நம்மளோட 'மைண்ட் செட்' அதாவது மனப்பான்மைதான் நம்ம வெற்றி தோல்வியைத் தீர்மானிக்குதுன்னு சொல்றாங்க கரோல் ட்வெக் (Carol Dweck), அவங்க எழுதிய 'மைண்ட்செட்' புத்தகத்துல. முக்கியமா ரெண்டு விதமான மைண்ட் செட் இருக்கு: ஒண்ணு Fixed மைண்ட் செட், இன்னொன்னு Growth மைண்ட் செட். வாங்க, அது என்னன்னு பார்க்கலாம்.
சில பேர் நினைப்பாங்க, "எனக்கு இவ்வளவுதான் திறமை, இவ்வளவுதான் புத்திசாலித்தனம், இதை மாத்தவே முடியாது"ன்னு. இவங்கதான் Fixed மைண்ட் செட் கொண்டவங்க. புதுசா எதையாவது முயற்சி பண்ணச் சொன்னா பயப்படுவாங்க. தோத்துட்டா அசிங்கமாயிடும்னு நினைப்பாங்க.
ஒரு விஷயம் கஷ்டமா இருந்தா, உடனே "இது நமக்கு வராது"ன்னு விட்டுடுவாங்க. மாசம் ₹15,000 சம்பாதிக்கிறவர், "நான் அதிகபட்சம் ₹30,000-₹40,000 தான் சம்பாதிக்க முடியும், ஒரு கோடி எல்லாம் நமக்கு சாத்தியமில்லை"ன்னு நினைக்கிறதும் இந்த வகைதான். அவங்க தங்களுக்குன்னு ஒரு எல்லையை வகுத்துக்கிட்டு, அதுக்குள்ளேயே இருந்துடுவாங்க.
சிலர் இருக்காங்க. அவங்க நம்புவாங்க, "நம்ம திறமையையும் புத்திசாலித்தனத்தையும் முயற்சி செஞ்சு வளர்த்துக்க முடியும்"னு. இவங்கதான் Growth மைண்ட்செட் கொண்டவங்க. புது சவால்களைப் பார்த்தா பயப்பட மாட்டாங்க, அதை கத்துக்க ஒரு வாய்ப்பா பார்ப்பாங்க. தோத்துட்டா துவண்டு போகாம, அதுலேருந்து என்ன பாடம் கத்துக்கலாம்னு யோசிப்பாங்க.
கஷ்டப்பட்டு முயற்சி பண்றதை அவங்க பெருமையா நினைப்பாங்க. சில பசங்க கஷ்டமான புதிர்களைத் தீர்க்க முடியலைன்னாலும், "இன்னும் கொடுங்க, கத்துக்கிறேன்"னு ஆர்வமா கேப்பாங்க பாருங்க, அதுதான் Growth மைண்ட் செட்.
நிறைய பேர் IQ ஸ்கோர் அதிகமா இருந்தா வாழ்க்கையில ஜெயிச்சிடலாம்னு நினைக்கிறாங்க. ஆனா, அது முழு உண்மையில்லை. IQ டெஸ்ட்ங்கிறது ஒருத்தரோட பொதுவான புத்திசாலித்தனத்தை அளவிட உதவலாமே தவிர, அவங்களோட விடாமுயற்சி, கத்துக்கிற ஆர்வம், சவால்களைச் சந்திக்கிற தைரியம் மாதிரி விஷயங்களை அது அளவிடுறது இல்லை. வாழ்க்கையில ஜெயிக்கிறதுக்கு இந்த Growth மைண்ட் செட் குணங்கள்தான் ரொம்ப முக்கியம்.
நீங்களோ இல்ல உங்க குழந்தைகளோ எதையாவது சாதிக்கும்போது, "நீ ரொம்ப புத்திசாலி"ன்னு சொல்றதை விட, "நீ நல்லா முயற்சி செஞ்சிருக்க, கஷ்டப்பட்டு உழைச்சிருக்க"ன்னு அவங்க முயற்சியைப் பாராட்டுங்க. இது அவங்களை இன்னும் முயற்சி செய்யத் தூண்டும்.
கஷ்டமான விஷயங்களைப் பார்த்தா ஓடாம, அதை எப்படிச் செய்யலாம்னு யோசிங்க. சின்னச் சின்னதா முயற்சி பண்ணிப் பாருங்க.
தப்பு பண்ணிட்டா, அதுலேருந்து என்ன கத்துக்கிட்டோம்னு பாருங்க. அடுத்த தடவை எப்படி சரியா செய்யலாம்னு யோசிங்க.
முன்னாடி உங்களுக்கு வராத, ஆனா இப்போ கத்துக்கிட்ட விஷயங்களை நினைச்சுப் பாருங்க. "அப்போ முடியல, ஆனா இப்போ முடியுதுல்ல!" அப்படிங்கிற எண்ணம் உங்களுக்கு நம்பிக்கை கொடுக்கும்.
நம்மகிட்ட இருக்கிற திறமை கல்வெட்டு மாதிரி மாறாதது இல்லை. அது ஒரு செடி மாதிரி. சரியா கவனிச்சு, முயற்சி செஞ்சா அதை வளர்க்க முடியும். நீங்க Fixed மைண்ட் செட்ல இருந்தாலும் பரவாயில்லை, இப்போலேருந்து Growth மைண்ட் செட்டுக்கு மாற முயற்சி பண்ணுங்க. உங்க வாழ்க்கையில நீங்களே எதிர்பார்க்காத மாற்றங்களைக் கொண்டு வர முடியும்.