பூஜியத்தில் தொடங்கி பூஜியத்தில் முடியும் பயணம்: மதிப்பைக் கூட்டுவதும் குறைப்பதும் நம் கையில்!

இப்போது வாழ்கின்ற வாழ்க்கை நிலைக்கு வேண்டி பற்பல புதிய விஷயங்களை கற்று, அறிந்து, தெரிந்து உணர்ந்து வைத்திருக்க வேண்டும்.
உங்கள் வாழ்நாளில் உங்கள் பங்கு
உங்கள் வாழ்நாளில் உங்கள் பங்கு
Published on

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் பூஜியத்தில் பிறந்து, பூஜியத்தில் மரணிக்கின்றான்.

பூஜியத்திற்குப் பிறகு வரும் எண்களுக்கு மதிப்பு கூடிக்கொண்டே போகும். அதே போல் மனிதனின் பிறப்பிலிருந்து அவன் மதிப்பு கூடிக்கொண்டே போனால் அவன் வாழ்க்கை சிறக்கும். அதாவது, பூஜியத்திலிருந்து தொடங்கி நம் மதிப்பை நாம் உயர்த்திக் கொண்டே செல்ல வேண்டும்.

வாழ்க்கையில் உழைப்பும், திறமையும், புத்தி கூர்மையும் இருந்தால், அருவி போல் உயரும் எண்கள் உங்கள் மதிப்பை மென்மேலும் கூட்டும். அது எதுவும் உங்களுக்கு இல்லை என்றால் வாழ்க்கை பூஜியத்திலேயே நிற்கும். வாழ்க்கையில் என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது மிக மிக முக்கியம். இன்றைய சூழ்நிலைக்கேற்ப எவ்வளவோ முக்கியமான, அதிலும் இப்போது இருக்கின்ற, இப்போது வாழ்கின்ற வாழ்க்கை நிலைக்கு வேண்டி பற்பல புதிய விஷயங்களை கற்று, அறிந்து, தெரிந்து உணர்ந்து வைத்திருக்க வேண்டும்.

அப்படித் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகமிக அவசியமும் கட்டாயமும் கூட. அதிலும் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறோம் என்பது முக்கியமல்ல. அவரவர் வாழ்க்கை நிலைக்கு, சூழலுக்கு ஏற்ப என்னென்ன தெரிந்து வைத்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

வாழ்க்கை நிலைக்குத் தேவையில்லாத, ஒத்துவராத, வேண்டப்படாத பல விஷயங்களை தெரிந்து வைத்திருப்பதில் பயனில்லை. தனக்குத் தெரியாததை கற்றுணர்ந்து தெரிந்து வைத்துக் கொள்வது ஒவ்வொரு மனிதனுடைய பொறுப்பு.

இதையும் படியுங்கள்:
"நான் யார்?" - இந்த கேள்விக்கு விடை தெரிந்தால் உங்கள் வாழ்க்கை ராயல் தான்!
உங்கள் வாழ்நாளில் உங்கள் பங்கு

அதோடு அது அவசியமும் கூட. அதிலும் தெரியாததை தைரியமாக கேட்டுக் கற்றறிந்து தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காகத்தான் ஒவ்வொருவரும் அவரவருடைய வாழ்க்கையில் நிறையில் கேள்விகள் கேட்கப் பழகிக்கொள்ள வேண்டும். கேள்விகளைக் கேட்கத் தயங்கக்கூடாது. பயப்படக்கூடாது. பின் வாங்கக் கூடாது. கேள்விகள் கேட்கவில்லை என்றால் தெளிவான அறிவு வளர்ச்சி பெற முடியாமல், உணர்ந்து கொள்ள வேண்டியதை உணர்ந்து கொள்ளாமல் போய்விடும். திறந்த மனதுடன் கேள்விகள் கேட்க வேண்டும்.

யார் யாரிடம் கேள்விகள் கேட்கவேண்டும் என்பதும் மிக முக்கியம். எந்த விஷயத்தையும் அது சம்பந்தப்பட்ட நபரிடம் தான் கேட்க வேண்டும். இதைவிட்டு விட்டு சம்பந்தமே இல்லாத நபரிடம் கேட்டு பதிலைப் பெற்று காரியம் செய்தால் செய்ய வேண்டிய காரியம் கெட்டு விடும். காலமும் வீணாகும். பிறகு காலம் சரியில்லை, நேரம் சரியில்லை, மனிதர்கள் சரியில்லை என்று குறை கூறுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

காரணம் கேள்விகளிலிருந்து பிறப்பது தெளிவு, தெளிவிலிருந்து பிறப்பது அறிவு, அறிவிலிருந்து தொடர்ந்து வருவது அறிவு வளர்ச்சி. அறிவு வளர்ச்சியிலிருந்து தோன்றுவது சிந்தனை புரட்சி, சிந்தனை புரட்சியிலிருந்து பிறப்பது மனித வாழ்வில் புதுமை மறுமலர்ச்சி. மனிதனுடைய வாழ்க்கையில் ஆக்கபூர்வமான மறுமலர்ச்சி இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் மனிதனுடைய மன வளர்ச்சி மேம்பாடு கண்டு வாழ்வும் செழித்தோங்கும்.

இதுதான் மனித குல பரிணாம வளர்ச்சி. வாழ்க்கையில் முடிந்து போனதை நினைத்து வருந்தவும் வேண்டாம். வரப்போவதை நினைத்து கவலைப்படவும் வேண்டாம். நடப்பவை நடந்து கொண்டே தான் இருக்கும். நாலு பேருக்கு எப்படி நல்லது செய்யலாம் என்று மட்டும் நினையுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com