எளிமையும் நிதானமும் சிறந்த வாழ்வுக்கான வழி!

Motivational articles
Simplicity and moderation
Published on

மக்கு சரி என நினைக்கும் கருத்து அடுத்தவருக்கு பிடிக்கும் என்ற நமது நினைப்பே தவறு!

அனைவருக்கும் அனைவரையும் பிடிக்காமல் போகலாம், அதற்காக நமக்கு பிடித்த கருத்துகளை எதிா்தரப்பினா்கள் மீது திணிக்கவே கூடாது! அதேபோல நாமே தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பதும் அநாகரீகம், அடுத்தவர் பேசுவதை கேட்காமல் இருப்பதும் பொிய தவறுதானே!

அவரவர் உணர்வுகளைப் புாிந்துகொள்ள வேண்டும், சிலர் பேசவேண்டிய கருத்துக்களைப் சொல்லிவிட்டு போய்விடுவாா்கள் அதுதான் சரி! சொல்ல வந்ததை தெளிவாக சொல்லி விட்டு  போய்விட்டாா். அப்புறம் அங்கே ஏன் தேவையில்லா விமர்சனம்?

அதேபோல இறந்து போனவர்களைப் பற்றி அவர் அப்படிப்பட்டவர், நல்லவர் இல்லை, அவரது குணங்களும் பழக்க வழக்கங்களும் எனக்கு பிடிக்காது,  என அவரைப்பற்றி குறை சொல்வதை நிறுத்த வேண்டும், அவர் உயிரோடு இருக்கும்போதே அவரிடம் தவறை சுட்டிக்காட்டி இருக்கலாமே?

ஏன்செய்யவில்லை? முகத்துக்கு நேரே சொல்ல தயக்கமாம் அப்படி என்றால் இவர்தான் சுயநலவாதி! சரிதானே!

நட்புடன் பழகினால், பரஸ்பரம் செய்யும் விஷயங்களில் மேற்கொள்ளும் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும், அதுதான் நல்ல நட்புக்கு அடையாளம்! அதை விடுத்து அவர் இறந்த பிறகு சொல்வது தப்பான நடைமுறை.

அறிவுரை சொல்வது இலவசம்தான் அதற்காக நமக்கு சரியென பட்ட விஷயத்தை நாம் அடுத்தவர்கள் மீது திணிக்கக்கூடாது!

அது நல்லதல்ல.  பொதுவாக தவறு செய்யாத மனிதர்களே கிடையாதுதான்,  அதை நாம் சுட்டிக் காட்டும் நிலையில் அதை திருத்திக்கொள்ளும் நபராக  இருந்தால் நாம் தலையிடலாம். அப்படி இல்லாத நிலையில் நாம் ஒதுங்கிக்கொள்ளலாமே! அதேபோல நாம் ஒருவருக்கு ஒரு உதவி செய்தால் அது அவருக்கு பலனளிக்கலாம், ஆனால்  அதையே நாம் சொல்லிக்காட்டிக்கொண்டே இருக்கக்கூடாது.

இதையும் படியுங்கள்:
தோல்வி என்பது ஒரு பின்னடைவுதான். அதுவே முடிவாகிவிடாது..!
Motivational articles

அப்புறம் நாம் செய்த செயலுக்கே அர்த்தமில்லாமல் போய்விடும், பொதுவாகவே வாழுகின்ற வாழ்க்கையில் நமக்கு நிதானமும், முன்யோசனையும், இருக்க வேண்டும். எதை செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கவேண்டும்.

மனசாட்சியுடன் நாம் செயல்படவேண்டும், அனைத்தும் நமக்குத்தான் தொியும் என்ற நிலைபாடு நம்மிடம் குடிகொண்டிருந்தால் அதை காலி செய்து விடுங்கள். நல்ல நண்பர்களோடு பழகி நல்ல கருத்துக்களை பறிமாறி நீ பொியவன் நான் பொியவன் என்ற நிலைபாடு தவிா்த்து அனைவரின் கருத்துக்களையும் கேட்டு அதற்குத் தகுந்தாற்போல நாணல்போல வளைந்து கொடுக்கும் தன்மையோடு அகம்பாவம் தவிா்த்து அன்பே பிரதானாமாய் வாழ்ந்து வந்தாலே நமக்கான மரியாதைதானாகவே கிடைத்துவிடுமே! கிடைக்காதென்று யாா் சொன்னது?

நம்மில் பலருக்கு அடுத்த வீட்டில் பக்கத்து பிளாட்டில், யாா் ஜாகை  இருக்கிறாா்கள் என்ற விபரமே தொியாமல் வாழ்ந்து வருபவர்களும் இருக்கத்தானே செய்கிறாா்கள்! அப்புறம் எங்கிருந்து பரந்த மனப்பான்மை  வரும்?

இதையும் படியுங்கள்:
காற்றை எதிர்த்துப் பறக்கும் காற்றாடியாக உயர்வோம்..!
Motivational articles

பொதுவாகவே ஒருவரை ஒருவர் புாிந்துகொண்டு அனைத்தும் தொிந்தவர் நாம்தான் என்ற நிலைபாட்டினை மாற்றி அடுத்தவருக்கும் எல்லாம் தொியும் என்ற உணர்வுகளோடு கருத்துக்களைப்பறிமாறி சகோதர மனப்பாங்குடன் பழகி வந்தாலே நமக்கான மாியாதை களவு போகாதே  அதை உணர்ந்து செயல்படுவோமா?    

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com