

புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்கள் கூறிய வரிகளின் அடிப்படையில் தான் பஜனைகள் எழுதப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக வெளிநாட்டில் இருப்பவர்களுக்காக ஆங்கிலத்திலும் பஜனைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் ஒரு பஜன் இருக்கிறது Why fear?? When I am here... என்று.
இந்த ஆங்கில பஜனையின் பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்த மற்றும் மனதைத் தொட்ட வரிகளாகும்..
இந்த பஜனையின் நான்காவது பேராவில் இருக்கும் வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன..
அந்த வரிகள் என்ன என்று தெரியுமா?
“The Light You See In The Dark Of Night Is That Of God In Man
Find The Light That Is In Your Heart And Reach Thy Promised Land
So Says Baba, Sathya Sai Baba, Sathya Sai Baba, My Lord”.
பாருங்கள் பாபா அவர்கள் எத்தனை அழகாக இந்த வரிகளிலே கூறியிருக்கிறார்.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!
இதன் விளக்கம் என்ன தெரியுமா??
அதாவது, மாலை நேரத்தில் அந்தி சாய்ந்த உடன் இருள் உண்டாக ஆரம்பிக்கிறது. இருட்ட ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே நாம் என்ன செய்கிறோம்? வீடுகளில் விளக்கை போடுகிறோம். பூஜை அறையில் விளக்கை ஏற்றுகிறோம். தெருக்களிலிருக்கும் கம்பங்களில் உள்ள விளக்கையும் போடுகிறோம். அந்த இருட்டு நேரத்திலே இந்த விளக்கில் இருந்து வரும் ஒளி தான் நமக்கு தைரியத்தை அளிக்கிறது. பயத்தைப் போக்குகிறது. மேலும் பிரகாசத்தை தருகிறது. சிறிது நேரத்திற்கு மின்சாரம் தடை பட்டு விட்டால் நமக்கு இருட்டிலிருக்க பயமாக இருக்கும். உடனேயே மெழுகு வர்த்தியை ஏற்றுவோம் அல்லது டார்ச்சை அடிப்போம் இல்லையா??
இதன் மூலமாக நமக்கு உணர்த்தப்படுவது என்ன?ஒவ்வொருவருடைய மனதிற்குள்ளேயும் கடவுள் இருக்கிறார் என்பதாகும். நம்முடைய வாழ்க்கையும் ஒளிமயமாக வேண்டும் என்றால் நமக்குள்ளே இருக்கும் கடவுளை வெளியே கொண்டு வர வேண்டும். அப்படி உள்ளே இருக்கும் கடவுளை நாம் அடையாளம் கண்டு கொண்டு விட்டால் நமக்கென்று கடவுளால் நிர்ணயிக்கப்பட்ட உறுதி செய்யப்பட்ட அந்த இடத்தை நம்மால் எளிதில் அடைய முடியும் என்பதே இந்த வரிகளின் பொருளாகும்.
சரி, நமக்குள்ளே இருக்கும் கடவுளை எப்படி அடையாளம் கண்டு கொள்வது?? அவரை எப்படி வெளியே எடுப்பது?? இதற்காக கோவில் கோவிலாக செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.. நாள் முழுவதும் பூஜை அறையில் உட்கார்ந்து கொண்டு பூஜை செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை. பின்பு என்னதான் வழி??
பாபா அவர்கள் இதற்கும் அழகாக கூறியிருக்கிறார்.. என்ன கூறியிருக்கிறார் தெரியுமா..
இதற்கான பதிலை பாபா அவர்கள் இந்த பஜனை பாடலின் மூன்றாவது para வில் கூறி இருக்கிறார்,
Krishna, Buddha, Jesus, Allah, all Came To This Land
All Of Them Brought The Message Of Love, Love Your Fellow Man
So Says Baba, Sathya Sai Baba, Sathya Sai Baba, My Lord”.
இதை தவிர பாபா எப்போதுமே நமக்கு வலியுறுத்தும் வரிகள் என்னவென்றால்,
Love all! Serve all!
ஆம்! ஒவ்வொரு மனிதனின் உள்ளேயும் கடவுள் இருக்கிறார். எல்லோரையும் நேசியுங்கள், எல்லோருக்கும் சேவையை செய்யுங்கள் என்று அடிக்கடி தன் பக்தர்களிடம் வலியுறுத்துவார்.
அவர் கூறிய படி, நாம் எல்லோரையும் நேசிக்கும் போதும், சேவை செய்யும் போதும் உங்கள் உள்ளே இருக்கும் கடவுளை நீங்கள் அடையாளம் காணலாம். அந்த ஒளியால் உங்கள் வாழ்க்கை பிரகாசமடைவதோடு மட்டுமில்லாமல் அடுத்தவர்களுடைய வாழ்க்கையும் பிரகாசமடையும்.
(பாடல் வரிகள் பாபா பஜனையிலிருந்து எடுக்கப் பட்டது. இதற்கான விளக்கத்தை நான் சுயமாக தொகுத்து எழுதி இருக்கிறேன்)