எண்ணம்போல் வாழ்க்கை: நேர்மறை எண்ணங்கள் நம் வாழ்வை எப்படி மாற்றும்?

நாம் விதைப்பதே நமக்கான அறுவடை; நேர்மறை சிந்தனையின் அற்புத ஆற்றல்.
நேர்மறை எண்ணங்கள்
நேர்மறை எண்ணங்கள்Gemini image
Updated on

ல்லது நினைத்தால் நல்லது மட்டுமே நடக்கும் எனச் சொல்வார்கள். எண்ணம் போல்தான் வாழ்வு.

நீங்கள் எந்தச் சூழ்நிலையிலும் இருந்தாலும் சரி, வாழ்வில் நீங்கள் உயர்ந்த இடத்துக்குச் செல்லவேண்டுமெனில், உங்களுக்கு மிக மிக அத்தியாவசியமானது நேர்மறை எண்ணங்கள் தான்!

நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தைச் செய்வோம்.

எதிலும் நேர்மறையான கோணத்தை அணுகுதல்

பிறருக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்தல்

தீய எண்ணங்களையும் பொறாமையையும் தவிர்த்தல்

பாசிட்டிவ் எண்ணங்கள்

நம்முடைய ஒவ்வொரு நாளையும் பாசிட்டிவாக மாற்ற நாம் மகிழ்ச்சியாக இருப்பதே அவசியம். கூடுதலாக அன்பு செலுத்தவும் கற்றுக்கொள்ளுங்கள். அறிவால் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியாது. உலகத்தை அன்பால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

நம்பிக்கை

எந்தச் செயலையும் தைரியமாக செய்யக்கூடிய தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

நல்ல மாற்றம்

நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம் அன்பை பரப்பி நல்ல சூழ்நிலையை உருவாக்கலாம்.

ஒரு குட்டிக் கதை

ஒரு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வாழ்ந்து வந்தார் அவர் வீட்டு தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது.

வாரம் ஒருமுறை முருங்கைக்காய்களை பறித்து பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு 10 கிலோமீட்டர் தள்ளி உள்ள டவுனுக்கு சென்று மளிகைக்கடையில் விற்று வருவது வழக்கம்.

முருங்கைக்காயை அவருக்கு கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவார். கந்தசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது.

நேர்மறை எண்ணங்கள்
நேர்மறை எண்ணங்கள்Gemini image

இதைப் பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து வந்தார்.

பல வருடமாக கந்தசாமி முருங்கைக்காய் கொண்டு வருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை.

கந்தசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகைப் பொருட்களை கொடுத்து அனுப்புவார். காரணம் கந்தசாமியின் நேர்மையும், நாணயமும் எல்லோரும் அறிந்தது.

இதையும் படியுங்கள்:
முதுமையில் சுய அன்பை மீட்டெடுப்பது எப்படி? இனி உங்களுக்காக வாழும் பொற்காலம்!
நேர்மறை எண்ணங்கள்

ஒருநாள் கந்தசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு, அதற்கான பொருட்களை வாங்கி சென்றார். சிறிது நேரத்தில் முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் கேட்க, அவருக்காக மளிகைக்காரர் அதனை எடை போட்டார். அதில் 9 கிலோ மட்டுமே இருந்தது.

அன்று இரவு முழுவதும் மளிகைக்காரருக்கு தூக்கமே வரவில்லை.

கந்தசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம். இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம்செய்து விட்டாரே என்று வருந்தினார்.

அடுத்த நாள் கந்தசாமியின் கன்னத்தில், மளிகைக்காரர் அறைந்தார். இத்தனை வருஷமா இப்படித்தான் ஏமாத்திட்டு இருக்கியா? என்றார்.

அய்யா... என்னை மன்னிச்சுருங்க, நான் ரொம்ப ஏழை. எடைக்கல் வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க.

ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டிலும், இன்னொரு தட்டில் முருங்கைக்காயும் வச்சிதான் எடை போட்டுக்கொண்டு வருவேன். இதைத் தவிரஎதுவும் தெரியாது என்று காலைப் பிடித்து அழுதார். மளிகைக்காரருக்கு இது செருப்பால் அடித்ததுபோல் இருந்தது.

இதையும் படியுங்கள்:
ஈகோவுக்கு இடமில்லை: குடும்ப அமைதிக்குத் தேவை மனப்பக்குவம்!
நேர்மறை எண்ணங்கள்

தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார். இத்தனை வருடங்களாக கந்தசாமி ஏமாற்ற தானும் குறைவாக பருப்பை கொடுத்த மளிகைக்காரரும், அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது தெளிவாக புரிந்தது.

ஆகவே நல்லதை மட்டுமே தருவோம்!

நல்லதை மட்டுமே விதைப்போம்!

மனுஷன் எதை விதைக்கிறாங்களோ அதையே அறுப்பான்.

இதனை எப்போதும் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

எனவே நல்லதை நினைத்தால் நல்லதே நடக்குமா? என்பது சந்தேகம் இருக்கும். ஆனால் நல்லதே நினைத்து செயல்களை செய்யும்போது நாம் எதிர்பார்க்கும் நல்ல விஷயங்கள் நடக்கவில்லை என்றாலும் கெட்ட விஷயங்களில் நாம் மாட்டிக் கொள்ளாமல் இருக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். இதனை நாம் ஒரு நல்ல விஷயமாகவே பார்க்க வேண்டும்.

எனவே வாழ்க்கையில் வெற்றி பெற நேர்மறை சிந்தனை மிக மிக முக்கியம். நல்லது நினைத்தால் நல்லது நடக்கிறது. இல்லையோ நீங்கள் எப்போதும் நல்ல உணர்வுடன் நிம்மதியாக இருக்க முடியும்!

இந்தக் கட்டுரையைப் படிப்பதன் மூலம் உங்கள் எண்ணங்களின் ஆற்றலை உணர்ந்து, எதிர்மறை சிந்தனைகளை விலக்கி, எந்தச் சூழலிலும் மன அமைதியையும் வாழ்க்கையில் தொடர் வெற்றியையும் அடையும் தெளிவைப் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com