“நேரமில்லை... நேரமில்லை... நேரமென்பதில்லையே!” புலம்பாம இந்தப் பதிவைப் படிங்க!

Motivation Image
Motivation ImageImage credit -pixabay.com

-வித்யா குருராஜன் (பாண்டி)

திலுமே மூன்று நிலைகள் உண்டு.
1. உழைப்பு 2. மேலாண்மை 3. நிர்வாகம்

முதல் நிலைதான் அனைத்திற்கும் அடித்தளம். ஆனால், மேலாண்மையும் உழைப்புடன் கை கோர்க்கும்போது, அந்த உழைப்புக்கான பலன் இன்னும் அதிகமாகும். வெறும் உழைப்பு மட்டும் நல்லதொரு பலனைத் தந்துவிடாது. முறையாக மேலாண்மை செய்யப்பட்டால் மட்டுமே உழைப்பு விரயத்தைத் தடுக்கலாம், குறைக்கலாம். எல்லாரும்தான் உழைக்கிறார்கள். அப்படி இருக்கும்போது வித்தியாசங்களை உண்டாக்குவது இங்கே மேலாண்மைதான்.

நல்ல விளைவுகளைப் பெற மேலாண்மை செய்யப் படவேண்டியவை மூன்று. 1. மனித வளம்; 2. பணம்; 3. (முக்கியமானது) நேரம்.

மனித வள மேலாண்மை (HR) சிக்கலானது. ‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்‘ என்ற ஒற்றைக் குறளில் இந்த மொத்தத்தையும் அடக்கிவிட்டுப் போய்விட்டார் வள்ளுவர். இதைத் தாண்டி HR மேனேஜ்மெண்ட்டில் வேறு பெரிய விளக்கங்களைச் சொல்வதற்கில்லை.

அடுத்து, நிதி மேலாண்மை!

இருக்கும் முதலீடுகள், கடன்கள், சேமிப்புகளுக் கிடையிலான மேலாண்மை உடலின் நரம்பினைப் போன்றது. ஒன்றோடொன்று தொடர்புடையது. சிக்கலானது. இதற்கு பிரத்தியேக பயிற்சிகள் தேவை. ஆனால், நம் குடும்பங்களின் பெண்கள் எந்தப் பெரிய படிப்போ பயிற்சியோ இல்லாமலேயே இதில் நிபுணிகள்தான்! கடுகு டப்பா சேமிப்பும், சீட்டுகளின் முதலீடும், நகை அடகுக் கடன்களும் வைத்துக்கொண்டு எப்பேர்பட்ட நெருக்கடிகளையும் ஆண்டாண்டு காலமாக நம் பெண்கள் மேலாண்மை செய்து வெற்றிகரமாகச் சமாளிக்கிறார்களே!

அடுத்து நேர மேலாண்மை.

நேரமே இல்லை; No time; 24 மணி நேரம் பத்தவே இல்லை என்ற வாசகங்கள் மிகவும் பரவலாகிவிட்டன. அந்த நாட்களில் நடந்தோ, சைக்கிளிலோ போனார்கள். வீட்டு வேலைகளுக்கு இன்றுபோல் இயந்திரங்கள் இல்லை. தகவல் தொழில்நுட்பமும் இன்றுபோல் அந்நாட்களில் துரிதமாக இல்லை. ஆனால், இன்று நாம் தூரத்தை வென்றுவிட்டோம். நேரத்தை மிச்சப்படுத்திக்கொடுக்க பல உபகரணங்கள் வைத்திருக்கிறோம். அப்படியானால் இன்று 24 மணி நேரம் தாராளமாகத்தானே இருக்க வேண்டும்.! ஆனால் போதவில்லையே! ஏன்?

அன்றைய நாட்களில் அலுவல்கள் இவ்வளவு இல்லையா! அல்லது அலைபேசி, தொலைக்காட்சிபோல் கண்ணுக்குப் புலப்படாமல் நேரத்தை விழுங்கக்கூடிய உபகரணங்களில் நேரத்தை அவர்கள் வீணடிக்க வில்லையா! விவாதப்பொருள்தான் இது. மொத்தத்தில் நேரம் போதவில்லை என்ற கருத்து 2ஆவது படிக்கும் குட்டிப்பையன்கூட சொல்லத் தொடங்கிவிட்ட வாசகமாகிப் போய்விட்டது.

அதனால் இருக்கும் நேரத்தை வைத்துக்கொண்டு மேனேஜ் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. நேர மேலாண்மை கட்டாயமாகிறது. நேர மேலாண்மைக்கு இப்படித்தான் என்பதெல்லாம் கிடையாது. இது தனிப்பயனாக்கப்பட்டது. ஹைலி கஸ்டமைஸ்ட். Highly Customised.

இதையும் படியுங்கள்:
கொரிய பெண்களின் அழகு ரகசியம் தெரியுமா?
Motivation Image

திறம்பட நேர மேலாண்மை செய்ய முதலில் நமக்கு இருக்கும் வேலைகளைப் பட்டியலிட வேண்டும். பிறகு அந்தப் பட்டியலை 8  தலைப்புகளில் பிரிக்க வேண்டும்

1. ஒரே நேரத்தில் செய்ய முடிகிற வேலைகள்.

2. தனியாகக் கவனம் செலுத்தித்தான் செய்ய வேண்டும் என்கிற வேலைகள்.

3. அடுத்தவரின் நேரத்தை எடுத்துக்கொள்ளலாம் என்பது போன்ற வேலைகள்.

4. நாம் மட்டுமே இதைச் செய்தாக வேண்டும் என்கிற வேலைகள்.

5. உடனடியாக நேரம் கொடுக்க வேண்டிய வேலைகள்.

6. சற்று தள்ளிப்போடலாம் என்பதான வேலைகள்.

7. ரொட்டீனாகச் செய்ய வேண்டிய வேலைகள்.

8. அவ்வப்போதோ எப்போதாவதோ செய்ய வேண்டிய வேலைகள்.

வேலைகளைப் பட்டியலிட்ட பின்னர், அவற்றைச் செய்வதற்கு இருக்கும் வளங்களையும் ஆள் பலங்களையும் குறித்துக்கொள்ள வேண்டும்.
இந்த மேப்பிங் செய்துமுடித்ததும் அதற்கு ஏற்றாற்போல் நம் நேரத்தைப் பகிர திட்டமிட வேண்டும். இந்த நேர மேலாண்மை திட்டத்தில் நம் ஓய்வுக்கும் நம்மைப் பேணிக்கொள்வதற்கும் நமக்கு மகிழ்ச்சியும் நிறைவும் உற்சாகமும் தரும் வேலைகளைச் செய்வதற்கும் நம் நேரத்தினை ஒதுக்குவதற்குத் தவறவே கூடாது.

நேரமில்லை என்று வெறுமனே புலம்பிக் கொண்டிருக்காமல் இப்படி நேர மேலாண்மைக்கான தெளிவான திட்டம் வகுத்துக்கொண்டால் நிச்சயமாக உதவியாக இருக்கும்.

மேலாண்மைக்கு அடுத்த மேம்பட்ட நிலை நிர்வாகம். மேனேஜிங் டைமோடு நில்லாமல் அட்மினிஸ்டரிங் டைம் என்பற்கு உங்களை உயர்த்திக்கொள்ள முடிந்தால் இன்னும் சிறப்பு!

தெளிவான திட்டம் வகுத்தலே பாதி வேலை முடிந்ததற்குச் சமம் என்பார்கள். அதன்படி நல்லதொரு நேர மேலாண்மை திட்டத்தினைத் தீட்டி வெற்றியை நெருங்குவோமா…!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com