
நேரம் உண்மையில் அரிதானது. வெற்றியாளர்களுக்கும், வெற்றி பெறாதவர்களுக்கும் இடையில் நேர நிர்வாகமே வித்தியாசமாக விளங்குகிறது. நேரமின்மையால் நாம் எடுக்கும் தவறான முடிவுகளை நமக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
நண்பர்களிடம், உறவினர்களிடம் அளிக்கும் வாக்குறுதிகளை மீற நேரிடுகிறது. வேலை மற்றும் தொழிலில் இணைத்த விஷயங்களை முடிக்க முடிவதில்லை. முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் தவறவிடுகிறோம். முக்கியமான மருத்துவ தேவைகளை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என தள்ளி போடுகிறோம். குடும்பத்தில் வித்தியாசமான தேவைகளை நிறைவேற்ற முடியாமல் குற்ற உணர்வுக்கு ஆளாகிறோம்.
நேர மேலாண்மை
நேரம் பறந்து செல்கிறது என்பது கெட்ட செய்தி: நீங்கள்தான் அதன் பைலட் என்பது நல்ல செய்தி!
என ஒரு பொன்மொழி உண்டு. இன்று உலகம் மிக வேகமாகிவிட்டது. நேரமே பணம் என்று ஆகிவிட்ட சூழலில் மக்கள் நேரத்தின்பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நம் வாழ்க்கை காலண்டர்களாலும் கடிகாரங்களாலும் தீர்மானிக்கப்படுகிறது. இது நேர மேலாண்மை தீர்மானிக்கப்படுகிறது.
நேரத்தை சரியாக நிர்வகிப்பது
நாள் முழுக்க வேலை நீள்கிறது. அதனால் களைப்பாக உள்ளது என்று பலர் நினைக்கிறார்கள். வேலை அதிகம் இருப்பதால் களைப்பு ஏற்படுவது இல்லை. நேரத்தை சரியாக நிர்வகிக்க முடியாததால்தான் களைப்பு ஏற்படுகிறது. கடின உழைப்பு மட்டும் போதாது, நேரத்தை சரியாக நிறுவகித்து புத்திசாலித்தனமாக உழைக்கவேண்டும்.
இலக்கை தீர்மானியுங்கள்
நேர நிர்வாகம் என்பது நாம் ஒவ்வொன்றையும் சரியாக செய்ய முடிவு எடுப்பதில் தொடங்குகிறது. ஒவ்வொரு நாளும் வேலைகளை திட்டமிட்டு அவற்றை எப்படி செய்கிறோம்? என கவனிக்க வேண்டும். நேரத்தை நிர்வகிக்க தொடங்கும் முன் உங்கள் எதிர்காலத்துக்கான பார்வையை உருவாக்குங்கள். நீண்ட காலம் மாற்றும் புதிய கால மற்றும் குறுகிய கால இலக்குகளை வரையறுங்கள். நேரத்தை நிர்வகிக்க இலக்குகள் முக்கியம். ஏனெனில் அவை நீங்கள் பயணிக்க ஒரு திசையையும் சென்றடைய ஓர் இலக்கையும் தருகின்றன.
வேலையை பிரித்து செய்யுங்கள்
நேர நிர்வாகம் என்பது நாம் ஒவ்வொன்றையும் சரியாக செய்ய முடிவு எடுப்பதில் தொடங்குகிறது. ஒவ்வொரு நாளும் வேலைகளை திட்டமிட்டு அவற்றை எப்படி செய்கிறோம் என கவனிக்க வேண்டும். காலையில் அந்தந்த நாளை திட்டமிட்டு பணிகளை செய்யுங்கள்.
ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு, இன்று என்னென்ன செய்ய வேண்டும் என பட்டியல் போடுங்கள். குறிப்பிட்ட கால அளவுக்குள் வேலை செய்யுங்கள். நேரத்தைக் கவனத்தில் கொள்ளுங்கள். பெரிய வேலையைச் சின்னச் சின்னப் பகுதிகளாகப் பிரித்து செய்யுங்கள். எது அவசரம் என்று பார்த்து அதற்கு முன்னுரிமை கொடுங்கள்.
கட்டுப்பாடுகள் முக்கியம்
வேற மேலாண்மையில் கட்டுப்பாடு முக்கியமானது. முக்கியம் இல்லாத வேலைகளும், தேவையற்ற பொழுது போக்குகளும், உங்களை ஆக்கிரமிக்க விடாதீர்கள். முக்கிய வேலைகளை உடனே செய்யுங்கள். அடுத்தவர்கள் செய்துவிடக்கூடிய வேலைகளையும், தேவையற்ற வேலைகளையும் செய்யாமல் இருப்பது மிக முக்கியம். வேலைகளுக்கு இடையில் போதுமான ஓய்வெடுங்கள்.
இது சோர்வை தவிர்த்து உங்களை உற்சாகமாக உழைக்க வைக்கும். நேரம் இன்று நம் கையில். அதை பயன் உள்ளதாய் செலவிட்டு வாழ்வின் சுவையை, மகிழ்வையும் அனுபவிப்போம்.
நேரம் இருப்பது மட்டுமல்ல, நேர மேலாண்மையை சரியாகப் பயன்படுத்துவதும் நேர்மறையான பலன்களைப் பெறலாம். நேரத்தை வீணாக்காாமல் சரியாகப் பயன்படுத்தினால் நிகழ்காலம் நம் கையில்.