
முடியும் என்று உளமாற நம்புங்கள்
மேற்கு நோக்கிப் போனாலும் இந்தியாவை அடையலாம் என்று ஆழமாக நம்பினான் கொலம்பஸ். அந்த நம்பிக்கை உங்களுக்கு இருக்கவேண்டும்.
சீக்கிரம் முடிவெடுங்கள்
முடிவு எடுப்பதில் தயங்காதீர்கள். அற்ப விஷயத்துக்கெல்லாம் யோசித்தே மூளையை குழப்பிக்கொள்ளாதீர்கள்.
நேரத்தை வீணாக்காதீர்
நேரம் போனால் வராது. நேரத்தை வீணாக்கினால் சாதனை தள்ளிப்போகும். எனவே ஒவ்வொரு நாளையும் சாதனைக்காக செலவிடுங்கள்.
சுற்றி நடப்பதை கவனியுங்கள்
வெற்றியாளர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள். தோல்வியாளர்கள் ஏன் தோல்வியுற்றார்கள் என்று கவனியுங்கள். சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதனிடமும், கடந்துபோன வரலாற்றிலும், நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளிலும் எவ்வளவோ கற்கலாம்.
வித்யாசமான அணுகுமுறை
உங்கள் சிந்தனை பார்வை இவற்றில் வித்யாசம் புகுத்துங்கள். ஆப்பிள் பழம் கீழே விழுகிறது. மேலே ஏன்போகவில்லை என்று சிந்தித்த ந்யூட்டன் புவிஈர்ப்பை கண்டுபிடித்தான். நீராவியால் இயந்திரங்களை இயக்க முடியும் என்று ஜேம்ஸ் வாட் உணர்த்தினார். கிடைத்த ஒரு பழத்தை பிள்ளைகளுக்குத் தர போட்டி வைத்தார் சிவபெருமான். அதில் வித்யாசமாக சிந்தித்த வினாயகர் வெற்றி பெற்றார்.
நிலையான மனதைக்கொள்ளுங்கள்
பெரிய லட்சியம் உள்ளே இருக்கும்போதே சின்னச்சின்ன லட்சியங்களில் மனதை செலுத்தாதீர்கள். புலிவேட்டைக்குப் புறப்பட்ட வேடன் மானைக்கண்டு பாதை மாறலாமா?
விமர்சனத்தை புறக்கணியுங்கள்
ஊக்கம் வருபவர்களைவிட கேலி செய்பவர்ளே அதிகம் ஊரார் ஆயிரம் சொல்வார்கள். உங்களுக்கு சொந்த புத்தி இருக்க வேண்டும். விமர்சனங்களுக்கு காது கொடுக்காதீர்கள்.
மனிதன் சிந்தனை
சிந்திக்கிறேன் என்று குழப்பிக்கொள்ளக் கூடாது. சிந்தனையின் முடிவில் தீர்வு தெரியவேண்டும். சிந்தனை தெளிவான தீர்மானத்தில் முடியவேண்டும். அதைத் தொடர்ந்து செயல் பிறக்க வேண்டு. செயல் எதிர்பார்த்த பலனை விரைவில் தரவேண்டும்.
பேச்சு
பயன் தருவது எது? பயன் தராதது எது? பேசிப் பேசி நேரத்தையும் காலத்தையும் வீணடிக்கும் பழக்கத்தை விடவேண்டும்.
செயல்
செயல் ஒன்றுதான் விளைவைத்தரும். கருத்து செயல்வடிவம் பெறாத வரை எந்தப் பயனும் விளையப் போவதில்லை.
யாரையும் சார்ந்து இருக்காதீர்கள்
அது அடிமைத்தனம். யாரையும் நம்பியிருக்காதீர்கள். அது முட்டாள்தனம். யாருக்காகவும் காத்திராதீர்கள். அது சோம்பேறித்தனம்.
மேற்கூறியவற்றை கவனத்தில் வைத்தால் உங்கள் குறிக்கோள் நிச்சயம் வெற்றிதான்.