ஜப்பானியர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் கெய்சென் தத்துவம்... நமக்கும் உதவட்டுமே!

Kaizen philosophy
Kaizen philosophy
Published on

கெய்சென் (Kaizen) என்பதற்கு ஜப்பானிய மொழியில் 'மேம்பாடு' அல்லது 'தொடர் மேம்பாடு' என்று பொருள். அது 'கேய்' மற்றும் 'சென்' எனும் இரண்டு ஜப்பானிய வார்த்தைகளிலிருந்து வருகிறது. 'நன்மைக்கான மாற்றம்' என்ற பொருளைத் தருகிறது. கெய்சென் என்பது உற்பத்தி, பொறியியல், மற்றும் வணிக மேலாண்மைச் செயல்முறைகளில் தொடர்ந்து முன்னேற்றம் அடைவதற்கான ஒரு தத்துவம் ஆகும்.

கெய்செனின் இரண்டு முக்கிய அம்சங்கள்:

1. அதிகரிக்கும் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றம்

2. அந்தப் பணியில் முழு தொழிலாளர்களை ஈடுபடுத்துவது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பான் நாட்டின் தொழிற்சாலைகள் மற்றும் பல அமைப்புகளை மறுபரிசீலனை செய்ய முயற்சிக்கும் போது, கெய்செனுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.

'கெய்சென்' பிரச்சனைகளையும் இடையூறுகளையும் எதிர்மறையாகப் பார்ப்பதில்லை. மாறாக. நிலையான மேம்பாட்டிற்கான வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. மாற்றத்தைக் கொண்டு வர பிரச்சனைகளைக் கண்டுபிடித்து, அறிவித்து அதைச் சரி செய்கிறது கெய்சென். 

கெய்சன் பெரும்பான்மையாகப் பின்வரும் பத்து கொள்கை வழிகாட்டுதல்கள் வடிவத்தில் வழங்கப்படுகிறது.

1. ஒரு செயலை இப்படித்தான் செய்யவேண்டும் என்ற நிலையான எண்ணத்தை விட்டுவிடுங்கள்.

2. குறை கூறாதீர்கள் - மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அப்படி மற்றவர்களை நடத்துங்கள்.

3. நல்லதையே நினைக்கவும் - 'செய்ய முடியாது' என்பதைத் தவிருங்கள்.

4. முழுமையை எதிர்பார்க்காதீர்கள் - 50% சதவித முன்னேற்றமும் நன்மையே.

5. தவறுகளைக் கண்டவுடன் சரி செய்ய முயலுங்கள்.

இதையும் படியுங்கள்:
செயல்திறனை அதிகரிக்கும் ஜப்பானிய கான்பன் (Kanban Technique) டெக்னிக்கை தெரிந்து கொள்வோம்!
Kaizen philosophy

6. மேம்பாடுகளைச் செய்ய நிறையப் பணம் செலவிடாதீர்கள்.

7. பிரச்னைகள் நீங்கள் உங்கள் மூளையைப் பயன்படுத்த வாய்ப்பு கொடுக்கிறது.

8. மூல காரணம் கிடைக்கும் வரை, நீங்கள் குறைந்தது ஐந்து முறையாவது ஏன், ஏன் எனக் கேட்டுக் கொண்டே இருங்கள்.

9. பத்து பேருடைய சிறந்த ஞானம் என்றுமே ஒரு வல்லமை பெற்றவரை விட நல்லதாக இருக்கும்.

10. முன்னேற்றத்திற்கு எல்லையே இல்லை.

என்ன? நாமும் ஜப்பானியர்களின் கெய்சன் தத்துவத்தை நாமும் பயன்படுத்தி முன்னேற்றம் பெறுவோமா...?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com