நேர்மறை எண்ணங்கள் - இன்பம் துன்பம் இரண்டுக்கும் பாதுகாப்பு!

Positive thoughts
Positive thoughts
Published on

வாழ்க்கையில் உங்களிடம் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டுமானால், முதலில் உங்களது மனநிலை ஆக்கப் பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் நல்ல முறையில் சிந்திக்க வேண்டும் (Positive thoughts) என்பதை உணர்ந்து கொண்டு செயல்படுங்கள்.

அப்படி மனதை மாற்ற நீங்கள் தயாராக இருந்தால், உங்களுக்கு அந்த நேரத்தில் உங்களின் உள்ளம் அதற்கேற்ப சூழ்நிலையும் நல்ல முறையில் மாறும். உங்கள் வாழ்க்கையில் அறியப் பல வாய்ப்புகள் உங்களைத் தேடிவருவது நிச்சயம்.

வாழ்க்கையில் என்ன என்ன எப்போது நடக்கும் என்பதை யாராலும் அறிந்துகொள்ள முடியாது என்பது உண்மை. அப்படி நடப்பதை ஒருபோதும் உங்களால் மாற்றவும் முடியாது. ஆனால் இது நடக்காது என்று தெரிய வரும்போது, அதனை மாற்றும் சக்தி உங்களிடம் உள்ளது.

வாழ்க்கையில் வாய்ப்புகள் வரும்போது, அதனை முடிந்த வரை நழுவி போக விடாதீர்கள். அதில் சில வாய்ப்புகள் உங்கள் வாழ்க்கை தரும், நல்ல நிலைமைக்கு மாற்றக் கூடிய வாய்ப்புகளாக அமையும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஒவ்வொருவருடைய வாழ்க்கை நடைமுறையும் நாணயம் போன்று தான் இருக்கும். ஒரு நேரம் இன்பம் எனில், ஒரு நேரம் துன்பம் இருக்கும். ஒரு நேரம் இரண்டில் ஒன்றுதான் இருக்கும். ஆனால் ஒன்றை மறந்துவிடாதீர்கள்.

இன்பத்தில் திளைத்து, நேர்மறை எண்ணங்களை விட்டு விலகினால், மறுபக்கம் அதன் வாய்ப்புக்காக காத்திருக்கும் துன்பம் உங்களை புரட்டி போட்டு விடும். அதனால் இன்பம் வரும்போது, உங்களுக்கு கிடைத்த நல்ல வாழ்விற்கான வரமாக எண்ணுங்கள்.

அதேபோல் துன்பம் வரும்போது, அதனை எப்படி எதிர்கொள்வது என்று நேர்மறை எண்ணங்கள் எழாமல், எதிர்மறை எண்ணங்களின் தவறான வழியில் சென்றுவிட்டால், மறுபக்கம் அதன் வாய்ப்புக்காக காத்திருக்கும் இன்பம் வராமல் போய்விடும்.

இதையும் படியுங்கள்:
மாசம் 10 லட்சம் சம்பளம் வாங்குறவன் கூட நிம்மதியா இல்லையாம்! அப்போ நாம? - அதிர்ச்சி ரிப்போர்ட்!
Positive thoughts

திருக்கோயில்களில் இருக்கும் குளங்களில் விழும் மழைநீர் புனித நீராக, அதாவது போற்றும் தீர்த்தமாக மாறுகிறது. அதே மழைநீர், சேறும் சகதியுமாக இருக்கும் குட்டை போன்றவற்றில் விழுந்தால், அசுத்தமான நீராக மாறிவிடுகிறது. இதுதான் வாழ்க்கை.

வாழ்க்கையில் மகிழ்ச்சியும், மகிழ்ச்சி இன்மையும் நீங்கள் பார்க்கும் நோக்கிலேயே மாறுபட்டு இருக்கும். செய்யும் வேலையில் அப்படி இல்லை என்பதை புரிந்து கொண்டு, எப்போதும் நோக்கம் உயர்வாக நினைத்து பார்க்கும் தீர்க்கமான பார்வையாக பார்க்க முயலுங்கள்.

வாழ்க்கையில் நீங்கள் செய்யும் செயல்களில் குறைகள் ஏற்ப்படின், அவற்றை நிறை செய்யும் நேர்மறை எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் உங்கள் வாழ்நிலை மாறாது. அந்த குறைகளை சிரமமாக பார்த்து வருத்தத்துடன் இருந்தால், உங்கள் வாழ்நிலை பாதிக்கும்.

வாழ்க்கையில் இன்பம் வரும்போது, மனதை தெளிவாக வைத்து இருக்கவேண்டும். அப்போதுதான் நீங்கள் அந்த இன்பதைப் பெறுவதற்கு எவ்வாறு வியர்வை சிந்தி உழைத்து, இந்த நிலைக்கு வந்தீர்கள் என்பது உங்களுக்கு தெரியும்.

வாழ்க்கையில் துன்பம் வரும்போது, மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் உங்களால் எவ்வளவு தெளிவாக, சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை நீங்களே அறிந்துகொண்டு, அதன் பிடியில் இருந்து விடுபட்டு, எதிர்கொள்ளும் சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை தயார்படுத்திக்கொள்ள முடியும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com