

பல நூற்றாண்டுகளாக சில பழக்கவழக்கங்கள் இருந்து வருகின்றன. அதில் ஒன்றான கையால் எழுதும் கலைப்பற்றி காண்போம்.
பலவகை மாற்றங்கள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொன்டுதான் இருக்கும். தொழில்நுட்ப மேம்பாடு அல்லது வளர்ச்சி (Technology developments) நடைப்பெற்று வருவது பலவகை நடைமுறை நன்மைகளுக்கு வழி வகுத்து வருகின்றது என்பது மறுக்க முடியாது.
அதேசமயம் பல பழக்கவழக்கங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டும் வருகின்றன. இன்றும் சிலர் கால்குலேட்டர்களைவிட மனக் கணக்கை உபயோக்கித்தும் வருகிறார்கள்.
தற்பொழுதிய தேவைகளுக்கும், சூழ்நிலைக்கும் எழுதுவதற்கு பயன்படுத்துவது கீ போர்ட் என்ற சாதனத்தை. இது அத்தியாவசமாகிவிட்டது.
அதே சமயம் கையால் எழுதும் முறை காணாமல் போய்க் கொண்டும் இருக்கின்றது.
கேட்பதைவிட, படிப்பதைவிட எழுதிப்பார்ப்பது மனதில், நினைவில் வைத்துக்கொள்ளவும் தேவைப்படும் பொழுது நினைவில் வரவழைத்து பயன்படுத்திக்கொள்வது என்பது பல காலமாக பரீட்சித்துப் பார்த்து வெற்றிகரமாக கண்ட ஒரு முறையாகும்.
கைகளால் எழுதும் பொழுது அனுபவத்தின் காரணமாக தன்னிச்சையாக வாயினால் சொல்லிக்கொள்வது பழகிப்போய் விட்டதால், கையினால் எழுதும் பொழுது தவறுகள் செய்வது நாளடைவில் அரிதாகத்தான் காணப்படும். போகப் போக அதுவும் மறைந்துவிட வாய்ப்புக்கள் அதிகம்.
இது கையினால் எழுதுவதால் ஏற்படும் மிகப்பெரிய பலன்.
மேலும் தொடர்ந்து கையினால் எழுதி வந்தால் மனதளவில் தன்னம்பிக்கை வலுவடைய செய்யும். கையினால் எழுதுவதால் கைக்கு உடற்பயிற்ச்சியும் கிடைக்கும். இதைத் தவிர கையழுத்து சிறப்பாகவும், தெளிவாகவும் மேம்பட செய்யும்.
கையினால் எழுதும்பொழுது தேவைக்கும், சிந்தனைக்கும் ஏற்ப விரைவாகவும், மெதுவாக எழுதவும் பயிற்சி எடுத்துக்கொண்டு அமல்படுத்தவும் முடியும்.
இன்றைய காலகட்டத்தில் கையால் எழுதும் பழகத்தை தொடர தினந்தோறும் குறிப்பிட்ட அவகாசம் ஒதுக்குவது தேவையாகின்றது.
இடைவிடாமல் சந்தர்பங்களை ஏற்படுத்திக்கொண்டு கையால் எழுதுவதை கைவிடாமல் தொடரவேண்டும்.
பொதுவாக பெரும்பாலானோர் வலது கையினால் எழுதுவதை பின் பற்றுவார்கள். இடது கைப்பழக்கம் கொண்டவர்கள் இடது கையினால் எழுதுவதையும் காணலாம்.
தாய் மொழி தவிர பிற மொழிகளை பயின்றவர்கள் அந்த அந்த மொழிகளில் எழுதுவதும் கையெழுத்து சிறப்புபெற உதவுதுடன் அந்த அந்த மொழிகளின் அறிவும் அதிகரிக்க உதவும்.
கையினால் எழுதுவதை தொடர்வதால் சிந்தனைத்திறன் வலுபட செய்வதுடன் தொடர்ந்து எழுதும் திறமையை வளர்த்துக்கொள்ளவும் உதவும்.
கையினால் எழுதும் கலை தனி நபரின் ஆதிக்கத்தில் இருப்பதால் இது சிறப்புப்பெற்று மிளிர அந்த குறிப்பிட்ட தனி நபர் கையினால் எழுதுவதற்கு தேவையான ஆர்வம் காட்டி அதை செயல்படுத்துவது அந்த நபரின் கடமையாகும்.
கையால் எழுதும் வழக்கத்தை கைவிடாமல் பின் பற்றி வந்தால் தேவையான சமயத்தில் கை கொடுக்கும் என்பது உறுதி.
உதாரணத்திற்கு இன்றும் பல சமயங்களில் வங்கி காசோலைகளில் (cheques) கணக்கு வைத்து இருப்பவர்கள் கையொப்பம் இடுவது கட்டாயம் ஆகின்றது. பல சமயங்களில் கையொப்பம் மாறுபட்டுபோய் விடுவதால் அனாவசிய பிரச்னைகள், கால தாமதம், சங்கடங்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியும் சிரமங்களை சமாளிக்கவும் வேண்டியுள்ளது.
கையால் எழுதும் பழக்கத்தை கை விடாதவர்களால் இந்த வகை நிகழ்வுகளை எளிதாக கையாள முடிகின்றது. கையினால் எழுதுவதால் ஏற்படும் மன திருப்தி அவ்வாறு எழுதி அனுபவிப்பவர்களுக்கே புரியும்.