குழந்தைகளின் பிடிவாத குணம்: பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

What should parents do?
Children's stubbornness
Published on

பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் தங்கள் பெயர் சொல்லும்படி பெருமைப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள் அதற்குண்டான குணங்களை கல்வியுடன் சேர்ந்து கற்றுத்தருவதும் பெற்றோர்களே.

பள்ளிகளில் ஆசிரியர்கள் ஒரு பகுதிதான் என்றாலும் மீதமுள்ள பெரும்பகுதி பெற்றோர்களின் கையிலேயே உள்ளது. நல்லது கெட்டதை பிரித்துப் பார்ப்பதிலிருந்து நியாயம் அநியாயங்களை தெரிந்து அதை செயல் படுத்துவது என்பது வரை பெற்றோர்களிடமிருந்தே ஒவ்வொரு குழந்தையும் கற்றுக் கொள்கிறது.

பெற்றோர்களிடம் இருக்கும் குணங்களில் பெரும்பாலான குழந்தைகள் கடைப்பிடிப்பது அல்லது பெற்றோர்களால் கவனிக்கப்படாத விஷயமாக இருப்பது பிடிவாதம் எனும் குணம்.

இந்தப் பிடிவாத குணத்தால் அந்த குழந்தை இழப்பது தனது எதிர்கால வெற்றியை என்பது அந்த பெற்றோர் களுக்கு தெரிவதில்லை. நமது குழந்தைதானே என்று அதன் பிடிவாதத்தை அட்ஜஸ்ட் செய்து செல்லும்போது அதன் பின் விளைவுகளை பற்றி எந்த பெற்றோரும் சிந்திப்பதில்லை என்பதுதான் உண்மை. காரணம் அந்த குழந்தை மேலிருக்கும் பாசம். சில சமயங்கள் அதீத பாசம் கூட பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பது புரிந்து கொள்ள வேண்டும்.

அந்தக் குழந்தையின் இடத்தில் எதிர்வீட்டு குழந்தை அல்லது பக்கத்து வீட்டு குழந்தையை பொருத்திப் பார்த்தால் 'அட இந்த குழந்தை எவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறது' என்ற எண்ணம் அதே பெற்றோருக்கு வரும்.

இதையும் படியுங்கள்:
பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாதே: சுயசிந்தனையை மேம்படுத்துவது எப்படி?
What should parents do?

குழந்தைகளின் பிடிவாதத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். வளரவிட்டால் அவர்களுக்கு மட்டுமின்றி அவர்கள் சார்ந்த உறவுகளுக்கும் பிரச்னை எழும் வாய்ப்பு உண்டு.

உதாரணமாக அறிந்த சம்பவம் ஒன்று. மிகுந்த செல்லத்துடன் வளர்ந்த ஒரு சிறுவன் நண்பர்களுக்காக செலவு செய்ய அதிக பணத்தைக் கேட்க தரமறுத்த தந்தையின் திடீர் கோபத்தைத் தாங்க முடியாமல் வீட்டை விட்டு ஓடிப்போனான். இதனால் அந்தப் பெற்றோர் கடைசிவரை அந்தப் பிள்ளையின் நினைவில் வேதனையுடன் வாழவேண்டிய நிலை. அந்த சிறுவனுக்கு என்ன நேர்ந்ததோ?

'குழந்தை பிறந்ததும் சாப்பிட, நடக்க, பேசக் கற்றுத் தருவதைப் போலவே தோல்விகளை சந்திக்கவும் கற்றுக்கொடுங்கள். உதா ரணமாக, குழந்தை சாக்லெட் கேட்டால், அன்பாக, ‘நாளைக்கு வாங்கித் தர்றேன்..’ என்று சொல்லுங்கள். குழந்தை ‘இப்பவே வேணும்..’ என்று அழுதாலும், ‘நாளைதான்’ என்று தெளிவாகச் சொல்லுங்கள். உங்களிடம் உறுதியில்லாவிட்டால், அதன் பிடிவாதம் அதிகரிக்கவே செய்யும்' என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.

பிடிவாதத்துடன் குழந்தை அழுது, ஆர்ப்பாட்டம் செய்தால் எரிச்சலோ கோபமோ கொள்ளக்கூடாது. குறிப்பாக பரிதாபப்படவும் கூடாது. அதை கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டும். சிறிது நேரத்தில் தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பது தெரிந்ததும், குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு, இயல்பாகிவிடும். இதுதான் இயற்கை. ‘பிடிவாதம், குழந்தைகளின் இயல்பான குணம்தான்!’ என்ற எண்ணத்தை விட்டுவிட வேண்டும்.

"எந்தக் குழந்தைக்கு கேட்டதெல்லாம் மிக எளிதாகக் கிடைத்து விடுகிறதோ, அந்தக் குழந்தை, மன தைரியம் குறைந்ததாகவும், தோல்வியை தாங்கிக் கொள்கிற சக்தி இல்லாததாகவும்தான் வளருகிறது. இப்படிப்பட்ட குழந்தைகள்தான், தான் நினைத்த ஏதோ சிறு ஒரு விஷயத்தை அடைய முடியாவிட்டால்கூட மனம் உடைந்துபோய் வாழ்வில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் இழக்கத்தொடங்கி விடுகிறார்கள்" என்கின்றனர் மனவியல் மருத்துவர்கள்.

இதையும் படியுங்கள்:
எச்சரிக்கை: இந்த நபர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்!
What should parents do?

சில பெற்றோர்கள் "நாங்கள் எப்பாடு பட்டாவது எங்கள் குழந்தைகள் விரும்புவதை வாங்கிக் கொடுத்து விடுவோம் என்று பெருமை பேசுவார்கள் . இன்னும் சிலரோ "நாங்க அந்த காலத்தில் கஷ்டப்பட்டதுபோல் எங்கள் பிள்ளைகள் கஷ்டப்பட விடமாட்டோம்" என்று சொல்வார்கள். இரண்டும் எவ்வளவு பெரிய ஆபத்து என்பது தெரியுமா?

ஆகவே பெற்றோர்களே குதிரைக்கு கடிவாளம் போடுவது போல் நம் பிள்ளைகளுக்கு பிடிவாத குணத்துக்கு அணை போட்டு தடுப்பது நமது முதல் வேலை அப்போதுதான் அவர்களின் வாழ்வில் வெற்றி வசப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com