சக்தி வாய்ந்த வேத பொக்கிஷம் தரும் பாடங்களைக் கற்க ஏங்குங்கள்: ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை!

20-10-1982 அன்று பிரசாந்தி நிலையத்தில் தசரா விழாவின் போது பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா ஆற்றிய அருளுரை!
Sri Sathya Sai Baba
Sri Sathya Sai Baba
Published on
deepam strip
deepam strip

ரிக் வேதத்தில் உள்ள மந்திரங்கள் காலம் காலமாக வெவ்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகளிலும் சமய சார்பற்ற சடங்குகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இந்தத் தனிச்சிறப்பு செயற்கையானது தான், ஏனெனில் வாழ்க்கை மொத்தமுமே ஆன்மீகப்படுத்தப்பட வேண்டியது தான்.

ஒரு பையன் வேதத்தைப் பயில வைக்கப்படும் போதோ, காயத்ரி மந்திரம் அல்லது இதர மந்திரங்களைத ஓதுமாறு செய்யப்படும் போதோ, ஒருவர் ஒரு சந்தோஷகரமான தருணத்தில் ஆசீர்வதிக்கப்படும் போதோ, கடவுளை நினைத்து ஒரு கல்யாணம் சடங்குபூர்வமாக நடத்தப்படும் போதோ, உடலை விட்டு உயிர் பிரிந்தவுடன் ஒரு உடலை புதைக்கவோ அல்லது எரிக்கவோ செய்யப்படும் போதோ ரிக் வேத மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன.

அவை, ஒதுபவர்கள் மற்றும் கேட்பவர்களிடம், நன்மை பயக்கும் சிந்தனைகளை எழுப்பும் பெரும் சக்தி வாய்ந்தவையாகும்.

வேத மந்திரங்களை திருஷ்டியில் பார்த்த ரிஷிகள் அவற்றை ஓதி அனைவருக்கும் அளித்தனர். அவை மொத்தம் 403. அவர்களின் முதல்வர் வசிஷ்டர். அவர் 104 மந்திரங்களை திருஷ்டியில் கண்டார்.

bhaghavan baba
bhaghavan baba

ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!

Image 1 Image 2 Image 3

வேத மந்திரமாக கடவுளின் குரலைக் கேட்க விழைந்த பரத்வாஜரைப் பற்றிய கதை ஒன்று உண்டு. இந்திர லோகத்தை ஆளும் இந்திரனிடம் நீண்ட ஆயுளைத் தருமாறு அவர் வேண்டினார். ஆனால் இந்திரன் பல தடவைக்கும் மேலாக அவர் வேண்டுதலுக்கு இணங்கிய பின்னர் அவரது விடாப்பிடியான தன்மையைக் கண்டு சிரித்து ஒரு மலையைக் காட்டியவாறே, “நீர் இதுவரை கற்றதெல்லாம் இந்த மலைச் சிகரங்களில் இருந்து எடுக்கப்படும் மூன்று கைப்பிடி மண் அளவே தான். வேதத்தை முழுதுமாக உங்களால் எப்படி கற்க முடியும்?” என்றான்.

ஆனால் இதைக் கேட்டு ரிஷி மருளவில்லை. “நான் இந்த பாரத்தை சந்தோஷமாக ஏற்கிறேன்” என்றார் அவர்.

சம்ஸ்கிருத மொழியில் பாரம் என்பது சுமையைக் குறிக்கும். பர என்பது சுமப்பதைக் குறிக்கும். ஆகவே தான் அவர் பரத்வாஜர் என்று அழைக்கப்படுகிறார்.

வாமதேவரும் அகஸ்தியரும் மற்ற இரு குறிப்பிடத்தகுந்த ரிஷிகளாவர். அவர்களது திருஷ்டியினால் 56 மற்றும் 27 சூக்தங்கள் உருவாயின. விஸ்வாமித்திரர் இன்னொரு 56ஐ உருவாக்கினார்.

விஸ்வாமித்திரர் சக்தி வாய்ந்த வளம் தரும் காயத்ரி மந்திரத்தை கொடுத்துதவினார். அவரது பெயரே விஸ்வத்திற்கு (உலகிற்கு நயம் பயக்கும்) நண்பர் என்பதாகும். காயத்ரி மந்திரமே அவருக்கு இந்தப் பெயர் அமையக் காரணமாக அமைந்தது.

ரிக் வேதம் முழுவதுமே இப்படிப்பட்ட ரிஷிகளின் திருஷ்டியினால் உருவான ஒன்றேயாகும்.

இதையும் படியுங்கள்:
வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே இருப்பது ஐந்தே நிமிடங்கள்! - பாபா கூறிய குட்டிக் கதை !
Sri Sathya Sai Baba

கடவுளைக் குறிக்க நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பெயரும், அவரது பேராற்றலை சித்தரிக்க நாம் கற்பனை செய்யும் ஒவ்வொன்றும் ரிக் வேதத்தில் உள்ளன. ராமர், கிருஷ்ணர், சாயி, ஈஸ்வரன், ஆகிய அனைத்துமே நீங்கள் அவற்றின் ஆதாரத்தை உணராவிட்டாலும் கூட, வேதம் விவரிக்கும் புகழின் சாரம் தான்.

மந்திரம் என்றால் அது தன்னை தியானிப்பவரைக் காக்கும் வார்த்தைகள் என்று பொருள். ஆகவே அப்படிப்பட்ட உத்தேசத்துடன்

சக மனிதர்களின் மீதான அன்பைக் கொண்டு உலகிற்காகவும், மூலப் பொருள்களுக்காவும் எது உச்சரித்தாலும், அது புனிதமாகிறது.

ரிக் வேதம் அமைதியின் பாடத்தைக் கற்பிக்கிறது. புகழ்வது என்பது பன்னீரின் வாசனை போல. அது உங்கள் மீது தெளிக்கப்படும் போது அதை ஏற்றுக் கொள்ளுங்கள்; ஆனால் குடித்து விடாதீர்கள். அதாவது அதை ஏற்றுக் கொண்டு மேலே செல்லுங்கள். குறை கூறுவது என்பது ஒரு மருந்து போல. உங்களுக்கு நோய் இருக்கிறதா என்று சோதித்துப் பாருங்கள். இருந்தால் அப்படி குறை சொல்லப்பட்டதை ஏற்றுக் கொள்ளுங்கள். அதன் மூலம் பயனடையுங்கள்.

அமைதி என்பது தெய்வீகமான பண்பாகும்.

மனிதனிடமும் அவனைச் சுற்றியும் உள்ள தெய்வீகத்தை உணர அவனுக்கு உதவுவதே எல்லா வேதங்களின் நோக்கமாகும். அந்த விழிப்புணர்வினால் ரிஷிகள் அடைந்த அமைதியை உங்களுக்காக நீங்கள் பெறுவதை நினைத்துப் பாருங்கள். ஜாதி, குலம், இனம் ஆகியவற்றைத் தாண்டி மனித குலம் முழுமைக்கும் வேத பொக்கிஷம் தரும் பாடங்களைக் கற்க ஏங்குங்கள்.

20-10-1982 அன்று பிரசாந்தி நிலையத்தில் தசரா விழாவின் போது பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா ஆற்றிய அருளுரை!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com