
மனிதன் மனது ஒன்பதடா, அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா என்ற பாடல் வரிகளில் வருவதுபோல ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வேறு ஒரு மனிதமனமும் அவன் கூடவே வாழ்ந்து வளா்ந்து வருகிறது.
அது நேரத்திற்கு தகுந்தாற்போல இடத்திற்கு தகுந்தாற்போல சந்தா்ப்பத்திற்கு ஏற்ப நிறம் மாறிவிடும். அதுவே அபாய, மற்றும் அபாயமில்லாத தன்மையையே வெளிப்படுத்தும்.
இந்த செயலானது அவ்வளவு தூரம் சிலாக்கியமில்லாத ஒன்றாகும்.
ஒவ்வொருவரிடம் சில மாறுபட்ட குணநலன்களாக, பொறாமை, சந்தர்ப்பவாத பேச்சு, அடுத்தவர் களைக்கண்டு எள்ளி நகையாடும் துா்க்குணமும் தொடர்வதும் அபாயம்தான்.
கடனுக்கு இருசக்கர வாகனம், நான்கு சக்கரவாகனம் வாங்கி போகிறவனைப் பாா்த்து பெருமைப்படவும், பொறாமைப்படவும், உாிய குணங்கள் படைத்தவர்கள் மத்தியில்தான் நாம் வாழ்ந்து வரவேண்டிய சூழல்.
இதனிடையில் கடன் வாங்காமல் சைக்கிளில் செல்பவனைப் பாா்த்து ஏளனம் செய்யும் பலரது எண்ண ஓட்டங்களுக்கு மத்தியிலும் வாழந்துதான் ஆகவேண்டிய நிலை. நிலை மாறும் உலகம், நிலைக்குமென்ற கனவுலகம்.
சில சமயங்களில் சறுக்கிவிடுமே! கீழே இருப்பவன் மேலேயும், மேலே இருப்பவன் கீழேயும் வரும் நிலை நம்கையில் மட்டுமல்ல!
இறைவன் போட்ட கணக்கே ஆகும்.
தவணைமுறையில் வங்கியில் கடன் வாங்கி நான்கு சக்கர வாகனத்தில் பயணிப்பவனைப்பாா்த்தால் எனக்குத் தொியும்!
அவன் எப்படியும் முன்னேறிவிடுவான், அவன் கெட்டிக்காரன் நாலும் தொிந்தவன் என்ற வஞ்சப்புகழ்ச்சி பாடும் நபர்களும் நம்மோடுதான் வாழ்கிறாா்கள். அதே நேரம் வாழ்க்கையில் கொஞ்சம் சறுக்கல் வந்து சிரமப்படும் நிலைக்குதள்ளப்பட்டால் அதற்கும் ரெடிமேடு பேச்சு கைவசம் உண்டே!
எனக்குத் தொியும் அவன் நின்ன நிலை, ஆடிய ஆட்டம், கொஞ்சமா நஞ்சமா என பேசும் நபர்கள் மத்தியிலும் வாழ்ந்துதான் ஆகவேண்டிய கட்டாயம்.
இப்படி பல்வேறு எண்ணங்கள், நிலைபாடுகள் உடைய மனிதர்கள் மத்தியில் வாழ்ந்துதான் ஆகவேண்டி யநிா்ப்பந்தம்
பொதுவாக இதுபோன்ற இருமனம், வக்கிரபுத்தி கொண்ட நபர்களிடம் நாம்தான் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்.
பல நபர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.
அதில் நமக்கு தேவையானதை மட்டும் நாம் எடுத்துக் கொண்டு வாழ்வதே நமக்கு நன்மை பயக்கும். அடுத்தவருக்காக நாம் வாழவேண்டாம். நமக்காக நாம் வாழ்ந்தாலே போதும் வாழ்க்கை சுலபமாகும்!