படிப்புல ஆர்வமே இல்லையா? இந்த ஒரு கதை போதும், நீங்க புலி ஆகலாம்!

 reading
reading
Published on

படிப்பது சில சமயம் போர் அடிக்கும், சில சமயம் கஷ்டமா இருக்கும். மார்க் கம்மியா வந்தா மனசு உடைஞ்சு போகும். "ஏன்டா படிக்கணும்?"னு கூட தோணும். ஆனா, படிப்புங்கிறது வெறும் பாடப் புத்தகங்களை படிக்கிறது மட்டும் இல்ல. அது ஒரு பெரிய உலகம். ஒரு மாணவருக்கு படிப்புல ஆர்வம் இல்லைன்னா, அவரோட எதிர்காலமே கேள்விக்குறியாகிடும். அப்படி படிப்புல சுத்தமா ஆர்வம் இல்லாத ஒரு மாணவர், எப்படி திடீர்னு ஆர்வம் கொண்டு, வெற்றியாளரா மாறினார்னு ஒரு சின்ன கதையைப் பார்ப்போம். இது உங்க மனசையும் மாத்தும்.

ஒரு ஊர்ல அரவிந்த்னு ஒரு பையன் இருந்தான். அவன் படிப்புல சுத்தமா ஆர்வம் இல்லாதவன். ஸ்கூலுக்கு போனா போதும்னு இருப்பான். கிளாஸ்ல கவனிக்க மாட்டான், வீட்டுல படிக்க மாட்டான். இதனால மார்க் ரொம்ப கம்மியா வரும். டீச்சர்கள், அப்பா, அம்மான்னு எல்லாரும் அவன திட்டுவாங்க. அவனுக்குள்ள ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துடுச்சு. "என்னால படிக்க முடியாது, நான் ஒரு லூசர்"ன்னு நினைக்க ஆரம்பிச்சான்.

ஒருநாள், அரவிந்த் அவங்க வீட்டு தோட்டத்துல விளையாடிட்டு இருக்கும்போது, ஒரு வயசான தோட்டக்கார மாமாவ பார்த்தான். அந்த மாமா, ஒரு சின்ன செடிக்கு ரொம்ப பொறுமையா தண்ணி ஊத்தி, மண்ணை சரிபார்த்துட்டு இருந்தார். அரவிந்த்க்கு ஆச்சரியமா இருந்துச்சு. "மாமா, இது ஒரு சின்ன செடிதானே, ஏன் இவ்வளவு சிரத்தை எடுத்துக்கிறீங்க?"னு கேட்டான்.

இதையும் படியுங்கள்:
கத்தரிக்காய் சோக்கா - கத்தரிக்காய் பர்த்தா! ரெசிபி - செம்ம டேஸ்ட் தம்பி!
 reading

மாமா சிரிச்சார். "தம்பி, இப்போ இது சின்ன செடிதான். ஆனா, தினமும் தண்ணி ஊத்தி, உரமிட்டு, கலைகளை நீக்கி, வெயிலுக்கும் மழைக்கும் பாதுகாத்தா, ஒரு நாள் இது பெரிய மரமா வளரும். நிறைய பூக்களையும், பழங்களையும் கொடுக்கும். அப்புறம் நிறைய பேருக்கு நிழலையும், சந்தோஷத்தையும் கொடுக்கும்" என்றார்.

இந்த வார்த்தைகள் அரவிந்த் மனசுல அப்படியே பதிஞ்சு போச்சு. "அப்போ படிப்புங்கிறதும் இப்படித்தான் போல!"னு யோசிச்சான். ஒரு செடி வளர எப்படி பொறுமையும், தினமும் கவனமும் தேவையோ, அதே மாதிரிதான் படிப்புலயும். தினமும் கொஞ்சம் கொஞ்சமா படிச்சு, புது விஷயங்களை கத்துக்கிட்டு, புரியாததை திரும்ப திரும்ப படிச்சா, ஒரு நாள் பெரிய மரமா வளர்ற மாதிரி, அவனும் அறிவுல பெரிய ஆளா மாறலாம்னு புரிஞ்சுக்கிட்டான்.

அந்த நாள்ல இருந்து, அரவிந்த் மாற ஆரம்பிச்சான். ஒரு நாளைக்கு அரை மணி நேரம் படிச்சா போதும்னு ஆரம்பிச்சான். புரியலனா டீச்சர்கிட்ட தயங்காம கேட்டான். வீட்டுல சந்தேகங்களை அப்பாகிட்ட கேட்டான். ஒரு வாரம் கழிச்சு, மார்க்ல சின்ன மாற்றம் தெரிஞ்சுது. அது அவனுக்கு ஒரு பெரிய நம்பிக்கையை கொடுத்தது. இன்னும் நல்லா படிக்க ஆரம்பிச்சான். சில மாசங்கள்ல, அவனோட மார்க் உயர ஆரம்பிச்சது. படிப்பு அவனுக்கு சுமையா தெரியாம, ஒரு விளையாட்டா மாறிடுச்சு.

இதையும் படியுங்கள்:
ஆன்லைனில் பி.எட் படிப்பு கல்லூரியை தேர்ந்தெடுக்கலாம்! அரசு அறிவிப்பு!
 reading

மாணவர்களே, படிப்புங்கிறது ஒரு செடிய வளர்க்கற மாதிரிதான். தினமும் சின்ன சின்ன முயற்சிகளை செய்யுங்க. புரியலனா தயங்காம கேளுங்க. பொறுமையா இருங்க. ஒரு நாள் நீங்க பெரிய மரமா வளர்வீங்க, உங்க வாழ்க்கையில வெற்றிகளை அறுவடை செய்வீங்க. படிப்புக்குள்ள இருக்கிற சந்தோஷத்தை அனுபவிக்க ஆரம்பிங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com