
சொற்கள் வாழ்வில் எவ்வளவு முக்கியம் வாய்ந்தவை என்பதை நாம் சிறு வயது முதலே அறிந்து கொள்ளலாம். எதைக் காக்காவிட்டாலும் நாவை காக்கவேண்டும் என்றார் வள்ளுவர்.
நல்லசொற்கள் நம் வாழ்வின் வசந்தத்தை கொண்டு வரலாம்.
ஏதோ ஒரு சொல் நம் வாழ்வை வெறுமைக்கும் கொண்டு செல்லலாம். சொற்களை சரியாக கையாளத் தெரிந்தவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியான மனிதர்களாக இருக்கிறார்கள்.
நல்ல வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசவும்.
தவிர்க்க முடியாத சூழலில் வெடிப்பாக வார்த்தைகள் வந்து விழுந்தாலும், கோபம் தணிந்ததும் மருந்திடும் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து ஆறுதல் அளிக்க தெரிந்துவிட்டால் இந்த வாழ்க்கையே வரம்தான்.
வார்த்தைகளை சரியாக தேர்ந்தெடுத்து பேசவும்.
வாள்முனை எதிரில் இருப்பவர்களை தான் கொல்லும். ஆனால் நாக்கின் முனை கோட்டை கட்டி வாழ்பவர்கைளையும் வாழ்பவர்களையும் கொன்று குவித்துவிடும் என்று சொல்வார்கள்.
வார்த்தைகள்தான் உறவுகளை உயிர்ப்பிக்கிறது. அதே வார்த்தைகள் தான் உறவுகளை துண்டாடுகின்றன.
கணவன், மனைவி தொடங்கி பெற்றோர் பிள்ளை உறவு வரை வார்த்தைகளை மிகச்சரியாக பயன்படுத்த தெரிந்துகொண்டால் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமைந்துவிடும்.
துரதிஷ்டவசமாக பலருக்கு நல்ல வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசவோ உணர்த்தவோ தெரியவில்லை.
இதற்கு உதாரணம் படித்த இந்த கதை.
இளைஞன் ஒருவன் கடும் கோபக்காரன் கோபம் வரும் போதெல்லாம் கத்தி தீர்த்துவிடுவான் . கோபமாநடந்து கொள்வான் இதை கவனித்த தாய் ஒரு நாள் அவனிடம், ஒரு சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்து, "இனிமேல் உனக்கு ஒவ்வொரு முறை கோபம் வந்து போன பின்பு வீட்டின் புன்புறத்தில் இருக்கும் சுவற்றில் ஒரு ஆணி அடித்துவிடு" என்று சொன்னாள்.
மகனும் அப்படியே செய்தான். முதல் நாள் 10 ஆணி அடித்தான். மறுநாள் ஏழு, அதற்கு மறுநாள் ஐந்து, என ஒவ்வொரு நாளாக ஆணி அடிப்பது குறைந்துகொண்டே வந்தது. ஒரு நாள் ஆணி அடிக்காத நிலையும் வந்தது. உடனே தாயிடம் சென்று அம்மா, இதுவரை 45 "ஆணிகள் அடித்து உள்ளேன். இனி எனக்கு கோவம் வராது என்று நினைக்கிறேன்" என்றான்.
உடனே அம்மா, நல்லது! இனிமேல் உனக்கு கோபம் வராத நாளெல்லாம் ஒவ்வொரு ஆணியாக பிடுங்கிவிடு" என்றாள்.
45 நாட்களில் அடித்த ஆணிகள் அனைத்தும் பிடுங்கப்பட்டுவிட்டன. மகிழ்ச்சியாக இதை தாயிடம் பகிர்ந்துகொண்டான்.
அந்த சுவரை வந்து பார்த்த அம்மா மகனே ஆணிகளை பிடுங்கி விட்டாய். ஆனால் சுவற்றில் உள்ள ஓட்டைகளை என்ன செய்வாய்?
உன் வார்த்தைகளும் இப்படி பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா?" என்று கேட்டாள்.
ஆமாம் அம்மா! என்னை மன்னித்துவிடுங்கள்.
இனி யாரிடமும் இதுமாதிரி கோபத்துடன் வார்த்தைகளை பேச மாட்டேன் என்றான்.
ஆனாலும் காயப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்த நேர்ந்த பிறகு தவறை உணர்ந்து மருந்து தேடவேண்டும், இல்லை என்றால் அது அடிக்கடி மனைதை பாதித்து நினைவுபடுத்துக்கொண்டே இருக்கும்.
காயங்கள் ஆறினாலும் வடுக்கள் அப்படியே இருக்கும். உறவுகளை நிலையாக இருக்க வைத்துக்கொள்ள வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுவோம்! அப்போதுதான் வாழ்க்கை சிறக்கும்.