சிந்தித்து செயல்பட வேண்டும் ஏன் தெரியுமா?

a woman thinking something
think
Published on

டவுள் மனிதர்களுக்கு நல்லது எது, கெட்டது எது? என்பதை பிரித்து அறிந்து கொள்வதற்காகவே ஆறாம் அறிவை கொடுத்திருக்கிறார். எனவே, எந்த செயலை செய்தாலும் நன்றாக சிந்தித்து நல்லதையே செய்ய வேண்டும். இதை தெளிவாக புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.

ஒரு ஆசிரமத்தில் குரு ஒருவர் சிஷ்யர்களுக்கு பாடம் நடத்திக் கொண்ருந்தார். ‘நாம் எப்போதும் நல்லதையே நினைக்க வேண்டும், எல்லோருக்கும் நல்லதையே நினைக்க வேண்டும்’ என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு சீடன் எழுந்து, ‘குருவே! நல்லது, கெட்டது இது இரண்டையுமே கடவுள்தானே படைத்தார். எனவே, நாம் நல்லது செய்யாமல் கெட்டது செய்தால் என்ன?’ என்று கேட்டாராம். அதற்கு குரு அப்போது எந்த பதிலும் சொல்லாமல் பேசாமல் சென்று விட்டார்.

அன்று இரவு படுப்பதற்கு முன்பு எல்லா சிஷ்யர்களுக்கும் பால் கொடுக்கப்பட்டது. அப்போது குரு வேலையாட்களிடம் சொல்லி அந்த கேள்வி கேட்ட சிஷ்யனுக்கு மட்டும் பாலுக்கு பதில் சாணியை கரைத்துக் கொடுக்க சொன்னார்.

எல்லோருக்கும் பால் கொடுத்துவிட்டு, தனக்கு மட்டும் சாணி கொடுக்கப்பட்டிருப்பதை பார்த்த அந்த சிஷ்யனுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. உடனே குருவிடம் சென்று, ‘குருவே! இது என்ன நியாயம்? எனக்கு மட்டும் ஏன் சாணியைக் கொடுத்தீர்கள்?’ என்று கோபமாக கேட்டார்.

இதையும் படியுங்கள்:
சரியாக சிந்திக்கத் தெரியாத ஒரு ஆணின் 7 அறிகுறிகள்!
a woman thinking something

அதற்கு குரு சிரித்துக்கொண்டே, ‘பால், சாணி இவை இரண்டையுமே பசுதானே கொடுக்கிறது? அது இரண்டில் எதைக் குடித்தால் என்ன?’ என்று கேட்டார். இதை கேட்டதும்தான் சிஷ்யனுக்கு குரு ஏன் இவ்வாறு செய்தார் என்பது புரிந்தது. சிஷ்யனுக்கு தன் கேள்விக்கான பதில் விளங்கியது.

இந்தக் கதையில் சொன்னதுப்போலத்தான். எது சரி, எது தவறு என்பதை பிரித்து பார்த்து தெரிந்துக் கொள்வதற்காகவே அறிவு இருக்கிறது. அதை பயன்படுத்தி எதை செய்தால் மற்றவர்களுக்கு நன்மை பயக்கும், எதை செய்தால் தீமையில் முடியும் என்பதை சிந்தித்து நல்வழியில் செல்லக் கற்றுக்கொள்ளவேண்டும். இதை தெளிவாக புரிந்துக்கொண்டால், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். எனவே, சிந்தித்து செயலாற்றுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com