மனம் போல்தான் எண்ணம். எண்ணம் போல்தான் செய்கை... இதுதான் வாழ்க்கை!

Actions are like thoughts.
Motivational articles
Published on

க்கள் மனதை எதில் ஈடுபடுத்திக் கொள்கிறார்களோ அதில்தான் ஆர்வம் இழுத்து செல்லும். மனம் போல்தான் எண்ணம். எண்ணம் போல்தான் செய்கையும்.

கடவுள் தருவது போதும், யாரும் எதையும் செய்யட்டும் என்ற முடிவை உடையவர்களை எந்தவொரு பகைவராலும் அழிக்க முடியாது. வாழ்வில் இதை இதை கொடுக்குமென்று நினைத்து இதை செய்ய வேண்டாம். இது சரி என்று நினைத்து செய்வதே அதைவிட உத்தமமாகும். மனம் தூய்மைபடுத்தப்பட்ட பின் அவர்கள் பாதுகாப்புக்குதான் பயிற்சி அளிக்கப்படவேண்டும்.

சாதாரண சிகிச்சை போன்ற அசைவுகள் பலவிதமான நோய்களை குணப்படுத்தும். இதையும் மனமே கொடுக்கின்றது. மனதின் வேதனையை தாங்க முடிந்தால்தானே உடம்பை பேணமுடியும். எனவே, மனம் என்பதுதான் எப்போதும் நிலையானதாக, சந்தோசமானதாக இருக்கவேண்டும். இறைவனிடம் ஒருமுகப்படுத்துவதால் மனஅழுத்தம் குறைய வாய்ப்பு கிடைக்கின்றது.

மக்கள் உடல் ஊனத்தை பெரிதாக பேசுவர். ஆனால் உள்ள ஊனம் என்ற ஒன்று உண்டு என்பதை யாருமே யோசிப்பதில்லை. இது மனிதனை செயல் மறக்கச் செய்யும். இழுத்து செல்லும் கோபம் என்னும் விபரீதத்தை காட்டச் செய்யும். மனம் என்பது திடமாக பேசுவதை பேசவேண்டும். மனமானது கலையில் ஈடுபாடு கொண்டு விட்டது என வாழ்க்கை வசதியை தேடாமல் முடியாது.

எந்த சூழ்நிலையிலும் வேண்டும் வேண்டும் என்று மனம் நினைத்தால் நினைப்பது கூடுமானவரை கிடைக்கும். மக்கள் ஒருவரை ஒருவர் கூறுவது நம்ப தகாததாக இருக்க காரணம் மனம்தான் அடிப்படையானது. ஒவ்வொருவர் மனமும் ஒவ்வொன்றை பேசும்.

இதையும் படியுங்கள்:
கர்வம் கொண்டால் அதற்காக வெட்கப்பட வேண்டும்!
Actions are like thoughts.

அதனால் மனம் எப்போதும் அவரவர்களை ஆற வைக்கும் விசிறி போல் இருக்க வேண்டும். மனமானது யாரையும் நம்பவும் கூடாது. வெறுக்கவும் கூடாது. மனமானது சந்தேகப்படுவதையும், பழைமையை நினைப்பதையும், மறந்து விடவேண்டும். அது சந்தோசப்படுத்துவதாக இருக்க வேண்டும். வாழ்வின் பாட்டுக்கும், சூழ்நிலைக்கும் தக்கபடி ராகமிடுவது மனது.

மக்கள் சாப்பிட நினைத்தால் உடனே சாப்பிட முடியுமா, முடியாது. அதற்கு பசி தேவை, அதோடு ருசி தேவை. இரண்டுக்கும் அப்பால் சிலருக்கு மனம் நிறைய வேண்டும். மக்களின் மனம் எப்போதும் கவர்ச்சியையே தேடுகின்றது. இதனால் மனதை பொல்லாதது என்றும் கூறுவர். உடல் முழுவதும் முத்து, வைரம் கொண்டு மூடினாலும் மக்களின் மனம் நிறைய போவதில்லை. அப்படிப்பட்ட மனநிலையை இயற்கையான முறையில் விளையாட்டுகள் மூலம் சந்தோசப்படுத்துவது மிகவும் பலமானது.

மக்களின் மனமானது குழிக்குள் விழுந்ததைபோல் உறங்கி கிடக்கும் மூளையை தட்டி எழுப்பி கொண்டு வரும். மக்கள் பிழைப்பிலும் மனதால் நடிக்கின்றார்கள், உழைப்பிலும் மனதால் நடிக்கின்றார்கள். மனதுக்கும், உடலுக்கும் உள்ள இருப்பு விசையின் வேகம் மிகவும் பயங்கரமானது.

மனமானது நல்வழியில் பயணம் செய்யும்போது பல பிரச்னைகளையும் போட்டு குழப்பிக்கொள்ள தேவையில்லை. உடம்பில் ஏற்படும் காயத்தை குணப்படுத்திவிட்டு அதன் பின்னர் அழகு படுத்த முயல்வதுபோல கட்டாயத்தேவைகளை, கட்டாயமான மனநிலையைப் புரிந்து வாழ்வின் தரத்தை உயர்த்துவது நல்லது.

மக்களாகிய நாம் மனதளவில் தேவையான உணவு, தேவையான பாசம், தேவையான உதவி இவைகளை விட்டு கொடுக்காமல் இருப்பது நல்லது. அதுபோல் சரியான வழி முறைகளுக்கு மனதை ஒழுங்கு படுத்துதல் அவசியமாகும்.

இதையும் படியுங்கள்:
அனுபவங்கள்தான் நம் சிந்தனையை தூண்டுகிறது!
Actions are like thoughts.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com