

வாழ்க்கையில் மாற்றங்களை விதைத்துக் கொண்ட இருக்க வேண்டியது அவசியம் தேவை தான். ஆனால் அது ஒருபோதும் எதிர்மறை எண்ணங்களை கொண்டதாக இருக்கக் கூடாது.
வாழ்க்கையில் ஒரேயடியாக எல்லாம் மாறி விட வேண்டும் என்று நினைப்பதும் தவறு. அப்படி எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒருபோதும் ஒன்றையுமே மாற்ற முடியாமல் வீழ்ந்து போவார்கள்.
முதலில் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள முயற்சி செய்ய முயலுங்கள். அடுத்த கட்டத்துக்கு செல்லும் போது, தன்னிடம் உள்ள குறைகளைக் களைந்து, தன்னை மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் மட்டுமே, எதையும் மாற்றும் சக்திக்கு தகுதி உடையவர்கள்.
வாழ்க்கையில் குறை சொல்பவர்கள் நிறையவே இருப்பார்கள். அவர்கள், உங்கள் வாழ்க்கை நல்வினைக்கு எந்த விதத்திலும் ஏற்றம் தந்து விட மாட்டார்கள். நீங்கள் ஒருபோதும் அவர்களின் வலையில் சிக்காமல் இருக்க, சுயசிந்தனையில் உங்களை புடம் போட்டு கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் யாரையும் குறைந்தும் மதிப்பிட வேண்டாம். யாரையும் நம்பி ஏமாந்து விடவும் வேண்டாம். நம்பக் கூடாதவர்களை இனம் கண்டு கொள்ளாமல் வீணாக நம்பி ஏமாந்து விடாதீர்கள். வாழ்க்கையில் சில மனிதர்கள் நம்பக் கூடியவர்களும் இருப்பார்கள். அவர்கள் தக்க நேரத்தில் கூறும் அறிவுரைகளை ஏற்க்காமல் கெட்டுப் போய் விடாதீர்கள்.
உங்களை குறை கூற காத்து கிடக்கும் இந்த உலகம், குறை கூற அவர்கள் உத்தமர்களும் இல்லை; அதற்காக நீங்கள் வருத்தப்படுவதும் தேவை இல்லை.
இந்த உலகமே மிகவும் அதிசயமான விதத்தில் கட்டமைக்கப்பட்ட ஒரு மாய பிம்பம். அதில் எத்தனை எத்தனை மனிதர்கள். இவற்றை, சில புரிந்து கொள்ள முயற்சி செய்யும் மனங்கள், தனது வாழ்க்கை சிறகுகள் ஒடிந்து வீழ்ந்து போகும் தருணங்களே அதிகம். அதனால், உங்கள் பார்வை தீர்க்கமாக இருக்க வேண்டும். அந்த அச்சாணி வண்டியில் மட்டுமே உங்கள் வாழ்க்கை பயணம் இருக்க வேண்டும்.
வாழ்க்கையில் உங்கள் நண்பர்கள் வேறு யாரும் இல்லை. உங்களுடைய நல்ல குணங்கள் மட்டுமே என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவை இருந்தால் மட்டும் போதும், உங்களை நீங்களே தயார்படுத்திக் கொண்டு, முன்னேற்றப் பாதையில் தடங்கள் பதித்து, வாழ்ந்து உயர்ந்து நிற்பதற்கு.
வாழ்க்கையில், பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்ற பழமொழிக்கு ஏற்ப வாழும் வாழ்க்கை நிலையானது அல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். குணம் மேலோங்கி இருக்கும் இடத்தில் பணம் மதிப்புடன் இருக்கும். தலைகீழாக மாறிவிட்டால், உங்களை பணமும் குணமும் சேர்ந்து வீழ்த்தி விடும்.
வாழ்க்கையில் மனம் கறை படிந்து விட்டால் வாழ்க்கையே அழுகுக்காக ஆகிவிடும். குணம் தீவினைகள் செய்ய முற்பட்டால், குரங்கு கையில் கிடைத்த பூமாலை போன்று உங்கள் வாழ்க்கை சின்னாபின்னமாக போய்விடும். நல்ல எண்ணங்களை மனதில் விதையுங்கள். நல்ல குணத்தை கொண்டு செயலாற்ற முயலுங்கள்.
வாழ்க்கையில் நதியைப் போன்று பயணிக்க வேண்டும். அதில் ஒரு கரை நல்ல மனதின் அடித்தளமாகவும் மற்றொரு கரை நல்ல குணத்தில் கட்டமைக்கப்பட்ட தாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் உங்கள் வாழ்க்கை சிறப்பாகவும் சீர்மைக் கொண்டதாகவும் இருக்கும்!