எதுவும் நிரந்தரம் அல்ல! மனித வாழ்வின் யதார்த்தம்!

Motivational articles
The reality of human life!
Published on

'சூப்பர் ஸ்டார், ஒரு  படத்துல, "கண்ணா!  இந்த புகழ் பதவி, பணம், பட்டம்; இறப்பு-பிறப்பு; தும்மலு, இருமலு, விக்கலு இதெல்லாம் கேட்டு வராது. தானா வரும். வந்தாலும் ஏன்னு கேக்க முடியாது. போனாலும் தடுக்க முடியாது. வர்ட்டா! " எனக் கூறுவார்.

இது மனித வாழ்க்கையில் நூற்றுக்கு நூறு உண்மை. எதுவும் நிரந்தரம் கிடையாது.

பிறவிகளில், மனிதப் பிறவி உயர்ந்தது என்றாலும், பெரிய பதவியினால் பெறுகின்ற புகழும், பட்டமும்  நிரந்தரம் கிடையாது.  எல்லாமே தற்காலிகம்தான் என்று  தெரிந்திருந்தும் மனிதர்கள் அதன் பின் ஓடுகின்றனர். நேற்று எட்டாத உயரத்தில் இருந்த அநேகர் இன்று எட்டும் உயரத்தில் இருக்கின்றனர்.  பலர் மேலுலகம் சென்றுவிட்டனர்.

பணமும், பேரும், புகழும் பெற்ற ஒரு சிரிப்பு நடிகர், எப்போதும் 555 ஃப்ராண்ட் சிகரெட்டும் கையுமாக உயரப் பறந்தவர்  வறுமையில் வாடிய சமயம், ஒருவரும் கண்டு கொள்ளவில்லை. சாதாரண சிகரெட் வாங்க, பிறரிடம் காசுக்காக கையேந்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

பிரபலமான பாடகர் ஒருவர், தனது நிகழ்வுகளை நடத்த வேண்டிய ஊர்களுக்கு  ரெயிலில் சென்று இறங்குகையில், கூட்டம் அவரை மொய்க்கும்.  மலர் மாலைகள் கழுத்தில் விழும். முகத்தில் ஒருவித கர்வத்துடன் நடந்து செல்வார். அவரருகே, சாதாரண நபர் செல்ல முடியாது. அவரின் புகழ் மெல்ல மெல்ல மறைய, அதே ரெயில் நிலையத்தில் ஒருவரும் அறியப்படாத நிலையில் அமரவேண்டிய சூழ்நிலை உருவானது.

இதையும் படியுங்கள்:
பணத்துக்காக வேலை செய்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!
Motivational articles

புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ, பாடி பில்டர்  (Arnold Schwarzenegger) அர்னால்ட் நடிப்பில் படிப்படியாக உயர்ந்து கலிபோர்னியாவின் கவர்னர் என்ற புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய வெண்கலச் சிலை முகப்பில் நிறுவப்பட்ட வகையில் ஒரு ஆடம்பர ஹோட்டலை திறந்து வைத்தார்.

ஹோட்டலின் திறப்பு விழாவின் பொழுது அந்த ஹோட்டலின் உரிமையாளர் "அர்னால்டு எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஹோட்டலுக்கு வந்து முன் பதிவு ஏதும் இன்றி இலவசமாக தங்கிக்கொள்ளலாம், அவருக்கு எப்பொழுதுமே ஒரு அறை இருக்கும்" என்று  கவர்னர் பதவிக்கு அளிக்கும் மரியாதை நிமித்தம் கூறினார்.

நாட்கள் நகர-நகர, அர்னால்ட்-இன் பதவி, புகழ் அனைத்தும் போனது. சாதாரண மனிதனாகிவிட்ட அர்னால்டு அந்த ஹோட்டலுக்கு சென்றபோது ஹோட்டலில் எல்லா அறைகளும் புக்கிங் ஆகிவிட்டதால்,  தற்பொழுது அறைகள் ஏதும் இல்லை என்று ஹோட்டல் நிர்வாகம் கூறியது. இதைக் கேட்ட ஹாலிவுட் முன்னாள் ஹீரோ, ஹோட்டலைத் திறந்து வைத்த கலிபோர்னியா முன்னாள் கவர்னர், அர்னால்ட் அதிர்ச்சியில் உறைந்து போனார். பதவி இருந்தால்தான் மரியாதையென அறிந்தார். பிறகு தன் கையில் வைத்திருந்த போர்வையை எடுத்துக்கொண்டு அந்த ஹோட்டலின் முகப்பில் தன்னால் திறந்து வைக்கப்பட்ட, வெறும் அலங்கார பொருளாக நின்றுக்கொண்டிருந்த தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன்னர் படுத்துவிட்டார்.

இதன்மூலம்  தெரியவருவது  "பெரிய பதவி மற்றும் பிரபலமாக  இருக்கும் பொழுது மெச்சப்படுவோம், புகழப்படுவோம்,  உச்சபட்ச மரியாதை தரப்படும்.

எப்பொழுது பதவியையும், புகழையும் இழக்கின்றோமோ,  அடுத்த நொடியே ஒதுக்கப்படுவோம். புகழ்,  பதவி,அதிகாரம் எதுவுமே வாழ்வில் நிரந்தரம் கிடையாது" என்பதாகும்.

இதையும் படியுங்கள்:
'நான்' என்பதை விட்டு 'நாம்' என்று சொல்லுங்கள் - வாழ்வில் நிம்மதி பெறுங்கள்!
Motivational articles

பதவியிலிருக்கும்போது, புகழுக்காகவும், பேருக்காகவும் அநேகர் செய்யும் காரியங்கள், சொந்தப்பணத்தில் செய்வது கிடையாது. அது பொதுப்பணம் என்பதை பலரும் மறந்து போய்விடுகின்றனர். நான்  மந்திரியாக இருந்தபோது, பெரிய பதவியில் இருந்தபோது, பிரபலமாக இருந்தபோது எவ்வளவோ செய்தேன். இப்போது நான்  பதவியில் இல்லையென்று,  கண்டுகொள்ளாமல் போகிறான். அகம்பாவம் பிடித்தவன்" என்று புலம்புவதில் அர்த்தம் கிடையாது. விளம்பரத்திற்கென, புகழுக்கென செயல்களைச் செய்யாமல்,  மனதார செய்யவேண்டும்.

புகழை எதிர்பார்த்து செய்யாமல்,  நம்மிடமிருப் பதிலிருந்து அள்ளிக்கொடுக்க முடியாவிட்டாலும், கிள்ளிக்கொடுக்கலாம். நாம் செய்கின்ற தர்மமும், தானமும் நம் தலைமுறைகளை நிரந்தரமாக காக்க வழி வகுப்பதோடு,  அவர்களும் தான-தர்மம் செய்ய தூண்டுகோலாக அமையும் என்பது நிதர்சனம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com