வெற்றிகரமான மனிதர்களின் ரகசியம் இதுதான்: நீங்களும் இதை பின்பற்றலாம்!

Self-awareness
secret of successful people
Published on

வெற்றிகரமான வாழ்க்கை வாழ விரும்பும் மனிதர்களுக்கு மிக முக்கியமாக இரண்டு விதமான திறன்கள் தேவை. சுயவிழிப்புணர்வு, சுயமரியாதை, சுயக் கட்டுப்பாடு போன்ற தன்னுடைய சொந்த குணங்களில் அக்கறை செலுத்தி அவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும். இது உள்முகத் திறன் மேம்பாடு (Intrapersonal development) எனப்படுகிறது.

அதேபோல பிறருடன் இந்த சமூகத்தில் தொடர்பு கொள்ளும், பழகும் விதம் அவரது உறவு வளர்ச்சியையும் தனிப்பட்ட வளர்ச்சியையும் குறிக்கிறது. இது தனிப்பட்ட திறன் மேம்பாடு (Interpersonal development) எனப்படுகிறது. இந்த இரண்டு திறன்களும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. ஒரு நபரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் இவை மிகவும் தேவையானவை ஆகும்

உள்முகத் திறன் மேம்பாட்டை (Intrapersonal development) வளர்த்துக்கொள்ளும் விதம்:

ஒரு மனிதனின் வளர்ச்சி என்பது அவர் தன்னுடைய எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை புரிந்து கொள்வதிலும் கவனம் செலுத்துவதிலுமான ஒரு உள்ளார்ந்த பயணத்தைக் குறிக்கிறது. அதற்கு அவர் கீழ்க்கண்ட தன்னுடைய உள்ளார்ந்த திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

சுயவிழிப்புணர்வு: ஒருவருக்கு தன்னை பற்றிய பலம் மற்றும் பலவீனங்களை பற்றி நன்றாக தெரிந்திருக்க வேண்டும். தனது குறிக்கோளை பற்றிய ஆழமான புரிதல் இருக்கவேண்டும்.

உணர்ச்சி நுண்ணறிவு: தனது சொந்த உணர்ச்சிகளை திறமையாகக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். தற்காலிகமாக தோன்றும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் அவற்றைப் புறந்தள்ளி நன்றாக சிந்தித்து ஒவ்வொரு முடிவுகளையும் சிறப்பாக எடுக்கவேண்டும். அப்போதுதான் அவரால் சிறப்பாக செயல்பட்டு தன்னுடைய இலக்கை அடைய முடியும்.

தன்னம்பிக்கை: தன்னுடைய திறமைகளில் நம்பிக்கை வைத்து நேர்மறையான எண்ணத்தையும் செயல்பாட்டையும் கொண்டிருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் நண்பர்களும் இப்படித்தான் இருக்கிறார்களா? எச்சரிக்கை தேவை!
Self-awareness

மீள்தன்மை: தான் சந்திக்கும் போராட்டங்களையும் சவால்களையும் திறமையாக சமாளித்து, மாற்றத்திற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் திறனையும் பெற்றிருக்க வேண்டும்.

சுய உந்துதல்: தனக்குத்தானே இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைவதற்கான உந்துதலை ஒருவர் தனக்கு தந்து கொள்ள வேண்டும். அவற்றை அடைவதற்கான பயணத்தில் சிறிதும் கவனச்சிதறல் இல்லாமல் முறையாக அவற்றை தொடர்ந்து செய்யவேண்டும்.

சுயமரியாதை: சுயமரியாதையுள்ள ஒரு மனிதர் முதலில் தன்னை மதிக்கவும் மரியாதை செய்யவும் கற்றுக் கொள்வார். தன்னுடைய மதிப்பை நன்றாக உணர்ந்து கொண்டு உணர்ச்சிகளையும் நடத்தையையும் கட்டுக்குள் வைத்திருப்பார்.

தனிப்பட்ட திறன் மேம்பாட்டை (Interpersonal development) வளர்த்துக்கொள்ளும் விதம்.

உள்ளார்ந்த திறன்களை ஒருவர் வளர்த்துக்கொண்ட பிறகு பிறருடன் திறம்பட தொடர்பு கொள்வதற்கு ஏற்ற திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இது மக்கள் திறன்கள் என்றும் அழைக்கப்படுகிறது.

தொடர்புத் திறன்கள்: பிறருடன் தெளிவாகவும் திறமையாகவும் பேசவும் கருத்துக்களை தெரிவிக்கவும் வேண்டும். அதேபோல ஒரு குழுவில் பிறர் என்ன சொல்கிறார்கள்? அவர்களுடைய கருத்துக்கள், அபிப்ராயங்களை காது கொடுத்து பொறுமையாக கவனித்துக் கேட்க வேண்டும். வாய் விட்டுச் சொல்லாமலேயே சில சமயம் அவர்களது உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும். பிறர் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளிக்க வேண்டும். இதனால் குடும்பம், நட்பு மற்றும் தொழில் ரீதியான உறவுகளை உருவாக்கி, சிறந்த முறையில் பராமரிக்கவும் முடியும்.

பச்சாதாபம்: பிறருடைய உணர்வுகளை அவர்களின் நிலையிலிருந்து நின்று புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப ரியாக்ட் செய்ய வேண்டும். அலுவலகத்தில், குடும்பத்தில் நட்பு வட்டத்தில் ஏற்படும் பிணக்குகளையும் சண்டை சச்சரவுகளையும் தீர்த்து வைக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். அனுசரித்து செல்லும் குணமும் இருக்க வேண்டும்.

தலைமைத்துவ பண்பு: பிறரை வசீகரிக்கும் வகையில் தொழில் சார்ந்த அறிவும், அதே சமயத்தில் பிறரை வழிநடத்திச் செல்லும் தலைமை பண்பையும் பெற்றிருக்க வேண்டும். சமூக சூழ்நிலைகளில் பொருத்தமாக நடந்து கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சுவையான புலாவ் ரெசிபிகள்: உங்கள் டேஸ்ட்டை மாற்றும்!
Self-awareness

இந்த இரண்டுமே திறன்களும் ஒரு மனிதனின் வெற்றிக்கு இன்றியமையாதவை. உள்ளார்ந்த திறன்கள் தன்னைப் பற்றி நன்றாக புரிந்துகொள்ளவும், தனிப்பட்ட திறன்கள் பிறரைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது இதனால் தனிப்பட்ட வளர்ச்சியும், தன்னை சுற்றியுள்ள உலகத்தின் வளர்ச்சியும் சாத்தியமாகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com