பெண்கள் மன அழுத்தத்தைக் குறைக்க சுலபமான சில வழிகள்!

Women to reduce stress...
stressImage credit - pixabay
Published on

ன அழுத்தம் அது எப்பொழுதும் பெண்களுக்கு அதிகம் உண்டு. ஏனென்றால் வீடு அதில் நடக்கும் பிரச்னைகள் சூழ்நிலைகள் அது மட்டும் இலலாமல் வேலைக்கு செல்லும் பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் டென்ஷன் அங்கு இருக்கும் மன அழுத்தங்கள் என ஒரு பெரிய பட்டியலே உண்டு.

மன அழுத்தத்தை போக்குவதற்கு சில வழிமுறைகள் உண்டு. அதை நாம் முறையாக கையாண்டாலே போதும் மன அழுத்தம் நம்மை விட்டு சிறகடித்து பறந்துவிடும். அப்புறம் நம் மனதும் சிறகடித்து இன்பமாய் பறக்கும். மன அழுத்தத்தை எப்படி போக்குவது சில யோசனைகள் இப்பதிவில்.

காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

 ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள். காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள். முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்த பின் செய்வதைத் தவிருங்கள்.

சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப்படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள். சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன்?? என்பது போன்றவை.

இதையும் படியுங்கள்:
நமக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை எப்படி பயன்படுத்திக் கொள்வது?
Women to reduce stress...

தவறாய்ப்போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள். செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள். எந்த தொந்தரவும் இன்றி. உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

மேற்கண்ட சுலபமான நாம் அன்றாடம் செய்யக்கூடிய வாழ்வியலை கொஞ்சம் மாற்றி செய்தாலே போதும் மன அழுத்தத்தில் இருந்து முற்றிலுமாக விடுபடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com