உங்க குழந்தை ஏன் படிப்பதில்லை? வெற்றி தரும் இந்த ரகசியத்தை இப்போதே கற்றுக்கொடுங்கள்!

Motivatikonal article in tamil
kids reading books
Published on

வெற்றிக்கு  உதவுவது பெரும்பாலும் நமது மனதில் தோன்றும் சிந்தனைகளே எனலாம். சிந்தனைகளின் வழியே வழிநடத்தும்  அறிவுதான் நமது முன்னேற்றத்திற்கு தூண்டுகோலாக அமைகிறது. ஒருவர் கல்வி கற்றால் வெற்றி பெறலாம் என்பது அனைவரும் அறிவோம். ஆனால்  கற்ற கல்வியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற அறிவும் அதற்கு நிச்சயம் தேவை.

இந்த விசாலமான அறிவை தருவது வெறும் ஏட்டுக் கல்வி மட்டுமல்ல நாம் தேடித்தேடி படிக்கும் புத்தகங்களும்தான். இதை பல அறிஞர்கள் உணர்ந்ததாலேயே அவர்களின் வெகு நேரங்களை புத்தக வாசிப்பில் கழித்தனர்.

வாசிப்பு என்பது நமது அன்றாட பழக்கங்களை மேம்படுத்தி குணங்களை ஒழுங்குபடுத்தும் ஒரு அற்புதம்.  அன்று சிறுவர் முதல் பெரியவர்வரை இருந்த ஒரே பொழுது போக்கு புத்தகங்கள் வாசிப்பது. ஏனெனில் இன்று போல் அன்று தொலைக்காட்சிகளும், அலைபேசிகளும், கணினிகளும் அவர்களின் வாழ்க்கையை ஆக்கிரமிக்கவில்லை.

ஆனால்  இன்று புத்தக வாசிப்பு என்பதே மறந்துபோய் எல்லா விஷயங்களுக்கும் அலைபேசியை சொடுக்கி  google எனும் இணையதளத்தை நாடுவது பலரின் பழக்கமாகிவிட்டது. இதனால் இழப்பது நமது சிந்திக்கும் திறன் என்பதை அறியாமலேயே எளிதாக இணையவலையில் சிக்குகிறோம்.

அன்று ஒரு கையில் அம்மா தந்த மிக்சரை சுவைத்துக்கொண்டே மறு கையில் இருந்த புத்தக வாசிப்பு  அத்தனை சுகமானதாக இருந்தது. ஆனால் இன்றோ உணவுகளிலும் கலப்படம். வாசிக்கும் பழக்கம் அறவே இல்லை என்பது கவலை தரும் விஷயமாகவே உள்ளது. அத்துடன் அன்று தெருவுக்கு தெரு நூலகங்களும் அதில் நிறைந்த புத்தகங்களுடன் வாசிப்பவர்களும் நிறைய இருந்தனர். இன்று நூலகங்களும் அருகி, இருப்பதிலும் குறைந்த அளவு மக்களே உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
கவனமா இருங்க! இந்த தவறை செஞ்சா நீங்க ஜெயிக்கவே முடியாது!
Motivatikonal article in tamil

சரி புத்தகங்கள் வாசிப்பதால் என்ன நன்மைகள் பெறலாம்? பலவித கருத்துக்களை கொண்ட புத்தகங்களை வாசிப்பது நமது அறிவை விசாலமாக்கும். நமது நேரங்களை பயனுள்ளதாக மாற்றிவிடும். ஏனெனில் ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு விஷயத்தை நமக்கு கற்றுத் தரும். 'கற்றது கையளவு கல்லாதது உலகளவு' என்பார்கள். அந்த உலகளவில் ஞானத்தை கற்றுத் தரும் இடத்தில் உள்ளது புத்தகங்களே.  

வாசிப்பு நமது கற்பனைத் திறனை அதிகரித்து படைப்புத் திறனை ஊக்குவிக்கும். அத்துடன் ஒருவரின் தனிப்பட்ட மற்றும் சமூக முன்னேற்றத்திற்கும் உதவுகிறது. ஆம் உலக விஷயங்களை புத்தகம் மூலம் அறிந்து மற்றவருக்கும் கற்றுத்தரலாம். குறிப்பாக இந்த புத்தக வாசிப்பை குழந்தைகளிடம் வலியுறுத்துவதால் நல்ல குணங்களுடன் அவர்கள் எதிர்காலம் சிறக்கும்.

வெற்றி தரும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்க நாம் செய்யவேண்டும்? பிள்ளைகள் படிக்கத் துவங்கும்போதே  பல மொழிப் புத்தகங்களை வாசிக்க சொல்லி பழக்கலாம். புத்தகக் கண்காட்சிகள் அல்லது வாசிப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம், புதிய புத்தகங்களை குழந்தைகளுக்கு அன்பளிப்பாக வழங்கலாம்.  தினமும் புத்தக வாசிப்புக்கு நேரம் ஒதுக்கித் தரலாம். நூலகங்களுக்கு அழைத்துச் செல்லலாம்.

இதையும் படியுங்கள்:
"பயம் உங்களை ஆட்டிப்படைக்கிறதா?" வாழ்க்கையை மாற்றப்போகும் ஒரு நிமிட உண்மை!
Motivatikonal article in tamil

புத்தகங்கள் எழுதுபவர்கள் பலவித கல்வி அறிவு, அனுபவ அறிவுடன் அதை எழுதி இருப்பார்கள். அதை வார்த்தைகளின் மூலம் நமக்கு கடத்தும்போது அந்த அனுபவங்கள் நமக்கும் ஏதோ ஒரு விதத்தில் வெற்றி தருபவையாக இருக்கும். பெரும்பாலும் நம்பிக்கை விதைக்கும் விஷயத்தில் முதலிடத்தில் இருப்பது புத்தகங்களே. தன்னம்பிக்கை தரும் புத்தக வாசிப்பு பலருக்கும் உத்வேகத்தை தந்து சாதிக்கத்தூண்டும்.

புத்தக வாசிப்பை மேம்படுத்தி அறிவு மற்றும் நல்வாழ்வை நாமும் பெற்று, நமது சந்ததிகளும் பெற உதவுவது நமது கடமை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com