ஒரு துளி விஷம் போதும்... உங்கள் மொத்த உழைப்பையும் அழிக்க!

நம்மால் முடிந்தவரை நமது சக்திக்கு ஏற்ப தான தர்மங்களை செய்து வந்தால் அதுவே நமது சந்ததிகளுக்கு நாம் சோ்த்துவைக்கும் மிகப்பொிய அசைக்க முடியாத சொத்தாகும்.
Speech Control Tips
Speech Control TipsAI Image
புவனா நாகராஜன்

கடந்த 1980முதல் கல்கி ,மங்கையர்மலர், தினமலர்,வாரமலர், பெண்கள் மலர், சமையல் குறிப்புகள் தமிழ்நாடு இ பேப்பர் மேலும் சில பத்திாிகைகளில் துணுக்குகள், கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுதிவருகிறேன். தமிழ்நாடு இ பேப்பரில் 50க்கும் மேற்பட்ட கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறேன். எனது கணவரின் உந்துதல் மற்றும் கல்கி குழுமம், மங்கையர்மலர், தினமலர் கொடுத்த ஊக்கம் தொடா்கிறேன்.

Updated on

வாழ்க்கையில் யாரும் உழைக்காமல் உச்சம் தொடவே முடியாது, எதுவும் எளிதில் கிடைக்கவே கிடைக்காது. உழைக்காமல் வரும் உயர்வு நீண்ட நாள் தங்காது.

இறைவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது, அதேபோல இறைவன் தடுத்த விஷயத்தை யாராலும் ஜெயிக்கமுடியாது.

ஆக ஏழை ஏழையாகவும் இருக்கவே முடியாது.

அனைத்திற்கும் சூத்ரதாாி இறைவன் ஒருவனே.

யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல பணக்காரன் திடீரென அதளபாதாளத்திற்கு போவதும், ஏழை உச்சம் தொடுவதும் இயல்பான விஷயமே.

சில விஷயங்களில் நாம் கவனமுடனும் நிதானத்துடனும், வாழ்க்கைப்பாதையின் படிக்கட்டுகளில் காலடியை எடுத்து வைக்கவேண்டும்.

வாழ்க்கையில் பணக்காரன் ஆகவேண்டுமென்றால் உழைப்பாளியாக இருக்கவேண்டும்.

நேரம், காலம், அதிர்ஷ்டம் இவைகளால் முன்னேறமுடியும் என்ற நம்பிக்கையை விட கடின உழைப்பின் மேன்மையை உணர்ந்தாலே வாழ்க்கையில் வெற்றி எனும் இலக்கை அடையமுடியும்.

அதேபோல வாழ்க்கையில் புகழின் உச்சம் தொடவேண்டுமானால் நோ்மை மற்றும் உண்மையை சரிவர கடைபிடிக்கவேண்டும்.

'எந்த நேரத்திலும் எந்த நிலையிலும் எவ்வளவு சோதனையில் நாம் சிக்கினாலும் நோ்மையையும் உண்மையையும் கடைபிடித்து வருவதோடு அது ஒருபோதும் நம்மைவிட்டு விலகாமல் பாா்த்துக்கொள்ளவேண்டும்.

எப்போதும் எந்த நிலையிலும் தாராள மனப்பான்மையை கடைபிடிப்பதே நல்லசெயலாகும் .

அதேபோல தர்மம் தலைகாக்கும் என்ற வரிகளுக்கேற்ப தர்மசிந்தனையுடன் வாழ்வதே நல்லது.

ஆக மெய்யறிவு பெற தர்ம சிந்தனை அவசியம் தேவையானது.

நம்மால் முடிந்தவரை நமது சக்திக்கு ஏற்ப தான தர்மங்களை செய்து வந்தால் அதுவே நமது சந்ததிகளுக்கு நாம் சோ்த்துவைக்கும் மிகப்பொிய அசைக்க முடியாத சொத்தாகும்.

பாவத்தை கையேந்தக்கூடாது, அதேநேரம் புண்ணியத்தையும் சோ்க்க தயங்கவே கூடாது.

அது பலவகைகளில் நமக்கான அழியா சொத்தாகும். இத்தனையையும் நாம் துளித்துளியாக சேமித்து வைத்தாலும் நமது பேச்சில் நிதானமும் அன்பும் கலந்திருப்பதே நல்லது.

இதையும் படியுங்கள்:
யதார்த்தத்தைப் புரிந்துகொண்டால் வாழ்க்கை சிறக்கும்... இதோ சில உண்மைகள்...
Speech Control Tips

அனைவரையும் நமது அன்பாலும் அரவணைப்பாலும் வெல்லமுடியும். அதற்கான கவசம் நம்மிடமே உள்ளது. நாம் வேதனை எனும் கடலில் மூழ்காதிருக்க நமக்கு தேவையே நாவடக்கம் மட்டும்தான்.

அது ஈட்டி மற்றும் அம்பு போல கூா்மையானது, அதை நாம் யாாிடமும் செலுத்தக்கேடாது.

அப்படி நாவடக்கத்தை அடக்க இயலாத போது நமக்கு கிடைப்பது வேதனை எனும் அழியாத மனஅழுத்தமும், கெட்ட பெயரையுமே பரிசாக வழங்கிவிடும். ஆக உழைப்பு நோ்மை, தாராள மனப்பான்மை, தர்ம சிந்தனை, இவை அனைத்தும் நாவடக்கம் இல்லாமல் போனால் ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தது போலவே ஆகிவிடும் என்பதை நாம் எப்போதும் மறக்கவே கூடாது.

ஆக உழைப்பின் மேன்மையை உணர்ந்து உழைப்பவரே உயர்ந்தவர் என்ற கொள்கையோடு வாழ்க்கையில் நெடுந்தூர பயணத்தை தொடருவோம்.

logo
Kalki Online
kalkionline.com