
தோல்விகளைக் கண்டு துவளாமல் தொடர்ந்து முயற்சித்து வெற்றியை அடைய வேண்டும் என்பதை ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கையில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் தலைசிறந்த அதிபர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவர் அமெரிக்காவின் உள்நாட்டுப் போரின்போது, உடைந்த நாட்டை மீண்டும் இணைத்தமைக்காகவும், கருப்பின மக்களின் அடிமை முறையை ஒழித்தமைக்காகவும், அமெரிக்க பொருளாதாரத்தை சீர்திருத்தியமைக்காகவும் இன்றும் அமெரிக்காவில் நினைவு கூறப்படுகிறார்.
ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக வெற்றியடைந்தாலும், அவர் கடந்து வந்த பாதையில் பல்வேறு தோல்விகளை சந்தித்த பின்னரே, அது அவருக்கு சாத்தியமானது. பல்வேறு தோல்விகளைக் கண்டு, துவண்டு விடாமல், தொடர்ந்து முயற்சித்த ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கை , நம்பிக்கையை இழக்காமல், வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்நோக்குவதற்கு, நமக்கு ஒரு முன் மாதிரியாக விளங்குகிறது.
1816ல் லிங்கனின் குடும்பம் அவர்கள் வசித்த வீட்டிலிருந்து துரத்தப்பட்டது. அதனால் லிங்கன் சிறு வயதிலேயே உழைக்க நேர்ந்தது.
1818ல் அவரின் தாய் மரணமடைந்தார்.
1831ல் வியாபாரத்தில் படுதோல்வி அடைந்தார்.
1832ல் சட்டசபை தேர்தலில் தோல்வியைத் தழுவினார். தன்னுடைய வேலையை இழந்தார்.
1833ல் வியாபாரம் தொடங்க நண்பனிடம் கடன் வாங்கினார். அதே வருடக்கடைசியில் வியாபாரத்தில் திவாலானார். இந்தக் கடனை திரும்ப செலுத்த அவருக்கு 17 வருடங்கள் ஆகின.
1834ல் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1835ல் அவருக்கு மனைவியாக நிச்சயிக்கப்பட்ட காதலி மரணமடைந்தார். இதனால் கடும் மன உளைச்சலை அடைந்தார்.
1836ல் அவர் உடலில் நரம்பு முறிவு பிரச்னை ஏற்பட்டு ஆறு மாதங்கள் படுக்கையிலேயே இருந்தார்.
1838ல் சட்டப் பேரவை நடுவர் தேர்தலில் தோல்வியடந்தார்.
1840ல் நகராட்சி தேர்தலில் தோல்வியடைந்தார்.
1843ல் காங்கிரஸ் மாமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார்.
1846ல் காங்கிரஸ் மாமன்றத் தேர்தலில் வெற்றியடைந்தார்.
1848ல் - காங்கிரஸ் மாமன்றத் தேர்தலில் திரும்பவும் தோல்வியடைந்தார்.
1849ல் நில அலுவலர் பணிக்கான முயற்சியில் தோல்வியடைந்தார்.
1854ல் செனட்டில் தோல்வியடைந்தார்.
1856ல் துணை அதிபர் தேர்தலில் நிற்க முயன்று தோல்வியடைந்தார்.
1858ல் செனட்டில் தோல்வியடைந்தார்.
1860ல் அமெரிக்க அதிபராக வெற்றியடைந்தார்.
1865ல் அமெரிக்க உள்நாட்டுப் போரில் அமெரிக்க படைகளின் வெற்றியில் மகிழ்ந்தார்.
பெரும்பாலும் தோல்விகளையேக் கண்ட லிங்கன், துவண்டுவிடாமல், தொடர்ந்து முயற்சித்த காரணத்தினாலேயே, அமெரிக்க அதிபராகி சரித்திரம் படைத்தார்.
ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கை, தோல்விகள் தற்காலிகமானவை; தொடர்ந்து முயற்சிக்கும் மனிதனுக்கு எதிர்காலம் சிவப்பு கம்பளம் விரிக்குமென்பதை நமக்கும் உணர்த்துகிறது.