உங்க மோட்டிவேஷன் ஏன் 10 நிமிஷத்துல புஸ்ஸாகுது? இந்த 3 விஷயம் தான் மேட்டர்!

Motivation Myth
Motivation Myth
Published on

நம்மல்ல பல பேருக்கு காலையில எழுந்ததும் ஒரு மோட்டிவேஷன் வீடியோ பார்த்தா தான் அந்த நாளே ஓடும். ஒரு வீடியோவைப் பார்ப்போம், உடம்பெல்லாம் சூடாகி, "இன்னைக்கு நம்ம ஜெயிச்சுட்டோம்"னு ஒரு உத்வேகம் வரும். ஆனா, அடுத்த நாள் காலையில? மறுபடியும் போனை எடுத்து இன்னொரு மோட்டிவேஷன் வீடியோவைத் தேடுவோம். முதல்லையே மோட்டிவேஷன் மட்டும் வேலை செஞ்சிருந்தா, நீங்க முதல் வீடியோ பார்த்தப்பவே உங்க வாழ்க்கையை மாத்த ஆரம்பிச்சிருப்பீங்களே, ஏன் மறுபடியும் மறுபடியும் தேடப் போறீங்க?

மோட்டிவேஷன் ஒரு தீப்பொறி மட்டுமே!

உண்மை என்னன்னா, மோட்டிவேஷன்ங்கிறது ஒரு உணர்ச்சிவசப்பட்ட நிலை. அது ஒரு தீபாவளி ராக்கெட் திரியில வைக்கிற நெருப்பு மாதிரி. "சர்ரு"னு ஏறும், ஆனா உள்ள மருந்து சரியா இல்லைன்னா, ரெண்டு அடிலயே "புஸ்ஸு"னு போயிடும். அந்தத் தீப்பொறி மட்டும் நம்மளைக் கடைசி வரைக்கும் கொண்டு போகாது. அப்போ ஜெயிக்கிறதுக்கு அந்த மோட்டிவேஷனைத் தாண்டி நமக்கு என்னதான் தேவை?

1. இலக்கை விடுங்க, சிஸ்டத்தை உருவாக்குங்க!

நம்மல பல பேர் இலக்குகளை மட்டும் நிர்ணயம் செய்றோம். "நான் ஒரு பெரிய தொழிலதிபர் ஆகணும்" அல்லது "மாசத்துக்கு 100 பொருள் விற்கணும்"னு நினைப்போம். ஆனா, அந்த இலக்கை எப்படி அடையுறதுங்கிற சிஸ்டத்தை நாம உருவாக்குறது இல்லை. 

"100 பொருள் விற்கணும்"னு நினைக்கிறதை விட்டுட்டு, "ஒரு பொருள் விற்க 10 பேர் கடைக்கு வரணும், அப்ப 1000 பேர் கடைக்கு வரணும். அந்த 1000 பேரை வரவைக்க நான் தினமும் என்ன மார்க்கெட்டிங் செய்யணும்?"னு யோசிக்கிறதுதான் சிஸ்டம். நீங்க அந்த சிஸ்டத்தை கரெக்டா செஞ்சா, இலக்கு தானா நிறைவேறிடும்.

2. உங்க அடையாளத்தை மாத்துங்க!

உங்க அடையாளத்தை மாத்துங்க. "நான் உடம்பைக் குறைக்கப் போறேன்"னு சொல்லாதீங்க. அப்படிச் சொன்னா, "நான் இப்போ குண்டா இருக்கேன், கஷ்டப்பட்டு குறைக்கப் போறேன்"னு உங்க மனசு நினைக்கும். அதுக்குப் பதிலா, "நான் ஒரு ஃபிட்டான ஆள்"-னு உங்க அடையாளத்தையே மாத்துங்க. 

ஒரு ஃபிட்டான ஆள் என்ன செய்வான்? கரெக்டான சாப்பாடு சாப்பிடுவான், சரியா தூங்குவான், உடற்பயிற்சி செய்வான். நீங்க உங்களை "ஃபிட்டான ஆள்"னு நம்ப ஆரம்பிச்சிட்டீங்கன்னா, இந்த வேலைகளைக் கஷ்டப்பட்டு செய்ய மாட்டீங்க, இயல்பா செய்வீங்க.

இதையும் படியுங்கள்:
₹1 கோடி சம்பாதிக்க 33 வருஷமா? நம்ம ஏன் இன்னும் பணக்காரர் ஆகல?
Motivation Myth

3. உங்க சூழலை மாத்துங்க!

Discipline, இது யாருக்கும் பிறக்கும்போதே வர்றது இல்லை. அது முழுக்க முழுக்க நம்ம சூழலைப் (Environment) பொறுத்தது. உங்களைச் சுத்தி இருக்கிற எல்லாரும் ஃபிட்டா இருந்தா, நீங்க மட்டும் சோம்பேறியா இருக்க முடியாது. 

ஒன்னு நீங்களும் ஃபிட் ஆகிடுவீங்க, இல்ல அந்த இடத்துக்கே போக மாட்டீங்க. உங்க இலக்குக்குத் தடையா இருக்கிற விஷயங்களை உங்க கண்ணு முன்னாடி இருந்து தூக்கிப் போட்டுட்டு, உங்க இலக்கை ஆதரிக்கிற மாதிரி உங்க சூழலை மாத்தி அமைங்க.

இதையும் படியுங்கள்:
5 லட்சம் ரூபாயில் ஒரு ஐஸ்கிரீம்!
Motivation Myth

மோட்டிவேஷன்ங்கிறது ஒரு தொடக்கப் புள்ளி மட்டும்தான். அதை மட்டுமே நம்பிட்டு இருந்தா, நம்ம ராக்கெட் எப்பவுமே "புஸ்"ஸுதான். உண்மையான வெற்றிக்குத் தேவை ஒரு தெளிவான சிஸ்டம், மாறின ஒரு அடையாளம், மற்றும் சரியான சூழல். இந்த மூணையும் சரி பண்ணிட்டா, நீங்க தேடுற வெற்றி உங்களைத் தேடி வரும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com