
"ஐயோ, புதுசா யோசிக்கவே முடியலையே!", "நான் யோசிக்கிறதெல்லாம் ஏற்கனவே ஒருத்தர் பண்ணிட்டாரே!" - இந்த மாதிரி ஒரு ‘கிரியேட்டிவ் பிளாக்’ நம்ம எல்லாருக்கும் வந்திருக்கும். ‘ஒரிஜினலா’ எதையாவது உருவாக்கணும்ங்கிற அந்தப் பெரிய பாரம், நம்மள எதுவுமே செய்ய விடாம முடக்கிப் போட்டுடும்.
ஆனா, ஆஸ்டின் கிளியான் எழுதிய "ஸ்டீல் லைக் ஆன் ஆர்ட்டிஸ்ட்" (Steal Like An Artist) புத்தகம், இந்த எண்ணத்தையே உடைக்குது. ஒரிஜினல்னு இந்த உலகத்துல எதுவுமே இல்லை; எல்லாப் படைப்புமே அதுக்கு முன்னாடி இருந்த படைப்புகள்ல இருந்து திருடப்பட்டதுதான்னு இந்த புத்தகம் சொல்லுது.
நல்ல திருட்டு எது? கெட்ட திருட்டு எது?
திருடுறதுன்னு சொன்ன உடனே, அடுத்தவங்க வேலையை அப்படியே காப்பி அடிக்கிறதுன்னு நினைக்காதீங்க. அது கெட்ட திருட்டு. ஒரே ஒரு இடத்திலிருந்து மட்டும் காப்பி அடித்தால், அது திருட்டு. ஆனா, ஒரு நல்ல கலைஞன் பல இடங்கள்ல இருந்து தனக்கு பிடிச்ச விஷயங்களைச் சேகரிப்பான், அதை ஆராய்வான், அதிலிருந்து கத்துக்கிட்டு, எல்லாத்தையும் ஒண்ணா கலந்து தனக்குன்னு ஒரு புது ஸ்டைலை உருவாக்குவான்.
அதுக்கு பேருதான் நல்ல திருட்டு அல்லது இன்ஸ்பிரேஷன். ஒரு மோசமான கவிஞன் எடுத்ததை அப்படியே கொடுப்பான்; ஒரு நல்ல கவிஞன் அதை இன்னும் அழகா மாத்திக் கொடுப்பான். ஜெயிலர் படத்துல வர்ற அந்த டிரக் சீன், ‘தி டார்க் நைட்’ படத்தோட இன்ஸ்பிரேஷன்தான். ஆனா, நெல்சன் அதை நம்ம ஊரு ஸ்டைலுக்கு மாத்தி ஒரு மாஸான சீனா கொடுத்தாரு இல்லையா? அதுதான் நல்ல திருட்டு.
நிறைய பேர் ஒரு விஷயத்தை ஆரம்பிக்கத் தயங்குறதுக்கு சொல்ற காரணம் இதுதான்: "எனக்குன்னு ஒரு ஸ்டைல் இன்னும் வரல, நான் யாருன்னே எனக்கு இன்னும் தெரியல". இதுக்கு பதில் ரொம்ப சிம்பிள். நீங்க யாருன்னு தெரிஞ்சுக்க காத்துட்டு இருக்காதீங்க, வேலையை ஆரம்பிங்க. ஒரு வேலையைச் செய்ய ஆரம்பிக்கும் போதுதான், நாம யாருன்னே நமக்குப் புரிய ஆரம்பிக்கும்.
ஆரம்பத்துல, உங்களுக்குப் பிடிச்ச ஹீரோக்களைப் பார்த்து இமிடேட் பண்ணுங்க, அவங்கள மாதிரி செய்ய முயற்சி பண்ணுங்க. அப்படி முயற்சி பண்ணும்போது, உங்களால அவங்கள மாதிரி நூறு சதவீதம் செய்யவே முடியாது. அந்த இடத்துலதான் உங்களுக்கான தனித்துவம் உருவாகும்.
இது கேட்க விசித்திரமா இருக்கலாம், ஆனா இதுதான் உண்மை. உங்க அன்றாட வாழ்க்கை எவ்வளவு ஒழுக்கமாவும், போரிங்காவும் இருக்கோ, அந்த அளவுக்கு உங்க வேலையில நீங்க கிரியேட்டிவா இருப்பீங்க.
தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு வேலை செய்றது, ஒரு சின்ன ரொட்டீனை ஃபாலோ பண்றது மாதிரி உங்க வாழ்க்கையை ஒரு கட்டுப்பாட்டுக்குள்ள வச்சுக்கிட்டா, உங்க மூளையோட முழு சக்தியும் உங்க கிரியேட்டிவ் வேலைக்கு மட்டும்தான் போகும். அந்த தினசரி முயற்சிதான் ஒரு பெரிய படைப்பை உருவாக்கும்.
இந்த உலகத்துல புதுசா எதையாவது உருவாக்கணும்னா, அதுக்கு நிறைய விஷயங்களை உள்ள சேர்க்கிறது மட்டும் முக்கியமில்லை; எதையெல்லாம் வேணாம்னு ஒதுக்குறோம்ங்கிறது அதைவிட முக்கியம். ஒரிஜினலா இருக்கணும்ங்கிற சுமையைத் தூக்கிப் போட்டுட்டு, உங்களைச் சுத்தி இருக்கிற உலகத்தை ஒரு பெரிய புத்தகம் மாதிரி பாருங்க.
உங்களுக்குப் பிடிச்ச விஷயங்களை எடுங்க, அதை வச்சு விளையாடுங்க, அதை ஒரு புது வடிவமா மாத்துங்க. வேலையைச் செய்யுங்க, அதை மத்தவங்களோட பகிர்ந்துக்கோங்க. அதுதான் ஒரு கலைஞனா மாறுறதுக்கான ஒரே வழி. நீங்க திருடுறதுக்குத் தயாரா?