வாழ்க்கை வாழ்வதற்குத்தான் அதுக்காக எப்படி வேண்டுமானாலும் வாழலாமா?
வாழ்க்கை என்பது வாழ்ந்து காட்டத்தான், அதே நேரம் சிலருக்கு, கரடு முரடாகவும், சிலருக்கு இலகுவாகவும், அமைந்துவிடுகிறது.
இப்படித்தான் வாழவேண்டும் என்பதுதான் வாழ்க்கை! எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கையல்ல!
சில நெறிமுறைகளை நமக்கு நாமே வகுத்துக்கொள்ள வேண்டும்! பொதுவாக சமுதாயத்தில் நல்ல ஒழுக்கத்தோடும், அறநெறியை கடைபிடிப்பவராகவும், நோ்மையானவராகவும், வாழ்வதே நல்ல பெயரை ஈட்டித்தரும்!
அநேகமாக நமக்காக நாம் வாழவேண்டுமே தவிர அடுத்தவருக்காக வாழக்கூடாது! தயாள குணம், ஈகை மனப்பான்மை, இவைகளை உள்ளடக்கி வாழ்வதும் அதில் ஒரு அங்கமே!
மரியாதை தானாக கிடைத்துவிடாது! அதை நமது கண்ணியமான பழக்க வழக்கத்தால், உருவாக்க வேண்டும்! பிறரின் கருத்துக்களை செவிமடுத்துக் கேட்க வேண்டும்!
சாதுா்யம் நமக்கு மட்டுமே சொத்து அடுத்தவருக்கு இல்லையே என எள்ளி நகையாடாதீா்கள்.
நமக்கு பொிய எதிாி யாா்தொியுமா? நமது வாயும், பொய்யும்தான், பொய் சொல்லாமல் இருக்க முடியாதுதான், அதற்காக அதுவே வாழக்கையாகவும் வாடிக்கையாகவுமகடைபித்தல் நல்லதல்லவே!
நான் என்ற அகம்பாவம், கேன்சர் நோய் போல, அது நம்மை மெல்ல மெல்ல கொன்றுவிடும், பெற்றோா்களை மதிப்பதும் அடுத்தவர் உணர்வுகளை புாிந்து கொள்வதும் நமக்கு ஒரு கவசம் போன்றது.
சரியான திட்டமிடல் வேண்டும், திட்டமிடாத வாழ்க்கை இனிக்காது. ஆற்றில் போட்டாலும்அளந்து போடு என்பாா்கள் பொியவர்கள்.
உலகம் ஆயிரம் சொன்னாலும் நமக்கு நாமே நீதிபதி என்பது போல, எங்கும் அமைதி எதிலும் அமைதி என அடுத்தவர்கள் மனது நோகாமல் எடுத்தேன் கவிழ்த்தேன், என இல்லாமல் யாதாா்த்தம் புாிந்து கடுஞ்சொல் தவிா்த்து, அனைவரிடமும் நட்பு , அன்பு பாராட்டி வாழவேண்டும்!
ஒருவருக்கு ஒருவர் பகைமையை வளா்த்துக்கொள்ளாமல் நிதானம் தவறாமல் வாழப்பழகிக்கொள்ள வேண்டும்!
சில சமயங்களில் வாழ்க்கை முள்ளில் போட்ட சேலையாக மாட்டிக்கொள்ளும்.
அதை லாவகமாக சேலையும் கிழியாமல், கையிலும் முள் குத்தாமல் எடுப்பதுபோல நிதானத்திற்கு முதலிடம் தந்து பொறுமை காக்க வேண்டிய இடத்தில் பொறுமை காத்து பெருமைபட வாழவேண்டும் .
தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் என்ற பேராசையில் நெல் விளையும் நாற்றுகளை கட்டுகட்டாக நடுதல் தவறுதானே, பிாித்துப்பிாித்து நடவு நட்டால்தானே சரிவர விளையும்.
அதுபோலத்தான் பேராசை குணம் தவிா்கப்படவேண்டும்! அடுத்தவர் வளா்ச்சி கண்டு பொறாமைப்படக்கூடாது. அவர் எவ்வாறு முன்னேற்றம் கண்டாா் எப்படியெல்லாம் உழைப்பின் தன்மை அறிந்து உழைத்து முன்னேறினாா் எனப்பாா்க்கவேண்டும்.
நமது நிழல் நம்மீதே என்பது போல நமது பொறாமை நமது காலடியில்தான், விசாலமான, நயவஞ்சகமில்லாத பழக்க வழக்கங்கள் நமது மதிப்பை உயர்த்தும் என்பதே தாரக மந்திரமாக கடைபிடிக்க வேண்டும்.
பொய், பித்தலாட்டம், அடுத்துக்கெடுத்தல், அடுத்தவர் சொத்தை கபளீகரம் செய்தல், நாக்கில் நரம்பில்லாமல் பேசுதல், சந்தர்பத்திற்கு தகுந்தாற்போல மாறாதிருத்தல் இவைகளே நான் அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய மூல மந்திரம் இப்படி எல்லோக்கும் நல்லவராய் ஏழு பிறப்பிலும் தீமை கடைபிடிக்காதவராய் வாழ்வதே நல்ல வாழ்க்கையின் அடையாளமாகும்.
வாழ்ந்து காட்ட வேண்டும் நெறிமுறைகளோடு வாழ்வதே சிறப்பானது. கிடைத்த வாழ்க்கை இறைவன் தந்தது. இறை நெறி கடைபிடித்து வாழ்வதே சிறந்தது. அதன் அடிப்படையில் வாழ்வோம். வாழக்கை வாழ்வதற்கே!