உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகும் ரகசியம்: நிம்மதியாக வாழ என்ன செய்யவேண்டும்?
மனித வாழ்வில் பல சோதனைகள், பல சாதனைகள் என அத்தனை விஷயங்களையும் கடந்து வாழ்வதுதான் எதிா்நீச்சல் போடும் வாழ்க்கை. பிறப்பின் தன்மை இறைவனால் கொடுக்கப்பட்டது.
அந்த வாழ்க்கையை நல்ல விதமாக நாம் வாழ்ந்து காட்டவேண்டும். அதுபோல நாம் சிறகடிக்க தொடங்கு முன்பாகவே, சிறகுகளை வெட்டுவதற்கு என்று ஒரு கூட்டம் சூழ்ந்துள்ள நயவஞ்சக உலகமிது.
நாம்தான் சூதானமாக நடந்துவாழ்வின் தன்மை தறிந்து நல்லது கெட்டதை சீா்தூக்கிப்பாா்த்து வாழவேண்டும். ஆடிமாதத்தில் விதையை விதைத்தால்தான், ஐப்பசியில் அறுவடை செய்யலாம்.
அதை விட்டுவிட்டு ஐப்பசியில் அரிவாளோடு சென்றால்? அது நமது அறியாமையின் வெளிப்பாடே!
ஆக, படிக்க வேண்டிய நேரத்தில் படித்துமுடித்து விடுங்கள், வருமானம் ஈட்ட வேண்டிய நேரத்தில் வருமானத்தை ஈட்டிவிடுங்கள், சோம்பல் தவிா்த்து உழைப்பின் தன்மை உணர்ந்து பணத்தின் அருமை புாிந்து அதை எப்படி சேமிக்கலாம் என்ற வழிமுறைகளோடு திருமணம் செய்ய வேண்டிய நேரத்தில் இல்லறத்தைத் தொடங்குங்கள்.
அளவோடு பெற்று வளமோடு வாழும் நிலையே நல்லது. அப்படியே ஒன்றிரண்டு வாாிசுகள் வந்தால் ஒரு குறிப்பிட்ட வயது வரை உங்களோடு இருக்கட்டும். செல்லம், அன்பு, பாசம், என்ற பெயரால் அவர்களை பொத்திப்பொத்தி வளா்க்காதீா்கள்.
அவர்களை கண்கானிப்பதோடு படிப்போ, வேலையோ அவர்களை அவர்கள் போக்கில் நல்ல அறிவுரை சொல்லி முன்னேறவிடுங்கள்.
காலத்தில் அவர்கள் தேவையை பூா்த்தி செய்து அவர்களது வாழ்க்கையை அவர்களாகவே வாழும் நிலைக்கு அவர்களைத் தயாா்படுத்துங்கள்.
நம்மிடம் பணம் நிறைய வரும்போது அதை நம்மிடமிருந்து பங்குபோட்டுக்கொள்ள உாிமையோடு வரும், உறவு, மற்றும் நயவஞ்சக நட்புகளை அடையாளம் காணுங்கள். நிா்தாட்சன்யம், தயவு தாட்சன்யம் பாா்க்கவேண்டாம்.
உங்கள் உழைப்பில் வந்த பணத்தை மனைவியுடன் கலந்து பேசி உங்கள் இருவரின் வயோதிக காலத்தின் பலவித தேவைகளுக்கு பயன்படும் வகையில் சேமித்து வையுங்கள். ஆடம்பர செலவு வேண்டாம். பணம்தான் உலகம். குணமெல்லாம் பிறகுதான்.
தெய்வத்திடம் வேண்டுகோள் வைத்து, மனைவிக்கு நீங்களும், உங்களுக்கு மனைவியும் என்ற கருத்தொருமித்த அன்போடு வயோதிகத்தை நகர்த்துங்கள். யாா் கையையும் எதிா்பாா்காதீா்கள். பணம் இருந்தால் கைகொடுக்கும் நயவஞ்சக திருட்டு உலகம்தான் இது. அதே நேரம் பணம் இல்லை என்றால் குலுக்கிய கையை உதறிவிடும் உலகமும் இதுதான். நிலைமாறும் உலகு, மற்றும் உறவு.
மனஅமைதிக்கு நட்பு, சொந்தங்கள் வேண்டாம். கணவன் மனைவி புாிதல், தெய்வ தரிசனம், நடைப்பயிற்சி, யோகா, பத்திாிகை படித்தல், மெடிட்டேசன் சரிவிகித உணவு தேவையான மருத்துவ பரிசோதனை, நல்ல சிந்தனை, ஆழந்த உறக்கம், இப்படியாக பொழுதைக் கழியுங்கள்.
வயோதிகம் ஒரு வரம் அல்ல. பணம் இருந்தால் நெருங்கும் பந்தங்கள் பசப்பு வாா்த்தை பேசும், வந்து எட்டிப்பாா்க்கும், அதே நேரம் பணம் இல்லை என்றால் அதே நட்புகள், உறவுகள், பேசுவதை குறைத்துக்கொள்ளும். வந்து போவதை நிறுத்திக்கொள்ளும்.
இது விஷயத்தில் நாம்பெற்று, செல்லம் கொடுத்து வளா்த்த வாாிசுகளும் விதிவிலக்கல்ல.
எனவே பணத்தின் தன்மை உணர்ந்து காலத்தே சேமிக்காவிட்டால் ஐப்பசியில் அறுவடையை செய்ய இயலுமா? இதைத்தான் ஒரு அறிஞர் "ஒரு சாலையின் ஆரம்பத்தை சரியாக தோ்ந்தெடுப்பவன்தான் தன் இலக்கை சரியான முறையில் அடைகிறான்’’ என சொல்லியிருப்பாா்.
ஆக, நமக்கு நாம்தான் துணை என்ற கோட்பாடுகளோடு வாழ்வதே சாலச்சிறந்தது!