

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் என்பதுபோல அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷமாகிவிடுமே!. ஆக எந்த விஷயத்திலும் எதிலும் அளவை மீறாமல் இருப்பது நல்லதே,!
அளவுக்கு மீறிய அன்பு மற்றும் கோபம் செலுத்துவது சிரமத்தையே தரவல்லதாகும் ..
அன்பு தான் இந்த உலகத்தின் அனைத்து விஷயங்களுக்கும் ஜீவநாடி.
பொதுவாக அன்பால் எதையும் சாதிக்கலாம். ஆனால் அதேநேரம் சில கால நிலைகளில் அது அளவை மீறும்போது பல விதமான சிரமங்களை தரும்.
அந்த அன்பானது பதாா்த்தங்களில் போடக்கூடிய உப்பு மற்றும் இனிப்பை போன்றது.
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பதுபோல உப்பு அளவுக்கு அதிகமானால் செய்யப்படும் உணவானது கரித்துப்போய் விடுகிறது.
அதேபோல இனிப்பு என்பதும் அதிகமாக சோ்க்கப்பட்டால் திகட்டி விடுகிறது.
அது போலத்தான் நட்பு மற்றும் குடும்ப உறவுகளில் நாம் பல விஷயங்களில் அளவான அன்பை (தாய், தகப்பன், மனைவி இவர்களைத் தவிர)காட்டுவது நல்லது. அன்புக்கு பிாிவு தான் எதிாி.
அதிகமான அன்பு செலுத்தும்போது அந்த அன்பிற்கு பாத்திரமானவர் ஒரு காலகட்டத்தில் சந்தர்ப்ப சூழலால் பிாிய நோிடும் போது சிலர் தைரியமாக கடந்து போய் விடுகிறாா்கள்.
சில கோழை மனம் கொண்டவர்கள் அந்தப் பிாிவை தாங்க முடியாமல் பல விதமான வேதனைக்கு ஆளாகிவிடுவதும் இயற்கையே!
பொதுவாக மிகவும் பாசம் காட்டி, அன்பு பாராட்டி வளரும் பெண்கள் திருமணம் ஆனதும் தந்தை, தாய் காட்டிய அபரிமிதமான அன்பு காரணமாய் பிாிய நோிடுவதும் பல இடங்களில் நடந்து வருவதும் கண்கூடாய் பாா்க்கும் நிலை.
அதேபோல அதிகமாக அன்பு செலுத்தி மகனை செல்லம் கொடுத்து வளா்த்து, அவனது தேவைகளை அவன் கேட்பதற்கு முன்பாகவே வாங்கிக்கொடுத்து நமது கைக்குள்ளாகவே வைத்திருந்து அவனை தனித்து இயங்கவிடாது வைத்திருப்பதும் பல இடங்களில் அரங்கேறி வருவதும் வாடிக்கையாக உள்ளதே !
அந்த பையனின் எதிா்காலத்தை அவனே தோ்வு செய்யட்டும் என தன்னிச்சையாக முடிவு எடுக்க விடாமல் நாமும் அன்புமிகுதியால் பொத்தி பொத்தி வளா்த்து அவன் தேவைகளை கூட அவனே பூா்த்தி செய்யவிடாமல், நாம் தலையிட்டு தடுத்து எதற்கும் பிறறையே சாா்ந்து வாழும் நிலைக்கு ஆளாக்கி விடுவது பல இடங்களில் நடக்கிற விஷயம் தான்..
இந்த மாதிாி அன்பு செலுத்தி பல இடங்களில் கணவன் மனைவி கருத்து வேறுபாடால் பிாிந்து விடுகிறாா்கள். இந்த பழக்கவழக்கம் சில குடும்பங்களில் தொடர்ந்து இருப்பது நல்லதல்ல.
ஆக அன்பு செலுத்துங்கள், வேண்டாம் என சொல்லவே இல்லை.
அதே நேரம் ‘ஆற்றில் போட்டாலும் அளந்து போடு’ என்ற குறிக்கோளுடன் அன்பு செலுத்துவதே ஆரோக்கியமானதாகும்.
அதேபோலவே
அளவுக்கு மீறிய கோபம் வாழ்க்கையை அழித்து விடும்.
வாழ்க்கையில் மனிதர்களிடம் கோபமானது குடிவரலாம். ஆனால் அதுவே நிரந்தரமாக இருப்பது பலவிதத்தில் நமது வாழ்க்கையை வீணடித்து விடும்.
கோபம் ஒரு ஆலகால விஷம் போல! அது மெல்ல வெளியே தொியாமல் நம்மை, நமது நிம்மதியை கெடுத்து விடும்.
கோபம் அதிகமாக வந்தால் அதை நாம் அடக்கி ஆள வேண்டும். அதற்காக கோபப்படாமல் இருக்க முடியாது. அன்பை அளவோடு செலுத்தி கோபத்தை மூட்டை கட்டி நிதானமாக கடைபிடித்து வாழக்கற்றுக்கொண்டால் நம்மால் எதையும் எளிதில் வெல்லமுடியும்.
ஆக பொதுவாகவே அளவுக்கு மீறிய அன்பும், கோபமும் காட்டாமல் நிதானம் கடைபிடித்து வாழ்வதே சிறந்தது!