'நான்' என்கிற புரிதல்... உங்களை நீங்களே அறியுங்கள்!

நம் பழக்கத்தால், 'நான் இப்படித்தான்' என்கிற புரிதலை ஏற்படுத்தி நம் பாதையை சரியாக செப்பனிட வேண்டும்.
நான் என்கிற புரிதல்
நான் என்கிற புரிதல்AI Image
Updated on

“நான்” மற்றும் என்னுடைய “எண்ணம்.”

இப்படிச் சொன்னால் ‘எனக்கு புரியும் என்று நான் நினைக்கிறேன்’...

அதாவது “நான்” உயிருடன் இருக்கும் போது,

‘என்னை நானே’ கொண்டாடிக் கொண்டு இருப்பது இல்லை.

அப்படி ஆனால் “நான்” இப்போது இறந்த பின் ஆவியாக பேசுகிறனா? நான் ஒன்றும் “P.T.சாமி” (பிசாசு கதை எழுத்தாளர்) இல்லை.

இப்போதே விஷயத்துக்கு வருகிறேன்.

எவ்வளவுக்கு, எவ்வளவு நான் என்னை சுயநலமாக எண்ணி என்னைப் புரிந்து கொண்டு செயல்படுகிறேனோ, அவ்வளவுக்கு, அவ்வளவு நான் பிறரைப் பற்றிய புரிதல் மற்றும் சமூக அக்கறை ஆகியவற்றில் தெளிந்து, சிந்தனையுடன் செயல்பட்டு ஒரு பொறுப்பு உள்ள குடிமகனாக வாழ பழகிக்கொள்ள முடியும்.

அதற்கு முதற்படி நம் பெற்றோரைப் பற்றிய ஒரு புரிதல் வேண்டும்.

அவர்களைப் பற்றி அதிகம் குறை கூறாமல், நாம் பிறக்க ஒரு கருவியாக இருந்து நம்மை வாழ வைப்பதற்காக, ஒரு நன்றியை எப்போதும் செலுத்திக் கொண்டு இருக்க வேண்டும்.

நாம் வாழ வழி தெரியாமல் நிலையற்று இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

இதையும் படியுங்கள்:
கரடுமுரடான பாதையே நம் வாழ்க்கைக்கு வரப்பிரசாதம்... ஏன் தெரியுமா?
நான் என்கிற புரிதல்

இப்போது என்ன செய்வது என்கிற சிந்தனை வரும்.

அதற்கு இரண்டாம் படி:- நம்மை பிறரிடம் இருந்து பிரித்துப் பார்க்க பழகிக் கொள்ள வேண்டும்.

பிறருடைய எண்ணங்கள், செயல்கள் நம்மை நாமே பாதிக்காத அளவுக்கு நம்மை நாமே பாதுகாக்க பழகிக்கொள்ள வேண்டும்.

எப்படி?

1. நல்ல உணவினாலா?

2. நல்ல உடையினாலா?

3. நல்ல படிப்பினாலா?

4. அதிக நண்பர்கள் சூழ வாழ்வதினாலா?

5. அதிக சிநேகிதிகள் உண்டு என்று கூறி கொள்வதினாலா?

6. நன்றாக செலவு செய்து பிறர் மதிப்பை பெற முயற்சிப்பதினாலா?

எப்படி?

எப்படி என்றால் - ஒரே வழிதான்!!!

உன்னை மதித்து, உன் உடலை மதித்து உன் மனதை எந்த சபலத்திற்கும் உட்படுத்தாமல் உன் உணர்வுகள் சொல்வதற்கு ஏற்ப, உன் பாதையை வகுத்துக்கொள்ள வேண்டும்.

சமுதாயம் மிகவும் முக்கியம்.

அதில் வாழும் நலிந்த, கடைகோடி மக்களை, உழைப்பை நாம் உண்டு, உறங்கி, உலாவி வருகிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது.

நம் பழக்கத்தால், நான் இப்படித்தான் என்கிற புரிதலை ஏற்படுத்தி நம் பாதையை சரியாக செப்பனிட வேண்டும்.

பிறரின் மதிப்பீடுகள் நம்மை சிறுமை படுத்தவிடக் கூடாது.

மேலும், இந்த செயல்கள் நம்மை அடுத்த நகர்வுக்கு உள்ளாக்கி, நம் ஒத்த எண்ணங்கள் உடைய நண்பர்களை நமக்கு உருவாக்கி நம் படைப்புக்கு ஒரு புதுப்பொழிவை ஏற்படுத்தி நம்மை இந்த பிறப்பின் மேன்மை பற்றி நன்கு உணர வைக்கும்.

இது சத்தியம்!

இது உண்மை!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com