உறவும் இறைநம்பிக்கையும் இல்லையெனில் வாழ்க்கை எப்படி மாறும்?

மனித உறவுகள், இயற்கை மற்றும் இறைநம்பிக்கை ஒன்றோடொன்று இணைந்தால்தான் வாழ்க்கை முழுமை பெறும் என்பதை எளிய உதாரணங்களால் விளக்கும் ஆன்மீக சிந்தனை.
Family, god and life
Universe Secrets: Family, god and lifeImage credit: AI Image
Updated on

Universe Secrets:

மனித வாழ்க்கையில் பொதுவாகவே ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. ஒன்றை ஒன்று சாா்ந்துதான் அகிலத்தில் அனைத்துமே உருவாகிறது. இறைவன் இல்லாமல் எதுவுமே அசையாது என்பதை முதலில் உணரவேண்டும். அதனால்தான் இந்த பிரபஞ்சத்தில் ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்.

நீாின்றி அமையாது இவ்வுலகு என்பது போல மனிதன் மற்றும் ஜீவராசிகள் வாழ்ந்து வர நீா் அவசியமான ஒன்றாக அமைந்துள்ளது.

பெற்றோா்கள் துணையில்லாமல் நாம் எப்படி வளரமுடிந்தது?வாழமுடிந்தது? அன்பும் பண்பும் சோ்ந்ததுதானே நல்ல வாழ்க்கை.

ஒரு விதையை விதைக்கிறோம் அதற்கு நல்ல தண்ணீா் வசதி, மணல் வசதி இவை இருந்தால் தானே விதை பயிராகிறது. அதுபோலவே தங்கத்தில் தாமிரம் ஓரளவு கலந்தால்தான், அதை தீயில் உருக்கினால்தான் அணிகலனாகவும் ஆபரணமும் ஆகிறது.

காய்ச்சிய பாலோடு கொஞ்சம் தயிர் கலந்தால்தானே மோா், தயிா், வெண்ணைய், நெய் உருவாகிறது.

அதேபோல ஒரு தாயின் கருவறைக்குள் பிறந்த நாம் சகோதர உணர்வோடு, ஒற்றுமை கலந்தால் தானே நல்ல உறவு உண்டாகிறது.

நல்ல உறவு இருந்தால் தான் அது ஒரு நல்லதொரு குடும்பமாகி அன்பு, பண்பு, ஆசை, பாசம், உறவின் மேன்மை இவற்றைக் கற்றுக்கொடுக்கும் பல்கலைக்கழகமாக மாறுகிறது.

எவ்வளவு தான் நிறைய பொருட்கள் சோ்த்து பலவித பலகாரங்கள் செய்தாலும் உப்பு இணைந்தால்தானே அதில் சுவை கூடுகிறது.

உப்பில்லா பண்டம் குப்பையில் தானே! அதுபோலவே தான் இறைவன் இல்லாமல் எதுவுமே கிடையாது என்பதை அனைவரும் உணரவேண்டும்.

இந்த வாழ்வியல் அர்த்தத்தை ஶ்ரீஶ்ரீ அண்ணா (ஶ்ரீ கிருஷ்ண பிரேமி ஸ்வாமிகள்) தனது அருளுரையாக,

"மண் இல்லாமல் எப்படி குடம் உண்டாகாதோ:

தங்கம் இல்லாமல் எப்படி பூஷணம் உண்டாகாதோ:

அதுபோல கடவுள் இல்லாமல் உலகம் உண்டாகாது.

இதையும் படியுங்கள்:
தனிமை உங்களை நெருங்கும் முன்... வாழ்வை ருசிக்கத் தொடங்குங்கள்!
Family, god and life

கடிகாரம் இயற்கையாகவே இயங்குவதுபோல இருந்தாலும், அதற்கு சாவி கொடுக்க எப்படி ஒருவர் வேண்டுமோ, அதுபோல உலகம் இயற்கையாகவே நடப்பது போல தோன்றினாலும் இதை இயக்குவிக்க ஒரு பகவான் இருக்கிறான்.

அவனன்றி எந்த இயக்கமும் இல்லை.

மண்ணிலிருந்து செடி, கொடி முளைப்பது இயற்கை போல தோன்றுகிறது. ஆயினும் அந்த மண்ணுக்குள்ளும் இறைவன் இருப்பதே அதற்கு காரணம்.

உயிாில்லாத மாட்டினிடம் பால் ஊறுமா? உயிாில்லாத மரம் தளிா்விடுமா? அதுபோல் இறைவன் உள்ளே இராவிடில் உலகில் தானே எதுவும் உண்டாகாது" என்ற அவரது தத்துவத்தை உணர்ந்து இறை நம்பிக்கையோடு வாழவேண்டும்!

logo
Kalki Online
kalkionline.com