டீ போட்ட பிறகு டீத்தூளை குப்பையில் கொட்டுபவரா நீங்கள்? இனி இந்த 10 வழிகளில் பயன்படுத்துங்கள்!

மிஞ்சிய தேயிலைத் தூளைக் வீட்டின் பல்வேறு அன்றாட தேவைகளுக்குப் பயன்படுத்தும் எளிய வழிமுறைகள்.
டீத்தூள்
டீத்தூள் Gemini image
Updated on

காலையில் எழுந்தவுடன் பலருக்கும் முக்கியமாக தேவைப்படுவது ஒரு கப் டீ தான். அதை குடித்து முடித்தவுடன் அவர்களுக்கு ஏற்படும் உற்சாகத்தை பார்க்க வேண்டுமே. செம க்யூட் ஆக வேலைகளை தொடங்குவார்கள். அதேபோல் பணி நிமித்தம் அலுவலகங்களுக்கு தங்களைக் காண வருபவர்களை வரவேற்று உபசரிப்பதில் முக்கியத்துவம் பெறுவது இந்த டீ தான். அதேபோல் ஏதாவது ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி பேச வேண்டும் என்றால் அதற்கு ஏற்பாடு செய்வது தேநீர் விருந்து தான். இப்படி பல்வேறு சிறப்புகளைப் பெற்றது தேயிலை என்னும் டீ.

அப்படி டீயை தயாரித்த பிறகு மிஞ்சும் தேயிலைத் தூளைக் கழிவாகக் கொட்டிவிடாமல், அதைச் சுத்தமாகக் கழுவி, காயவைத்துச் சேமித்தால் வீட்டின் பல தேவைகளுக்குப் பயன்படுத்தலாம்.

அப்படி பயன்படுத்தும் முன் செய்ய வேண்டிய பக்குவம்:

​டீ தூளுடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடுபவர்கள் அதை வடிகட்டியவுடன், டீ தூளில் உள்ள சர்க்கரை மற்றும் பாலின் தன்மையைப் போக்க, அதைச் சல்லடையில் போட்டுத் தண்ணீரில் 2-3 முறை நன்றாகக் கழுவி, வெயிலில் காயவைத்து உலர வைத்துச் சேமிக்க வேண்டும்.

சிலர் டீ டிக்காஷனை தனியாகவும், பாலை தனியாகவும் காய்ச்சி ஒன்று சேர்ப்பார்கள். அப்பொழுது டீ தூள் சுத்தமாக இருக்கும் அதை அப்படியே காய வைத்தால் போதுமானது. கழுவ வேண்டிய அவசியம் இல்லை. இவற்றை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

​பயன்படுத்திய தேயிலைத் தூளின் 10 முக்கிய பயன்பாடுகள்:

டீத்தூள்
டீத்தூள் Gemini image

​1. இயற்கை உரமும் தாவர வளர்ச்சி பெருக்கியும் : 

மேற்கூறியபடி பாதுகாக்கப்பட்ட உலர்ந்த தேயிலைத் தூளைச் செடிகளின் தொட்டியில் தூவினால், அது மண்ணுக்குத் தேவையான நைட்ரஜன் மற்றும் அமிலத் தன்மையைக் கொடுத்து, பூக்கள் மற்றும் காய்கறிகள் நன்றாகக் காய்க்க உதவும் (குறிப்பாக ரோஜா செடிகளுக்கு உகந்தது).

2. ​துர்நாற்றம் நீக்கி:

காயவைத்த தேயிலைத் தூளைச் சிறிய துணியில் கட்டி ஃபிரிட்ஜ், ஷூ ரேக் அல்லது சிங்க் அடியில் வைத்தால், அங்குள்ள துர்நாற்றத்தை முழுமையாக உறிஞ்சிவிடும்.

3. சமையலறை எண்ணெய் பிசுக்கு நீக்கி: 

பாத்திரங்களில் உள்ள பிசுபிசுப்பான எண்ணெய் கரைகள் மீது ஈாமான தேயிலைத் தூளைத் தேய்த்துக் கழுவினால், எண்ணெய் பிசுக்கு எளிதில் நீங்கும்.

​4. மரச் சாமான்கள் பளபளக்க:

பயன்படுத்திய தேயிலைத் தூளை மீண்டும் நீரில் கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரை ஆறவைத்துத் துணியில் நனைத்துத் துடைத்தால் மரச் சாமான்கள் புதியது போலப் பளபளக்கும்.

​5. கண்ணாடிப் பொருட்கள் மற்றும் கண்ணாடிகள் சுத்தம் செய்ய:

தேயிலைத் தூள் கொதிக்கவைத்த நீரைக் கொண்டு ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் முகம்பார்க்கும் கண்ணாடிகளைத் துடைத்தால் கரைகள் நீங்கித் தெளிவாகும்.

6. இயற்கையான முடி சாயம் மற்றும் கண்டிஷனர்: 

தேயிலைத் தூள் நீரைக் கொண்டு குளித்த பின் தலைமுடியை அலசினால், முடி மென்மையாகவும், நல்ல கறுப்பு நிறப் பொலிவுடனும் இருக்கும். இதற்கு டீ போடும்பொழுது டிக்காஷனுக்கு மட்டும் பயன்படுத்திய டீ தூளை பயன்படுத்தினால் மிகவும் நல்லது. அதுபோல் இல்லாதவர்கள் சல்லடையில் சலித்த டீ தூளையும் பயன்படுத்தலாம்.

​7. கண்களின் சோர்வு நீங்க: டீ பேக் (Tea bags) பயன்படுத்தினால், அதை ஆறவைத்து மூடிய கண்களின் மேல் 10 நிமிடங்கள் வைத்தால் கண்களின் சோர்வு, வீக்கம் மற்றும் கரு வளையம் குறையும்.

​8. கால்களின் துர்நாற்றம் மற்றும் சோர்வு நீங்க:

வெதுவெதுப்பான நீரில் தேயிலைத் தூளைப் போட்டு, அதில் பாதங்களை 15 நிமிடங்கள் ஊறவைத்தால் கால்களின் துர்நாற்றம் நீங்கி, தசைச் சோர்வு குறையும்.

​9. துருப்பிடிப்பதைத் தவிர்க்க:

 இரும்பு வாணலி அல்லது காஸ்ட் அயன் பாத்திரங்களைக் கழுவிய பின், லேசாகத் தேயிலைத் தூள் நீரைக் கொண்டு துடைத்து வைத்தால் துருப்பிடிக்காமல் இருக்கும்.

​10. வீட்டுத் தோட்டத்தில் பூச்சி விரட்டி: 

தேயிலைத் தூளின் வாசனை எறும்புகள் மற்றும் சிறிய பூச்சிகளுக்குப் பிடிக்காது. செடிகளைச் சுற்றிலும் இதைத் தூவி வைத்தால் பூச்சித் தொல்லை குறையும்.

இதையும் படியுங்கள்:
15 நாளானாலும் காய்கறி அப்படியே ஃப்ரெஷ்ஷா இருக்கும்... இந்த 4 டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுங்க!
டீத்தூள்

​இதர பயன்கள் (Other Uses):

​சருமப் பராமரிப்பு (Face Scrub): உலர்ந்த தேயிலைத் தூளுடன் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் லேசாகத் தேய்த்தால் இறந்த செல்கள் நீங்கிச் சருமம் பொலிவுறும்.

​காயங்கள் மற்றும் பூச்சிக் கடிகளுக்கு: தேயிலையில் உள்ள 'டானின்' (Tannin) அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டது. பூச்சிக் கடிபட்ட இடத்தில் ஈாமான தேயிலைத் தூளை வைத்தால் எரிச்சல் குறையும்.

​கம்பளி மற்றும் மேஜைத் துணி துர்நாற்றம் நீங்க: கம்பளிகளின் மீது உலர்ந்த டீ தூளைத் தூவி, 15 நிமிடங்கள் கழித்து வேக்கம் கிளீனர் மூலம் உறிஞ்சி எடுத்தால் கெட்ட வாடை நீங்கும்.

கோலத்திற்கு அழகு சேர்க்க:கலர் கோலம் போடுபவர்கள் யானை போன்ற கோலங்களுக்கு இந்த டீத்தூளை பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
வீட்டிலிருந்து பல்லிகளை உடனே விரட்ட 6 எளிய இயற்கை வழிகள்!
டீத்தூள்

இப்படி பயனாகும் இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம் இதுவரை டீத்தூள் தேயிலையில் நிறைந்துள்ள 'டானின்கள்' (Tannins), ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நைட்ரஜன் சத்துக்கள் கிருமி நாசினியாகவும், துர்நாற்றத்தை உறிஞ்சும் காரணியாகவும், தாவரங்களுக்குச் சிறந்த இயற்கை ஊட்டச்சத்தாகவும் செயல்படுகின்றன என்பதே இதற்கான அறிவியல் ஆதாரமாகும்.

இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் தேநீர் கழிவுகளை வீணாக்காமல் மறுசுழற்சி செய்து, இரசாயனமற்ற இயற்கை உரங்கள் மற்றும் வீட்டைப் பராமரிக்கும் இயற்கை உத்திகளைப் பெற்று தேவையற்ற செலவுகளை மிச்சப்படுத்தலாம்.

logo
Kalki Online
kalkionline.com