
நாம் வாழுகின்ற வாழ்க்கையில் பல்வேறு வகையான குணம் கொண்டவர்களிடம் பழகிவருகிறோம். நாம் வெளுத்ததெல்லாம் பால்தான் என வெகுளித்தனமாய் பழகினாலும், சிலர் யாரை எப்போது ஏமாற்றலாம் அவர்களுடைய பலம், என்ன பலவீனம் என்பதையெல்லாம் தொிந்துகொண்டு, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசித்தான் பழகுகிறாா்கள்.
சிலர் கூட இருந்தே குழிபறிக்கும் நயவஞ்சக நபர்களாகவும் இருப்பது உண்டு. அவர்களின் செயல்பாடுகள் காலப்போக்கில் தொியவரும்போது நமது மனது படுகின்ற வேதனைக்கு அளவே கிடையாது.
ஆக. நாம் நமது அன்றாட வாழ்க்கையில் சில நெறிமுறைகளை கடைபிடித்துதான் வாழவேண்டியுள்ளது. அப்படி கடைபிடிப்பதில் பல்வேறு விஷயங்கள் அடங்கியுள்ளன. அவற்றில் சில…
யாாிடமும் தேவையில்லாமல் அன்பு செலுத்தவேண்டாம்:
நமக்கு தொிந்தவரோ, பழைய உறவோ அல்லது புதிய உறவோ, அதேபோல நட்பு வட்டாரங்களோ அவர்களிடம் எப்போதுமே அளவோடு பேசுவதே சாலச்சிறந்தது. எந்த விஷயத்திலும் நிதானித்து கவனமுடன் பட்டும் படாத வகையில் சம்சாரம் மின்சாரம் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகை லெட்சுமி பேசும் உரையாடல்போல பழகுவதே நல்லது. எப்படி என்றால் தூரத்துப்பச்சை கண்ணுக்கு குளுமை என்ற வகையில் பழகவேண்டும்.
நம்மை உதாசீனம் செய்பவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது:
பொதுவாக நம்மை உதாசீனம் செய்து அவமானப்படுத்தி, நம்முடனே பழகி ஒரு காலகட்டத்தில் நம்மை போக விட்டு நமது முதுகிற்கு பின்னால் புறம்பேசும் விசாலமில்லா நபர்களிடமிருந்து நாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி இருப்பதே நல்லது. அதுவே நமது மனதிற்கான பரிபூரண திருப்தியாகும்.
யாரையும் எளிதில் நம்பவேண்டாம்:
நம்பிக்கைதான் வாழ்க்கை எவ்வளவுதான் உறவு நட்பு இவைகள் துணையிருந்தாலும் அவ்வளவு எளிதில் யாரையும் எளிதில் நம்பாமல் இருப்பதே நல்லது. சில சமயங்களில் நாம் நம்பிக்கை வைத்துள்ள நபர் நமக்கு ஒரு வகையில் துரோகம் செய்துவிட்டால் அதைத்தாங்கிக்கொள்ள நம்மிடம் மனோ தைாியம் இருக்க வாய்ப்பில்லை. ஆக நம்புங்கள்,அதே நேரம் வெகு ஜாக்கிரதையாக பழகி வருவதே மேலானதாகும்.
யாா் மனதும் நோகாதவாறு பேசுங்கள், பழகுங்கள், யாாிடமும் எப்போதும். எந்த சூழ்நிலையிலும் எந்த தருணத்திலும் எதிா்தரப்பினா்கள் மனவேதனை அடையாமல் நயமாக பேசுவதே நயமானதாகும்.
எந்த தருணத்திலும் கோபத்தை மூட்டைகட்டி வையுங்கள்:
கோபம் வரத்தான் செய்யும். அதற்காக வரம்பு மீறிய வாா்த்தைகளை பேசாமல் அமைதியாக வாழ்ந்து வருவதே சாலச்சிறந்த ஒன்றேதான். கோபம் குடியைக் கெடுத்துவிடுமே! கோபத்தை எதிா்தரப்புகளிடம் காட்டாமல் அமைதியாக வாழ்வதே நல்லது.
நாம் நமது வாழ்வில் யாாிடம் எந்த ஆலோசணை கேட்டாலும் பலர் பல யோசனைகளைச் சொன்னாலும் நாம் நன்கு சிந்தனை செய்து சீா்தூக்கிப்பாா்த்து நமக்கு எது சாியாகப்படுகிறதோ அதற்கு செயல் வடிவம் கொடுப்பதே நல்லது. தாய் தந்தை மனைவியைவிட நமக்கான உறவுகள் எதுவும் பொிய உறவுகளே அல்ல.
எங்கும் எதிலும் எதற்காகவும் சோரம் போய்விடும் நிலையில் பலரது எண்ண ஓட்டம் காலப்போக்கில் மாறிவிட்ட சூழலில் ஒருபாடல் நினைவிற்கு வந்துபோகிறது. நாம் எங்கும் எதிலும் நிதானம் கடைபிடித்து வாழ்வதே சாலச்சிறந்தது.