தடம் புரளும் வாழ்க்கை... திசை மாறும் பயணம்! உங்களை நீங்களே செதுக்கிக்கொள்ள சில சீக்ரெட்ஸ்...

motivational Tamil article
motivational Tamil article
Updated on

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் ஏதோ ஒரு வகையில், ஒரே நிலையில் குறிக்கோள் கொண்டு தான் பயணம் செய்கிறது. ஆனால், அது ஒவ்வொரு தனி மனிதன் வாழும் முறையில், அதன் தன்மையின் அடிப்படையில் மாறுபடுகிறது.

வாழ்க்கையில் சின்ன சின்ன செயல் வடிவங்களை தனக்குள் உருவாக்கி, அதனை நீண்ட கால லட்சியங்களோடு சேர்த்து வாழப் பழகிக் கொள்ளுங்கள். அப்போது தான் தனக்கென்று ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை நிர்ணயம் செய்து வாழமுடியும். இப்படி வாழ்ந்தால், குறைந்த காலத் திட்டங்களை அதற்குரிய கால இடைவெளிகளில் செய்து முடித்து விட்டோமா என தனக்குள் சுயபரிசோதனை செய்து கொண்டு, அடுத்தமுறை தன்னை அதற்கேற்றபடி திட்டமிடுதலை வகுத்து, நேர்க்கோட்டிலும், நேர்மறை எண்ணங்களோடும் வாழமுடியும்.

தனக்குள் வரையறை இல்லாமல், எந்தவித கட்டுப்பாடின்றி, தன்னிச்சையாக எப்படி வேண்டுமானாலும் வாழ்பவனுக்கு, வாழ்க்கையில் எந்த ஒரு அர்த்தமும் இருக்காது. இவர்கள் வாழ்க்கை, எந்த நிமிடமும் எப்படி வேண்டுமானாலும் மாறிவிடும். இப்படி யாரவது வாழந்து கொண்டிருந்தால், உடனே தங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் ஏற்படும் சில மோசமான நிகழ்வுகளை நினைத்து வருத்தப்படுவதைவிட, அவற்றை கடந்து வாழப் பழகுங்கள். இன்னும் நிகழ்காலம் உங்கள் கைகளில் இருப்பதை மறந்து விடாதீர்கள். நிகழ்காலத்தை செதுக்கி, தன்னகத்தே மகிழ்ச்சி மேகங்களை வரவழைத்து கொண்டு, இன்ப மழையில் நனைந்து, வாழ்க்கையை (motivational Tamil article) அர்த்தமுள்ளதாக மாற்றும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
இலக்கை அடைய எது முக்கியம்? Motivation or Discipline?
motivational Tamil article

வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்தாலும், கடந்த காலத்தை மாற்றவும் முடியாது. கடந்து வந்த பாதையும் மாற்ற முடியாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதனால் ஏன் அதைப்பற்றி நீங்கள் நினைத்து, காலத்தையும் நேரத்தையும் வீணாக கழிக்கிறீர்கள். எனவே ஒவ்வொரு மனிதனுக்கும் நிகழ்காலம் என்பது, ஒரு சிற்பி, ஒரு கல்லை செதுக்கி சிலை செய்வது போன்றது என்பதை கருத்தில் வையுங்கள். ஆகையால் இன்றைக்கு நீங்கள் செய்யும் செயல்கள் தான் உங்கள் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும். அதனால் நிகழ்காலத்தை சாதனைக் களமாக மாற்றும் கவனம் மட்டுமே உங்களுக்கு இருக்கட்டும்.

வாழ்க்கையை, நம்பிக்கை கொண்டு, வாழ்ந்தால் தான், ஏற்படும் கடினமான நேரங்களில் கூட, எதிர்நீச்சல் போட்டு, அதனிடமிருந்து விலகி வரும் எண்ணம் வலிமையாக உருவாகும். அப்போது தான், தங்களால் எதுவும் முடியும் என்கிற முழு நம்பிக்கையுடன் செயல்படும் தகுதியும், ஆற்றலும் உங்களுக்குள் விதை நெல்லாக உருவெடுத்து, உங்கள் வாழ்க்கயை மாற்றும்.

வாழ்க்கையில் நேர்மையாக வாழ்ந்து, அதனை பொறுமையாக கடந்து, அமைதி என்னும் சொல்லுக்கு, அர்த்தம் தெரிந்து, விழுதுகளைப் பற்றுவது போல், நேசம் வளர்க்கும் வார்த்தைகளில் மனிதம் காக்கும் கருணை விதைத்து, செய்யும் செயல்களில் வரம்பு மீறாமல், வரைமுறை வகுத்து அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து காட்டுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com