
வாழ்க்கையில் கிடைத்துள்ள பல வரங்களில் முக்கியமான ஒன்று பிறருக்கு நம்மால் முடிந்த உதவியை செய்வது. தனி மனிதனாக முன்னேற பிறரின் தயவும், உதவியும் முக்கிய பங்கு வாகிக்கின்றது என்பது உண்மை.
அது நமக்கும் பொருந்தும். அறிந்தும், அறியாமலும் நமது தனி முயற்சிகள், தன்னம்பிக்கை, உழைப்பு இவைகளை தவிர பிறரின் சப்போர்ட் மிகபெரிய அளவில் (ஏதோ ஒரு ரூபத்தில்) சமயத்தில் கை கொடுத்து முன்னேற வழி காட்டுகின்றது.
பிறர் முன்னேற முயலும்பொழுது நம்மால் ஆன உதவியை எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல் திறந்த மனத்தோடு மகிழ்சியுடன் செய்ய முற்படுங்கள்.
அவர்கள் முன்னேற்றத்தில் ஏதோ ஒரு வகையில் நாமும் பங்கு கொண்டோம் என்ற எண்ணமே உங்களுக்கு மனநிறைவை அளிக்கும்..
இத்தகைய மனநிறைவை வார்த்தைகள் அல்லது எழுத்தால் முழுமையாக வர்ணிக்க முடியாது. அது ஒரு உணர்ச்சிபூர்வமான மகிழ்விக்கும் நிகழ்வு. அனுபவம் மூலமே உணரமுடியும், நினைவு கூற முடியும்.
மற்றவர் முன்னேற்றத்தில் நம்மாலும் பங்குபெற முடிந்ததே என்று நிம்மதி பெருமூச்சுவிடும் சந்தர்ப்பம் ஒரு சிலருக்குதான் அமையும்.
நீங்களும் பிறர் முன்னேற்றத்தில் பயணித்து அத்தகையை அனுபவம் பெறுவது தங்கள் கையில்தான் இருக்கின்றது.
முயன்று பயன்/ பலன் பெறுங்கள்.
முக்கியமாக. உங்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கும். பிறருக்கு நீங்களே முன் வந்து உதவுவதால், உங்களுக்கு உதவி தேவை என்ற பொழுது பெரும்பாலான நேரங்களில் உங்களை அறியாமலே உதவி ஒரு வகையில் வந்து சேரும். இது உதவிகள் செய்த பலரின் உண்மை வாழ்க்கை அனுபவங்கள்.
பிறருக்கு உதவு பணம்தான் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. உபயோகமான யோசனைகள் கூறலாம்.
முன்னேற முயற்சி செய்யும் பிறரின் பிரச்னை என்ன என்று கேட்டு தெரிந்துக்கொண்டு, புரிந்துகொண்டு நடைமுறைக்கு ஏற்ப எளிய வழி முறைகள் உங்களுக்கு தெரியும் என்றால் பகிர்ந்துக்கொண்டு அவர்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் அளிக்கலாம்.
உங்களால் முடிந்த பயன் அளிக்கும் நடை முறை தீர்வுக்கு வழி காட்டலாம்.
பிறர் முன்னேற்றத்தில் முழுமனதுடன் பங்கு பெரும் பொழுது உங்களுக்கும் நன்மை கிட்டுகின்றது. புதிய பிரச்னைகளை எப்படி அணுகுவது, எதிர்கொண்டு தீர்வு காண்பது போன்றவை.
உங்களுடைய சுயநம்பிக்கை வலுப்பட வாய்ப்பு கிட்டுகின்றது.
அனுபவ பூர்வமாக அறிந்துக்கொள்ளவும், பகிர்ந்துக் கொள்ளவும் எல்லோருக்கும் சந்தர்ப்பம் அமைவது அவ்வளவு சுலபமில்லை.
பிறரின் முன்னேற்றத்தில் உண்மையாக அக்கறை கொண்டு பங்கு கொண்டால் அத்தகைய சந்தர்ப்பங்கள் அமைய வாய்ப்புகள் அதிகம்.
பிறர் முன்னேற்றத்தில் பங்கு கொண்டு அவர்களது திறமைகள், முன்னேற்றம், சாதனைகள் இவைகளை தொடர்ந்து மனதார பாராட்டி வந்தா ல் உங்களுக்கு மன நிறைவு கிடைப்பதுடன் பரந்த மனப்பான்மையை மேலும் வளர்த்துக்கொள்ள ஏதுவாகும்.
சந்தர்ப்பம் அமையும் பொழுது எல்லாம் பிறர் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை காட்ட கற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் சாதனைகளில் மனம் மகிழ வழி வகுத்துக் கொள்ளுங்கள்.