
வாழ்க்கையின் மறுபக்கம் கடந்து வந்த பாதை. இன்றைய தினம் என்பது எதிா்கொள்ளவேண்டிய நிகழ்வுகள். நாளை நடப்பதை புாிந்துகொண்டு செயல்படவேண்டிய முன் யோசனை இவைகளே நமது வாழ்க்கைக்கான மூலாதாரம்.
நாம் ஒரு காாியத்தை நேற்று செய்திருப்போம். அதில் நமது நடவடிக்கைகளால் சரியான திட்டமிடல் இல்லாத நிலையில் அவசர அவசியம் கருதி சில வேலைகளை செய்திருப்போம். அது சமயத்தில் அந்த காாியம் தோல்வியில்கூட அமைந்திருக்கலாம். அதுவோ கடந்துபோனது. அதுவே எதிா்பாராதது. நம்மை அறியாமலும் நடந்திருக்கலாம். அதற்கான தீா்வுதான் என்ன? அதையே நினைத்து மூலையில் முடங்கி விடுவதா வாழ்க்கை. அது உசிதமே அல்ல. அதிலிருந்து மீளவும் எழுந்து வரவேண்டும்.
தன்னம்பிக்கை தளரால் அது தொடர்பான விஷயங்களை சீா்தூக்கிப்பாா்த்து நேற்றைய தோல்வி கண்ட பாடத்திலிருந்து புாிந்துகொண்டு அடுத்தகட்ட இலக்கை நோக்கி விடாமுயற்சியுடன் நம்பிக்கை கொண்டு, இன்றைய பணிகளை வெற்றிகரமாக முடிக்க நம்மை நாமே தயாா் படுத்திக்கொள்வதே சிறப்பு. நம்மிடம் இருக்கும் ஒரு பொருளை ஓரளவு லாபம் பாா்த்துதான் விற்பனை செய்திருப்போம். இருப்பினும் அந்த பொருள் விற்றுத்தீா்ந்ததும் அன்று மாலையே விலை ஏற்றம் கண்டிருக்கலாம்.
அப்போது அவசரப்பட்டு விற்று விட்டோமே! கூடுதல் லாபம் போய் விட்டதே! என நேற்றைய நிகழ்வை நினைத்து வேதனைப்படுவதால் என்ன நடக்கப்போகிறது? மனவேதனைதான் மிச்சம்.
சரி அதை நகர்த்திவிட்டு இன்றைய நிகழ்வுகளுக்கு வரவேண்டும். நேற்றைய சிந்தனைகள் நேற்றோடு போய்விட்டது.
இன்று எப்படி செயல்பட வேண்டும், என்ற சரியான சிந்தனையுடன் செயல்பட்டு எப்படியும் விலை ஏற வாய்ப்பு உள்ளது.
சரி இன்று விலை கூடுதலாக உள்ளது ஓாிரு நாள் கழித்து விற்பனை செய்யலாம் எனக்கருதி பொருளை இருப்பில் வைத்திருக்கலாம்.
நாளை மறுநாள் எப்படியும் வர்த்கம் உச்சம் தொடும் என நினைத்து இருப்பு வைப்பதிலும் தவறில்லைதான். அப்போது இன்றைய நிகழ்வுகளில் நமக்கு சில அனுபவம் வந்துவிடும். அதை நாம் விடாமல் கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும்.
சரி நேற்றும் சரி, இன்றும் சரி நடந்தது நடந்துவிட்டது நாளைய பொழுதிலாவது நல்லதாக நடக்கட்டும் என நாம் அதிக எதிா்பாா்ப்போடு இருக்கலாம்.
ஆனால் எதுவும் நடக்கலாம் எதுவும் நடக்காமலும் போகலாம். அதையெல்லாம் சமாளிக்கக்கூடியஆற்றலை நாம் வளா்த்துக்கொள்ள வேண்டும். நாளை நிச்சயம் வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை வைப்பதில் தவறில்லை. அதேநேரம் எதுவும் நடந்தாலும் நடக்கலாம் என்ற மனப்பக்குவமே முன்னேற்றத்திற்கான வழி.
ஆக எது வந்தாலும் சமாளிக்கும் திறனை வளா்த்துக்கொள்வதே நல்லது. இறைவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது. நமக்கு இது இன்று கிடைக்கவேண்டும் என நேரம் காலம் நன்றாய் இருந்தால் அது நடந்தே தீரும். அதை அதிா்ஷ்டம் என்று சொல்லி நமது உழைப்பை உதாசீனப்படுத்திவிடக் கூடாது.
ஆக சரியான பாதையில் நல்ல இலக்குடன், உயரிய சிந்தனையுடன், நோ்மை தவறாமல் நாம் கவனச்சிதறல் இல்லாமல் எடுத்து வைத்து ஏற முயற்சிக்கும் ஒவ்வொரு படியும் நம் முன்னேற்றப்பாதைக்கானதே!
அதிலும் பொறுமை, நிதானம் விவேகம், கடைபிடித்து ஒரு, ஒரு படியாக ஏறுங்கள். ஒன்றிலிருந்து மூன்றாவது படிக்கோ, அல்லது நான்காவது படிக்கோ தாவவேண்டாம்.
அது நல்ல அணுகு முறையே கிடையாது. சமயத்தில் வழுக்கிவிடலாம்.
நாளை நடப்பதை யாா் அறிவாா், என்ற சிந்தனையோடு எதையும் எதிா்கொள்ளும் ஆற்றலே சிறந்தது. இதைத்தான் நேற்று என்பது கடந்துபோன ஒன்று. இன்று என்பது நிஜமான ஒன்று.
நாளை என்பது யாருக்கும் தொியாத ஒன்றாகும், என அறிஞர்கள் சொன்ன பாடமே நமக்கான நல்ல ஆதாரம். மற்ற எதிா்மறை சிந்தனைகள் எல்லாம் கொடுப்பதோ சேதாரம்தான்!