இன்று பெரும்பாலானோர் நீரிழிவு நோயால் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு சில உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், உடல் நலனை கருத்தில் கொண்டு தவிர்த்து விடுகின்றனர். ஆனால் கீழே கூறும் 5 உணவுகளை நீரிழிவு நோயாளிகள் எவ்வளவு சாப்பிட்டாலும், எந்த நேரத்தில் சாப்பிட்டாலும் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்காது.
உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கை தவிர்த்து கேரட், பீட்ரூட், வெள்ளரி உட்பட அனைத்து காய்கறிகளையும் சாலட் வடிவில் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் இந்த 100 கிராம் காய்கறிகளில் 30 கலோரிகள் இருப்பதோடு, அதில் பைபர், விட்டமின்கள் ஏ, பி, சி, கே, நீர்ச்சத்து, மற்ற ஊட்டச்சத்துகளும் தேவையான அளவு கிடைக்கிறது. மேலும் இதை தயாரிப்பது எளிதாக இருப்பதோடு ஒரு பிளேட் வெஜிடபிள் சாலட் சாப்பிட்டால் 3 மணி நேரத்திற்கு பசிக்காமலும் இருக்கும். ஆகவே நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது.
மோரில் அதிகளவு புரோட்டின் சத்து நிறைந்திருப்பதோடு, 250 மில்லிலிட்டர் மோரில் 90 கலோரிகள் மட்டுமே உள்ளது. அதோடு அன்றாட மனிதனின் கால்சிய தேவையும் பூர்த்தி செய்கிறது. மேலும் மோரில் புரோபயாடிக் அதிகம் இருப்பதால் குடல் ஆரோக்கியத்தை காப்பதோடு அஜீரண பிரச்சனையையும் போக்குகிறது. புளிப்பு இல்லாத மோர் சாப்பிடுவது சிறுநீர் பிரச்சனை உள்ளவர்களுக்கு மருந்தாக கருதப்படுகிறது. ஆகவே எவ்வளவு மோர் சாப்பிட்டாலும் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை ஏறவே ஏறாது.
தக்காளி ஜூஸில் லைகோபின், விட்டமின்கள் ஏ, பி ,சி ,கே போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதோடு தயாரிக்க எளிதாகவும் சுவையாகவும் இருக்கும். 250 மில்லிலிட்டர் தக்காளி ஜூஸில் 30 முதல் 40 கலோரிகள் வரை மட்டுமே உள்ளதால், வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்துவதோடு நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கிறது.
முட்டையின் 6 வெள்ளை கருவில் 25 கிராம் புரோட்டீன்கள் மற்றும் 100-க்கும் குறைவான கலோரிகளே உள்ளன. ஆகையால் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கிறது. கிட்னி பிரச்னை உள்ளவர்களைத் தவிர அனைவரும் எடுத்துக் கொள்ளலாம்.
சோள பாப்கார்னில் நார்ச்சத்து, இரும்பு சத்து, மெக்னீசியம் அதிக அளவில் இருப்பதோடு, கலோரிகளும் மிக குறைந்த அளவே உள்ளன. 3 பெரிய கப் பாப்காரினில் 100 கலோரிகள்தான் இருக்கும். மேலும் பாப்கார்ன் சுவையாக இருப்பதால் எந்த வேளையிலும் சுகர் அதிகமாகும் என்ற எண்ணத்தை கைவிட்டு தாராளமாக எடுத்துக் கொள்ளலாம் .
மேற்கூறிய 5 உணவுகளை நீரிழிவு நோயாளிகள் எவ்வளவு சாப்பிட்டாலும் சுகர் ஏறாது என்பதால் தாராளமாக சாப்பிடலாம்.