மனசும் உடம்பும் ரொம்ப சோர்வா இருக்கா.. இந்த ரகசியங்களை ட்ரை பண்ணா நீங்களும் எனர்ஜெடிக் ஆகலாம்!

simple-daily-habits
simple-daily-habits
கிரி கணபதி

வணக்கம், என் பெயர் கிரி கணபதி. என்னைப் பற்றி அறிய ஆர்வம் காட்டியமைக்கு நன்றி! கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக Content Creation துறையில் இருக்கிறேன். Writing, Video Content, Podcast போன்றவற்றில் அனுபவம் உண்டு. உள்ளடக்க ஆராய்ச்சி மற்றும் AI கருவிகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். ஆரோக்கியம், மோட்டிவேஷன், டெக்னாலஜி, சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். டிஜிட்டல் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நான், நிலையான வசீகரிக்கும் உள்ளடக்கங்கள் மூலமாக வாசகர்களையும், பார்வையாளர்களையும் கவர முடியும் என முழுமையாக நம்புகிறேன்.

Updated on: 

தினமும் இயந்திரம் போல ஓடிக்கொண்டே இருப்பதால், நமக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கக் கூட நாம் மறந்துவிடுகிறோம். இதனால் நமது மூளையும் உடலும் மிகவும் பாதிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுபட்டு, உங்களின் உடலையும் மனதையும் எப்படி ஈஸியாக ரிலாக்ஸ் செய்வது என்பதற்கான சில சூப்பரான டிப்ஸ்களை இப்போது பார்ப்போம்.

மனதை அமைதிப்படுத்தும் தந்திரம்!

காலையில் கண் விழித்தவுடன் முதலில் போனைத் தேடும் பழக்கத்தை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். முதல் சில நிமிடங்களை எந்த ஒரு டிஜிட்டல் தொந்தரவும் இல்லாமல் அமைதியாகத் தொடங்குவது மிகவும் நல்லது. அதேபோல, ஏதாவது ஒரு பிரச்சனை வரும்போது உடனே கோபப்பட்டு வார்த்தைகளை விடுவதற்கு முன்பாக, பொறுமையாக ஐந்து முறை ஆழமாக மூச்சு விடுங்கள். 

தினமும் ஒரு பத்து நிமிடம் எந்த சிந்தனையும் இல்லாமல் நிம்மதியாக உட்காரப் பழகுங்கள். உங்களை அறியாமல் மூளைக்குள் தேவையில்லாத எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருந்து உங்களை பாடாய்ப்படுத்தினால், அதை ஒரு பேப்பரில் எழுதி வைத்துவிடுங்கள். இணையத்தில் அதிகப்படியான செய்திகளைத் தேடிப் படிப்பதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்வது மன அமைதிக்கு ரொம்பவே உதவும்.

உடலுக்கு ஊட்டம் தரும் சுலபமான வழிகள்!

உடம்பு எப்பவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றால், உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மிக மிக அவசியம். தினமும் காலையில் வரும் இதமான சூரிய வெளிச்சம் உங்கள் உடம்பில் படும்படி கொஞ்ச நேரம் வெளியே நில்லுங்கள். நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பே உட்கார்ந்து வேலை செய்வதால் கழுத்து மற்றும் தோள்பட்டை ரொம்பவே இறுக்கமாகி வலி வர ஆரம்பிக்கும். 

அதைத் தவிர்க்க அடிக்கடி சின்னச் சின்ன ஸ்ட்ரெச்சிங் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். குறைந்தபட்சம் ஒரு இருபது நிமிடமாவது உடற்பயிற்சி செய்யவோ அல்லது வெளியே கொஞ்ச தூரம் மெதுவாக வாக்கிங் போகவோ நேரத்தை ஒதுக்குவது உடலுக்கு ரொம்பவே நல்லது.

உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்!

உங்களுக்குள் இருக்கும் உண்மையான உணர்வுகளை முதலில் நீங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்களின் எனர்ஜியை வீணாக்கும் நபர்களிடமோ அல்லது உங்களுக்குப் துளி கூட பிடிக்காத விஷயங்களுக்கோ கொஞ்சம் கூட தயங்காமல் 'நோ' சொல்லப் பழகிக் கொள்ளுங்கள். 

இதையும் படியுங்கள்:
தனிமை, எரிச்சல், ரகசியம்: உங்கள் டீனேஜ் பிள்ளையின் மனதில் நடப்பது என்ன?
simple-daily-habits

மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைக்க, நீங்கள் ரொம்பவே நம்பும் மற்றும் அன்பான ஒருவரிடம் வெளிப்படையாகப் பேசுங்கள். அன்றைய தினத்தில் ஒரு சின்ன வெற்றியை அடைந்தாலும் அதை ரொம்பவே சந்தோஷமாகக் கொண்டாடுங்கள். அதே சமயம், உடம்பு டயர்டாக இருந்தால், எதைப் பற்றியும் யோசிக்காமல் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நிம்மதியாக ரெஸ்ட் எடுங்கள்.

நமது நரம்பு மண்டலத்தை எப்போதுமே கூலாகவும் அமைதியாகவும் வைத்திருக்க, நாம் எதையும் நூறு சதவீதம் பெர்ஃபெக்ட்டாக செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. மேலே சொன்ன இந்த விஷயங்களை தினசரி வாழ்க்கையில் ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொண்டாலே போதும். 

இதையும் படியுங்கள்:
ஏங்க உம்முனு இருக்கீங்க? கொஞ்சம் சிரிங்க...
simple-daily-habits

ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாகத் தெரிந்தாலும், தொடர்ந்து செய்யும்போது இதுவே உங்களுக்கு ஒரு ஆரோக்கியமான லைஃப்ஸ்டைலாக மாறிவிடும்.

logo
Kalki Online
kalkionline.com