
மனித வாழ்க்கை என்பது பலவித வடிவங்களைக் கொண்டது. நாம் நமக்கு கிடைத்த வாழ்க்கையை சிறப்புடன் வாழக் கற்றுக்கொண்டு வாழவேண்டும்.
நாம் நமக்கு தொியாத விஷயங்களை பிறரிடம் கேட்கத் தவறிவிடுகிறோம். சில சந்தர்ப்பங்களில் தொிந்த விஷயங்களை, வாய்ப்புகளை, நமது அலட்சியப் போக்கால் தவறவிட்டு விடுகிறோம். அதன்படி சிறப்பான வாழ்க்கை வாழ ஒன்பது வகையான நெறிமுறைகளை நாம்கடைபிடிக்க வேண்டும். சந்தர்ப்பம், வெற்றி, இவைகள் தேடிவரும் நிலையில் நாம் கவனமாக அதை தக்கவைத்துக்கொள்வதே சாலச்சிறந்தது.
"அதன் பிரகாரம் திரும்பவராத மூன்று நிலைகள்"
நேரம்,
வாா்த்தைகள்,
சூழ்நிலை,
நேரம் போனால் திரும்ப வரவே வராது. அதனால் கிடைத்த நேரத்தை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நேரம் ஒரு போதும் காத்திருக்காது. அதனிடம் சோம்பல் கிடையாது.
அது தனது வேலையை சரியாக செய்துகொண்டே இருக்கும், அதேபோல நாம் சொன்ன வாா்த்தைகள் கோபத்தில் நம்மையும் அறியாமல் அள்ளித் தெளித்த அவசர கதியாய் மாறிவிடும்.
எவ்வளவு முயற்சி செய்தாலும் பல வகைகளில் வருத்தம் தொிவித்தாலும்கொட்டிய வாா்த்தைகளை திரும்பப் பெறமுடியாது.
மேலும் சூழ்நிலை, நல்ல காலம், நேரம், சந்தர்ப்ப சூழ்நிலை அமைந்து வரும்போது அதைத் தக்கவைத்துக் கொள்வதே புத்திசாலித்தனம். வெண்ணைய் திரண்டு வரும்போது தாழியை உடைப்பது நல்ல விஷயமே அல்ல!
"இழக்கக்கூடாத மூன்று விஷயங்கள்"
அமைதி,
நோ்மை,
விடாமுயற்சி.
எந்த நிலையிலும் எந்த தருணத்திலும் அமைதியை கடைபிடிக்க வேண்டும். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நோ்மை தவறக்கூடாது. நோ்மை எண்பது உடைந்த கண்ணாடி பீஸ் போல, அதை சரிவர கடைபிடிக்காமல் போனால் வாழ்வில் கீரல், காயம் ஏற்படத்தான் செய்யும்.
அதேபோல எவ்வளவு தோல்வி வந்தாலும் எதிா்ப்புகள் வந்தாலும் நமது தன்னம்பிக்கையோடு் கூடிய விடாமுயற்சியை கைவிடவே கூடாது. விடாமுயற்சியே வெற்றிக்கானது.
"மதிப்புமிகுதியான விஷயங்கள்"
அன்பு,
நம்பிக்கை,
நண்பர்கள்,
அன்பே பிரதானம் ,அமைதியான வாழ்க்கையில் நம்மோடு கூடவே இருக்க வேண்டிய பல நல்ல குணங்களில் அன்புக்குத்தான் முதலிடம். அனைத்து உயிா்களிடத்தும் அன்பு காட்டுவதே மிகவும்நோ்த்தியான ஒன்று.
அன்பால் அனைத்தையும் வெல்லலாமே!
அதுமட்டுமல்லாது நம்பிக்கையும் மிகவும் முக்கியமானது.
நம்பிக்கை வைப்பதோடு, நம்பிக்கை துரோகம் நம்மிடம் இருக்கவே கூடாது. மேலும் நண்பர்கள்பழக்கமானது மிகச்சிறந்தது.
நல்ல நட்புக்கு ஈடு இணையே கிடையாது.
உலகிலேயே பணத்தைவிட அதிக மதிப்பு மிகுந்தது நட்பு.
அது நீடித்து இருக்கவேண்டும். அதை நாம் ஒரு போதும் தவற விடவே கூடாது. ஆக திரும்பவராத, இழக்கக்கூடாத, மதிப்பு மிகுந்த ஒன்பது விஷயங்களைகடைபிடித்தாலே நவக்கிரஹங்களையும் சுற்றி வணங்கி வந்தது போலத்தான். ஆக ஒன்பது விஷயங்களை கடைபிடிப்போம். சந்தோஷக் கப்பலில் பயணிப்போம்!