
மனிதன் பொருள் வடிவானவன். ஆன்மிக மனோதத்துவ மானவன். தனித்தன்மை உடையவன். சமுதாய உணர்வு கொண்டுள்ளவன்.
அவனது குணங்களைப் சீர்திருத்தியமைக்க அவனது பொறுப்புகளையும் மனிதாபிமான குணநிலைகளையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வது அவசியம்.
ஒருவனது குணாதிசயங்களை தீவிரமாக ஆராய்ந்து கண்டறிந்து கொண்டு சிகிச்சை அளிப்பதன் மூலம் அவனது கூச்சத்தையும் தாழ்வு மன்ப்பான்மையையும் சீர்திருத்தி அமைக்க முடியும்.
அவன் அவைகளின் தாக்குதல்களால் எந்த நிலையில் அவதியுற்றுக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து கொள்வதன் மூலம் அவனைப் பற்றிய தவறான கணக்கீட்டை மாற்றி அமைத்துகொள்ள முடியும்.
காரணங்களைப் பிரித்து ஆராயும்போது கற்பனைகள் மற்றும் லட்சியக் கனவுகளை ஒதுக்கி, உண்மையான காரணத்தை அறிய முடியும்.
ஒருவனின் குணத்தை அறிந்து கொள்ளுவதென்பது அவனது மனத்தில் பதிந்திருக்கும் உருவங்களைக் பார்த்துத் தெரிந்து கொள்ளுவதாகும். ஏனெனில் அவன் பிற சிறிய அசைவுகளைக்கூட அவனது மனதில் பெரிய பிம்பமாக பதித்துக் கொண்டிருக்கக்கூடும்.
அவனது தன்முனைப்பான பிடிவாதத்தை நோக்கும் பொழுது அவற்றின் காரணமற்ற தன்மைகள் , தேவைகள், பொய்யான பாவனை, மமதை, குழப்பமற்ற பயம் ஆகியவற்றை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.
மனோதத்துவ உபாதைகளான கூச்சமும் தாழ்வு மனப்பான்மையையும் வெளித்தோற்ற அறிகுறிகளால், இதன் காரணத்தை அறிவிப்பதில்லை. பொய்யான ஆழ்ந்த உள்ளுணர்வுகள்தான் வெளிப்புற அறிகுறிகளை உருவாக்குகின்றன.
உள்ளுணர்வைத் தெள்ளத் தெளிய அறிந்து கொள்கையில் அவற்றை விலக்குவது சுலபமாகிறது.
அவற்றை விலக்க முயற்சி புரியாவிடில் அந்த தடை தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும்.
கூச்சம் தீயின் மேல் சூழ்ந்துள்ள புகையைப் போன்றது. தீயை அணைக்காமல் புகை வருவதைத் தடுக்க முடியாது. ஆகவே கூச்சத்தில் வெளிப்புற அறிகுறிகளை மட்டும் அகற்றிவிட எண்ணுவது தீயை அணைக்காமல் புகையை விரட்ட முயற்சிப்பது போலாகும்.
எனவே கூச்சத்தை வெற்றிட ஒருவன் தன் உண்மை குணங்களையும் அதன் தன்மை நிலைகளையும் அறிந்து கொள்வது அவசியமாகிறது.
ஒரூவரை முழுமையாக அறிந்து கொள்ளாமல் கூச்சத்தை யும் தாழ்வு மனப்பான்மையும் விலக்கிவிட முடியும் என்பது மிகவும் கடினமானதாகும்.