வாழ்க்கை நம்மளை எவ்வளவுதான் கஷ்டப்படுத்தினாலும், காயப்படுத்தினாலும் அதிலிருந்து மீண்டு வருவதும், வராமல் போவதும் நம்மளோட கையில தான் இருக்கு. வாழ்க்கை என்றால் நேராக உள்ள குழாய்க்குள் செல்லும் தண்ணீர் போல் அல்ல.. அதற்கு மாற்றாக கரடு முரடான பள்ளங்களிலும்,மேடுகளிலும் பாய்ந்து ஓடும் நதிநீர் போன்றது..!
நமது வாழ்க்கையின் முன்னேற்றம் நாம் நடந்து கொள்ளும் விதத்திலேயே அமைகிறது..! வாழ்க்கைக்கு தேவையான நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய நல்லொழுக்கங்களையும், நல்ல ஒரு அதிகாரத்தை இந்த சமூகத்தில் பெறவும்,போன்ற பல நல்ல தகவல்களை இந்த, THE 48 LAWS OF POWER என்ற புத்தகம் நமக்கு கூறுகிறது.
இந்த புத்தகத்தை ராபர்ட் கிரீன் என்பவர் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் 48 அத்தியாயங்களில், ஒவ்வொரு அத்தியாயங்களுக்கும் ஒரு நல்லொழுக்க விதி கூறப்படுகிறது. அப்படி இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஒரு சில சிறந்த 20 நல்லொழுக்க விதிகளை இந்த பதிவில் பார்ப்போம்.
1. தலைவரை விட, எப்பொழுதும் அதிகமாக ஒளி வீசாதீர்கள். (Never shine more brightly than the leader.)
2. நண்பர்களிடமோ, பிறரிடமோ கண்மூடித்தனமாக நம்பிக்கை வைக்காதீர்கள். (Don't blindly trust your friends or others.)
3. உங்கள் நோக்கங்களை நிறைவேறும் வரை மறைத்துக் கொள்ளுங்கள். (Keep your intentions hidden until they are fulfilled.)
4. தேவைக்கு குறைவாக பேசுங்கள். (Speak less than necessary.)
5. உங்கள் செயல்கள் மூலம் வெற்றி பெறுங்கள், விவாதத்தின் மூலம் வெற்றி பெறாதீர்கள். (Win through your actions, not through debate.)
6. உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளவதற்கு கோட்டைகளை கட்டாதீர்கள். எனவே தனித்திருத்தல் மிகவும் ஆபத்தானது. (Don't build fortresses to protect yourself. That's why isolation is very dangerous.)
7. எவரிடமும் உங்களை ஒப்படைத்து விடாதீர்கள். (Don't entrust yourself to anyone.)
8. ஓர் ஏமாளியைப் பிடிக்க, நீங்களும் ஓர் ஏமாளி போல் நடியுங்கள். (To catch a cheater, act like a cheater yourself.)
9. சரணடையும் தந்திரத்தை பழகுங்கள், உங்கள் பலவீனத்தை அதிகாரமாக பயன்படுத்துங்கள். (Practice the tactic of surrender and use your weakness as strength.)
10. முடிவு வரும் வரை, நீங்கள் செல்லும் வரை திட்டமிட்டுக்கொண்டே செயல்படுங்கள். (Keep planning and working until you reach the end.)
12. காலம் அறிந்து செய்யும் கலையில், சிறந்து விளங்குங்கள். (Become proficient in the art of timing.)
13. கவனத்தை ஈர்க்கும், பகட்டான காட்சிகளை உருவாக்குங்கள். (Create eye-catching, stylish visuals.)
14. உங்கள் விருப்பப்படி சிந்தியுங்கள். ஆனால் சில நேரம் மற்றவர்களைப் போலும் நடக்க கற்றுக் கொள்ளுங்கள். (Think as you wish but learn to act like others for a while.)
15. மிகவும் முழு நிறைவானவர்களாக எப்போதும் இருக்காதீர்கள். (Don't ever be too perfect.)
16. வடிவம் இல்லாமையை ஒப்பிட்டு பாவனை செய்யுங்கள். (Compare and contrast the absence of form.)
17. மீன் பிடிக்க வேண்டும் என்றால், முதலில் நீரை கலக்குங்கள். (If you want to catch fish, first stir the water.)
18. பிறர் உங்களை அரசனைப் போல் நடத்த வேண்டும் என்றால், முதலில் நீங்கள் அரசனைப் போல் நடந்து கொள்ள வேண்டும். (If you want others to treat you like a king, you must first act like a king.)
19. இந்த மக்களின் கற்பனைக்கும், கனவுகளுக்கும் ஏற்றவாறு நடியுங்கள். (Live up to the imagination and dreams of these people.)
20. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என எதிர்நோக்கும் மனநிலையில் மற்றவர்களை வைத்திருங்கள். உங்கள் செயல்களை எவராலும் கணிக்க முடியாது என்ற பாவனையை வளர்த்துக் கொள்ளுங்கள். (Keep others in a state of anticipation of what you are going to do. Cultivate the impression that no one can predict your actions.)
இது போன்று பல வாழ்க்கைக்கு தேவையான நல்ல விஷயங்களை இந்த புத்தகத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும். நாமும் மேலே கூறிய விதிகளை கடைபிடித்து வாழ்க்கையில் முன்னேறுவோம்..!