சாதனையாளர்களின் 5 சக்சஸ் மந்திரங்கள் இவைதான்!

motivation image
motivation imageImage credit - pixabay.com

நீங்களும் அல்லது உங்களுடன் இருக்கும் நபரோ எவரேனும் வெற்றியை எளிதில் அடைந்திருக்கலாம். அந்த வெற்றி மற்றவர்கள் பார்வையிலிருந்து பார்க்கும்பொழுது சிலருக்கு அதிர்ஷ்டமாகத் தோன்றும், சிலருக்குத் திறனால் ஏற்பட்ட வெற்றியாகத் தோன்றும், சிலருக்கு உழைப்பால் கிடைத்த வெற்றியாகத் தோன்றும்.

ஆனால், அவர்கள் இதை வைத்து மட்டும் வெற்றி பெற்றிருப்பார்களா என்றால் சந்தேகம்தான்? அதற்குக் காரணம் பழக்கம். ஒரு செயலைத் தொடர்ந்து செய்யும் பொழுது அது பழக்கமாக மாறி நம் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். அதுவே, வெற்றியாகவும் சாதனையாகவும் மற்றவர்களுக்குத் தெரியும். அப்படிச் சாதனையாளர்கள் பயன்படுத்திய 5 பழக்கங்களைப் பற்றி பார்ப்போம்.

1.அதிகாலையில் எழுபவர்கள்:

எல்லாச் சாதனையாளர்களும் அதிகாலையில் எழுந்திருக்கக் கூடிய பழக்கத்தை வழக்கமாகக் கொண்டவர்களாக உள்ளனர். இதற்குக் காரணம் அதிகாலையில் எழுபவர்களுக்கு ஒரு நாளில் இரு நாள் அளவு நேரம் கிடைக்கும். அதனால் அவர்கள் திட்டமிட்டதை விட அதிகமான வேலைகளை அன்றைய தினத்தில் முடிக்க முடியும்.

2. உடல் ஆரோக்கியத்தைப் பேணுதல்:

எல்லாச் சாதனையாளர்களும் உடற்பயிற்சி செய்கிறார்களா என்றால் நமக்குத் தெரியாது. ஆனால் அனைவரும் தங்கள் உடலின் மீது கவனமாக உள்ளனர் என்பது மட்டும் நன்றாகத் தெரியும். அதற்கான உணவு முறைகளையும் சரியான தூக்கத்தையும் சரியான நீரையும் அவர்கள் அருந்தி தங்கள் உடலை நன்றாகப் பார்த்துக் கொள்கின்றனர்.

3. படிக்கும் பழக்கம் உடையவர்கள் :

சாதனையாளர்கள் அனைவரும் வாசிக்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர். புத்தகத்தை வாசிப்பது என்பது அவ்வளவு எளிதானதோ கடினமானதோ அல்ல. வாசிப்புப் பழக்கம் கவனத்தை ஒருமுகப்படுத்தி சிந்தனையைத் தூண்டும் ஒரு செயல் கிட்டத்தட்ட அது ஒரு தவம் போல். அந்தப் பழக்கம் உடையவர்கள் ஏதாவது ஒரு துறையில் சாதனையாளர்களாகக் கண்டிப்பாக இருப்பார்கள்.

4. நேரத்தை நிர்ணயிப்பவர்கள்:

சாதனையாளர்களுக்கு மிக முக்கியமான பணிகளை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்வது மற்றும் தங்கள் பணிகளின் அவசரம் மற்றும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க முதலில் கவனம் செலுத்துவது எப்படி என்று தெரியும்.

இதையும் படியுங்கள்:
பார்த்தவுடன் வருவதும்... புரிதலில் வருவதும்...
motivation image

5. தொழில்நுட்பச் சாதனங்களுக்கு அடிமையாகாதவர்கள்:

சாதனையாளர்கள் காலையில் தொலைப்பேசியை அணுகும் பழக்கத்தை முறித்துக் கொள்வார்கள். தவறவிட்ட அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் சமூக ஊடக ஊடகங்களில் மூழ்குவதற்குப் பதிலாக, எழுந்த பிறகு குறைந்தபட்சம் 30 நிமிட தொலைப்பேசி பயன்படுத்தாமல் நேரத்தை அவர்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வார்கள். வேலை அழுத்தங்கள் அல்லது சமூக ஊடகங்களின் செல்வாக்கு ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, கட்டுப்பாடு மற்றும் சுதந்திர உணர்வை வளர்க்கும் வகையில் நாள் முழுவதும் இருக்க இது அவர்களை அனுமதிக்கிறது.

ஒருவர் சாதனையாளராக ஆக வேண்டுமெனில் இது மட்டுமின்றி பல பழக்க வழக்கங்கள் உள்ளது. அதில் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துப் பயன்படுத்தி நீங்களும் ஒரு சாதனையாளராக மாறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com