக்பஸ்டர்' (Blockbuster) என்ற சிடி வாடகைக்கடையில் வாங்கிய சிடியை தாமதமாகத் திருப்பிக் கொடுத்ததால் ரீட் ஹேஸ்டிங்ஸ் (Read Hastings) என்பவருக்கு $40 அபராதம் விதிக்கப்பட்டது. இது ஒரு பெரிய பிரச்னையாக அவருக்குத் தோன்றியது. இந்த அபராதப் பிரச்னையே அவரை சிந்திக்க வைத்தது.

"ஏன் சிடிகளைத் தாமதமாகத் திருப்புவதற்கு அபராதம் விதிக்க வேண்டும்? மாத சந்தா முறையில் அன்லிமிட்டடாகப் படங்களைப் பார்க்கும் வசதியை உருவாக்கினால் என்ன?" என்று யோசித்தார். அந்தப் பிரச்னையின் விளைவாக உருவானதுதான் இன்றைய உலகப் புகழ்பெற்ற நெட்பிளிக்ஸ் (Netflix) நிறுவனம்.

இதையும் படியுங்கள்:
கஷ்டம் வந்தா மனசு ஏன் முடங்கிப்போகுது? மூளையின் இந்த ரகசியத்தை தெரிஞ்சுக்கோங்க!
தீர்வு

நம் அன்றாட வாழ்க்கையில் கூட ஒரு உதாரணத்தை சொல்ல முடியும். நம் வீட்டில் சிலந்தி வலை பின்னுவது (ஒட்டடை) ஒரு பெரிய பிரச்னைதான். அதை நீக்குவதற்கு நாம் பயன்படுத்தும் 'ஒட்டடைக் குச்சி' எவ்வாறு வேலை செய்கிறது? அந்த ஒட்டடையின் பிசுபிசுப்புத் தன்மையைப் பயன்படுத்திதான் அதை நாம் குச்சியில் சுருட்டி எடுக்கிறோம்.

அதாவது ஒட்டடையின் பிசுபிசுப்பு என்ற பிரச்னையே அதை சுலபமாக அகற்றுவதற்கான தீர்வாகவும் மாறுகிறது. எனவே பிரச்னை வரும்பொழுது கலங்காமல், இதற்குள்ளேயே இதற்கான வழியும் இருக்கிறது என்று தேடத் தொடங்கினால் தீர்வு நிச்சயம் கிடைக்கும்.

தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எரிச்சலூட்டும் சிறு விசயங்கள் எப்படி ஒரு பெரிய தொழில் முனைவுப் புரட்சியை உருவாக்குகின்றன என்பதை வாசகர்கள் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.