தனிமை உங்களை நெருங்கும் முன்... வாழ்வை ருசிக்கத் தொடங்குங்கள்!

வாழ்க்கையில், சிந்தனையில் காந்தியத்தையும், பாரதியையும் தன் உணர்வாகக் கொண்டு செய்கிற வேலையில் முழுமை பெறுவோம்.
Loneliness
Loneliness
ராமன். செல்வராஜ்

கோவில் நகரம் குடத்தையில் வசித்து வரும் இவர் விலங்கியலில் முதுகலை பட்டமும், வெகுஜன தொடர்பு மற்றும் பத்திரிகை துறையில் முதுகலை பட்டமும் பெற்றவர். தற்சமயம் EXNORA , 'உலக தமிழர் அறக்கட்டளை' போன்ற அமைப்புகளில் தன் பங்கை ஆற்றி வருகிறார். இவரது இலக்கியத் தொடர்பு என்பது ஒரு கவிதை மூலமாக 'கவிநானூறு' என்கிற இணையதளத்தில் தொடங்கியது. தொடர்ந்து கட்டுரைகளும் வேறுசில தளங்களில் வெளியாகின. செப்டம்பர் -17- 2025 முதல் கல்கி குழுமத்துக்காக சிறுகதைகள், தத்துவங்கள், ஆன்மீக புரிதல்கள் ஆகியவற்றை எழுதி, பகிர்ந்து வருகிறார். இவரது கதை கட்டுரைகளை கல்கி ஆன்லைன் இதழ்களிலும் Motivation, பசுமை/ சுற்றுச்சூழல், மற்றும் கலை கலாச்சாரம், ஆன்மீகம், தத்துவம் ஆகிய பகுதிகளிலும் காணலாம்.

Updated on

தனிமை என்பது தவிர்க்க முடியாத ஒன்று. பிறப்பில் இருந்து இறப்பு வரை நம்மிடையே வரும் ஒரு உலகம்-தனிமை.

ஒரு கூட்டத்தில், குடும்ப விழாவில், அலுவலகத்தில், பள்ளிப் பருவத்தில் என பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் நம்மை கடக்க முடியாமல் தனிமையில் வாடி இருப்போம்.

இதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

நம் வலி, நம் குடும்பம், நம் சந்தோஷம், நம் வாழ்வு என்று இருப்பவர்களுக்கு இந்த வலி 'அதிகம்' வரும்.

இதுவே ஒரு சந்நியாசியின் நிலையில் இருந்து பார்த்தால், அவர் உலகமே இதற்கு எதிர்மறையாக இருக்கும்.

காரணம்; அவர் தம் தன்னுணர்வு.

நாம் தன் உணர்வு கொள்ளும்போது நம்மிடையே,

ஒரு மீட்சி,

ஒரு அறம்,

ஒரு முழுமை,

தோன்றுவதை உணரலாம். அதுவே பரிபூரண வாழ்வு;

இதைத்தான் 'பாகவதம்' கூறுவதாக 'ஜெய மோகன்' - தமிழில் இன்றைய இலக்கிய வட்டாரங்களில் அதிகம் பேசப்படும் எழுத்தாளர் - தன் 'Magnum opus' என்று அறியப்படும் 'வெண்முரசில்' கூறுகிறார்.

எப்போது உங்கள் தனிமை தன்னிறைவு பெறும்.

Eg: Mahatma Gandhi,

சராசரி இந்தியனின் அடையாளமாக இருந்தார் - Simple Attire - ஒரு கோமணத் துண்டு.

அவர் கூறுகிறார்: “நான் காட்டில் இருந்து கொண்டு ‘ஜிலேப்பிக்கு’ ஆசைப்பட்டது இல்லை. ஜிலேப்பிக் கடையில் இருந்து கொண்டு ஜிலேப்பியை ஜிலேப்பியாக பார்ப்பவன்.”

சாவி - எழுத்தாளர் - நவகாளியாத்திரை.

அவ்வாறாக தன் உணர்வு கொள்பவர்களுக்கு,

குடும்பத்தில்,

வாழ்க்கையில்,

சமூகத்தில்,

அலுவலகத்தில்,

நண்பர்கள்,

உறவுகள் மற்றும் இன்ன பிற ஜீவன்களிடமும் ஒரு 'உன்னத உணர்வு மூலம் உறவுகொண்டு வாழ்வாங்கு வாழ்வார்கள்.'

'முதுமை என்ற தனிமை' வரை காத்துக்கிடக்கத் தேவை இல்லை.

இரண்டு உதாரணங்கள்:

முதுமையிலும் இளம் துடிப்புடன் செயல்பட்ட,

1. மகாத்மா காந்தி.

இளமையிலேயே தன்னை மறந்து சமூக மேம்பாட்டிற்காக காலத்தை வென்ற,

2. மகாகவி பாரதி.

இதே நம் மகாகவி சொல்கிறார்.

“காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள

கடலும், மலையும் எங்கள் கூட்டம்,

நோக்கம் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை

நோக்க நோக்கக் களியாட்டாம்.”

கடலையும், மலையையும் நம் இனமாகவே பார்த்தார். பரவசம் அடைந்தார்.

இதையும் படியுங்கள்:
"நான் யார்?" - இந்த கேள்விக்கு விடை தெரிந்தால் உங்கள் வாழ்க்கை ராயல் தான்!
Loneliness

இதுவே இன்று 'Global warming' என்ற பட்டத்துடன் 'Green-Revolution' என்ற அடைச்சொல்லுடன் ஒரு சொல்லாடலாகப்பட்டு தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

பாரதி போன்ற ஒரு கவிஞன் இனி பிறக்கப்போவது இல்லை. ஜாதி, மதம், இனம், மொழி கடந்து எல்லோரையும் நேசித்த மகாத்மாவாக பாரதி வாழ்ந்தார்.

வாழ்க்கையில், சிந்தனையில் காந்தியத்தையும், பாரதியையும் தன் உணர்வாகக் கொண்டு செய்கிற வேலையில் முழுமை பெறுவோம்.

தனிமை என்று தனித்து ஒன்று இல்ல.

அது ஒரு மனநிலை.

இரா. செ.

As A Feed Back To The Following WhatsApp Massage.

இந்த உறவுகள் அற்புதமானவை. மனைவி என்ற ஒருத்தியோடு பேசிக்கொண்டே இருங்கள்; இல்லாவிட்டால் ஏதாவது சண்டையாவது போடுங்கள். பின்பு சமாதானம் ஆகி உறவாடுங்கள். எல்லா ஆண்களுக்கும் ஒரு நாள் வரும். ஒருவேளை அவள் முந்தி மரணமடைந்தால் அப்போது தெரியும், பிரிவு என்றால் என்னவென்று. ஆகவே இப்போது கிடைக்கும் ஒவ்வொரு நொடியும் அற்புதமானவை; வீணாக்க வேண்டாம். அதிலும் பிரிந்து இருக்கவே வேண்டாம்.

அடுத்து, பிள்ளைகள்; பள்ளி படிப்பு முடியும் வரைதான் அவர்கள் உங்களோடு இருப்பார்கள். அதன்பின் அவர்கள் உலகம் வேறு; அதில் நீங்கள் நிச்சயமாய் இருக்கவே மாட்டீர்கள். அப்போது நீங்கள் அவர்களோடு தொலைபேசி மூலமாக பேசக்கூடநேரம் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
குறை சொல்லும் குணம் ஒரு நோயா? அது உங்களை பாதிக்குதா? மீண்டு வருவது எப்படி?
Loneliness

இப்போது அவர்களிடம் அதிக நேரம் செலவு செய்யுங்கள். இப்படி இல்லாமல், உங்கள் பிள்ளைகள் உங்கள் அருகிலேயே இருந்தால் இது அற்புதமான தருணம். ஒரு நொடியைக்கூட வீணாக்க வேண்டாம். சும்மா அவர்களை பார்த்துக் கொண்டாவது இருங்கள்.

அடுத்து உறவுகளும், உடன் பணி செய்யும் தோழர்களும்.

இதைப்பற்றி தெரிந்து கொள்ள, நீங்கள் அடுத்த மாநிலத்திலோ அல்லது வேறு நாட்டிலோ இருந்தால், இது புரியும்.

வடநாட்டில் இருந்தால் அங்கு உள்ள சர்மாவும், பாண்டேயும், தூபேயும், நம்மோடு நட்பாக இருப்பார்கள். ஆனால் தோள் மேல் கைபோட்டு 'வாடா மாப்பிளே' என்று கூற முடியாது. ஒரு இடைவெளி இருந்து கொண்டேதான் இருக்கும்.

எல்லாம் ஒரே இடத்தில் கிடைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களே! வாழ்கையை ருசியுங்கள்; அனுபவியுங்கள். காலமே ஒரு நாள் நம்மை தனிமைப்படுத்த போகிறது. அன்று யாரும் நம்மை வந்து பார்க்கப்போவது இல்லை. நாம் நினைத்தால் கூட வெளியே போக முடியாது.

தனிமையே நம்மை கொல்லப்போகிறது.

அதுவரை, சினேகங்களோடு பேசுவோம்; சண்டையிடுவோம்; கொஞ்சி குலாவுவோம்; ஏதாவது செய்வோம். ஆனால் தனிமை வேண்டாம்; அது மோசமானது.

காலங்கள் திரும்ப கிடைக்காது.

logo
Kalki Online
kalkionline.com