ஜெயிக்கிறவன் கிட்ட இருக்கிற அந்த ஒரு ரகசியம்... உங்ககிட்ட இருக்கா?

வெற்றி, திறமை, அனுபவம் எல்லாம் பொறுமையில்தான் வேரூன்றியவை; அவசரத்தின் சிப்பியை விட பொறுமையின் முத்து பெரிதென்பதை உணர்த்தும் குரு–சீடன் உதாரணக் கதை
Guru and Disciple
Patience | Life Motivational storyImage credit: AI
Updated on

எதையும் பொறுமையாக செயல்படுகிறவர்கள், ஒரு செயலை நேர்த்தியாய் சரியான நேரத்தில் செய்து முடிப்பார்கள். அதுவே பொறுமை இல்லாதவர்களிடம் அது இருக்காது.

அவர்களால் குறித்த நேரத்தில் செய்யவும் முடியாது. அவசரம் நமக்கு முத்து சிப்பிகளை தரலாம். ஆனால் பொறுமையாக இருந்தால் முத்துக்களை தர முடியும்.

ஒருவனுடைய திறமைகளை வெற்றிகரமாக உரு மாற்றித் தருவது அவரின் பொறுமையே! பொறுமை இல்லாது வீழ்ந்து போனவர்களின் சரித்திரத்தை விட பொறுமையால் வாழ்ந்து வரலாறு படைத்தவர்களை அதிகமாக உள்ளனர்.

பூமிக்கு இலக்கணமாய் நம் முன்னோர்கள் பூமியை சொல்வார்கள். அந்த பூமியை நாம் காலால் மிதிக்கிறோம், வெட்டி உதைக்கிறோம், உமிழ்கிறோம்.

ஆனாலும் அது நமக்கு உண்ண உணவு அளிக்கிறது. தாகத்திற்கு நீர் தருகிறது. நாமும் நம் மனதை மெல்ல மெல்ல தட்டி எழுப்புவோம். பொறுமைக்கு நல்ல இலக்கணமாய் திகழ்வோம்.

அதற்கு உதாரணம் இக்கதை.

வெளிநாட்டில் இலக்கிய பரப்புரை செய்வதற்காக அங்கு நடைபெறவிருந்த மாநாட்டிற்கு செல்ல இருந்த சீடன் ஒருவன் , தன் குருவை வணங்கினார். நீ எந்த சூழ்நிலையிலும் பொறுமையாக இருப்பாயா? என்று கேட்டார் குரு.

பொறுமையாக இருப்பேன் குருவே! என்றான் சீடன்.

உறுதியாக உன்னால் பொறுமையாக இருக்க முடியுமா? என்று மீண்டும் கேட்டார்! குரு.

மாநாட்டில் உனது பேச்சைக் கேட்பதற்கு ஆளே இல்லாமல் போனாலும் கூட பொறுமையாக இருக்க முடியுமா? என்று மறுபடியும் கேட்டார் குரு.

இருப்பேன் குருவே!

நன்றாக சிந்தித்துச் சொல் உன்னால் எந்த நிலையிலும் பொறுமையாக இருக்க முடியுமா? என்று மறுபடியும் கேட்டார் குரு.

பொறுமை இழந்துவிட்டான் சீடன்.

என்ன குருவே? நான் தான் திரும்பத் திரும்ப பொறுமையாக இருக்க முடியும் என்று சொல்கிறேன். மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்கிறீர்கேளே என்று அலுத்துக் கொண்டான்.

நான் பொறுமையாக இருப்பாயா? என்ற ஒரே கேள்வியை நான்கைந்து முறை கேட்டவுடன் நீ பொறுமை இழந்து விட்டாயே?இப்பொழுது தெரிகிறதா? பொறுமையாக இருப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல! என்றார் குரு.

இதையும் படியுங்கள்:
ஆர்வம் இருந்தும் முன்னேற முடியவில்லையா? உடனே மாற்ற வேண்டிய 'Slow Mode' பழக்கம்!
Guru and Disciple

தன் தவறை உணர்ந்து சீடன், குருவிடம் மன்னிப்பு விட்டான். பொறுமை கடலின் பெரிது! என்ற உண்மையை உணர்ந்தான்!

பொறுமை தான் மனிதனுக்கு மிகவும் தேவை. பூவுலகில் அதுதான் பெரிய சேவை!

சோதனைக் காலம் வரும்போது இன்னும் பொறுமை காப்போம்! சுடச்சுட ஒளிரும் சங்கைப் போல நாமும் பொறுமை காத்து ஒளிர்வோம். பொறுமையே அனுபவத்தின் வெளிப்பாடு ! அதுவே வாழ்வின் அலைகளை எதிர்கொள்ளும் துடுப்பாய் பயன் தரும்!

logo
Kalki Online
kalkionline.com