வாழ்க்கையில் வரும் வலிகள் நம்மை வீழ்த்துவதற்கில்லை; ஏன் தெரியுமா?

துன்பங்களும் தோல்விகளும் நம்மை முடக்குவதில்லை; அவை எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் மனஉறுதியையே வளர்க்கின்றன.
வாழ்க்கை
வாழ்க்கைGemini image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

வலி என்றுமே ஒருவரை வலுவிழக்கச் செய்யாது. மாறாக அது வருங்காலத்திற்கான வலிமையையும் மனஉறுதியையும் பெற்றுத் தரும். நாம் படும் துயரங்களும் கஷ்டங்களும் நமக்கு விலைமதிப்பற்ற வாழ்க்கைப் பாடங்களை கற்றுக்கொடுக்கின்றன. சோதனைகளைக் கடந்து செல்லும் பொழுது நமது மனவலிமை பலமடங்கு அதிகரிக்கிறது. இன்றைய வலிதான் நாளைய வெற்றிக்கான அடித்தளமாகவும் பக்குவமாகவும் மாறுகிறது.

வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் வலிகளும், வேதனைகளும் நம்மை வீழ்த்துவதற்காக வருவதில்லை. மாறாக அவை நமக்கு சகிப்புத்தன்மையையும், மனஉறுதியையும் கற்றுக்கொடுத்து எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கான பெரும் வலிமையாக மாறுகின்றன.

தோல்விகள் யாவும் வெற்றிக்கான முதல் படிகளே தவிர, அவை நம் வாழ்க்கைப் பயணத்தின் முடிவல்ல. அவை நம்மை சோதிப்பது போலத் தோன்றினாலும், நமக்குள் விடாமுயற்சியையும் சிறந்த அனுபவத்தையும் வளர்க்கின்றன. கஷ்டங்களை எதிர்கொள்ளும் போது மனம் பக்குவம் அடைகிறது. எதிர்காலத்தில் வரக்கூடிய கடினமான சூழ்நிலைகளை சமாளிக்கும் மனஉறுதியையும் நமக்கு அளிக்கிறது.

வாழ்வில் எதிர்ப்படும் ஏமாற்றங்கள் தற்காலிகமாக நம்மை முடக்கினாலும், அவை நமக்குள்ளே ஒரு புதிய மனிதனை உருவாக்குகின்றன. ஒருமுறை வலியைத் தாங்கி மீண்டு வரும்பொழுது, அடுத்தமுறை வரும் சவால்களை எதிர்கொள்ளும் தைரியம் தானாகவே பிறக்கிறது. வாழ்வில் எதிர்படும் தோல்விகளும் வேதனைகளும் எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்ற மிகச்சிறந்த பாடத்தை நமக்கு கற்றுத் தருகின்றன. நாம் எவ்வளவு பலசாலி என்பதை நமக்கு நாமே உணரும் தருணம், நாம் வலியில் இருக்கும் தருணம்தான்.

கடினமான சூழ்நிலைகளைக் கடந்து வரும் பொழுது நம்மிடம் இருக்கும் ரெசிலியன்ஸ் (resilience) எனப்படும் மீண்டெழும் திறன் அதிகரிக்கிறது. தோல்விகளும் ஏமாற்றங்களும் தரும் வலி, அடுத்த முறை நாம் எடுக்கவேண்டிய முடிவுகளை மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்க உதவுகிறது.

வாழ்க்கை
வாழ்க்கைGemini image

தீவிரமான இக்கட்டான காலகட்டங்களில் தான் நம்முடைய உண்மையான பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதை நாம் உணர்கிறோம். நெருப்பில் அடிபட்ட தங்கம் தான் ஆபரணமாகிறது என்பதைப்போல இன்றைய வலிகள் தான் நாளை நம்மை ஒரு சிறந்த வலிமையான மனிதராக மாற்றும். வலி நம்மை செதுக்கும் உளி என்பதை மறக்க வேண்டாம்.

இதையும் படியுங்கள்:
100 வருடங்களாக மறைக்கப்பட்ட வாழ்க்கை ரகசியம்… அதிர்ச்சி தகவல்!
வாழ்க்கை

ஒரு அடர்ந்த காட்டின் ஓரத்தில் இருந்த தோட்டத்தில் ஒரு பெரிய மரத்தின் கிளையில் வண்ணத்துப்பூச்சியின் கூடு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதற்குள் இருந்த புழு தன் உருவத்தை மாற்றி ஒரு அழகான வண்ணத்துப்பூச்சியாக வெளிவருவதற்கு மிகவும் போராடிக் கொண்டிருந்தது.

அந்த வழியாக வந்த சிறுவன் அந்தக் கூட்டில் ஒரு சிறிய துளை விழுந்திருப்பதைக் கண்டு அதற்குள் இருந்த வண்ணத்துப்பூச்சி அந்த சிறிய துளை வழியாக வெளியே வருவதற்கு கடுமையாக போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். வண்ணத்துப்பூச்சி தன்னுடைய முழு பலத்தையும் திரட்டி முயற்சி செய்தும் அதனால் வெளியே வர முடியவில்லை. சோர்வடைந்து மேற்கொண்டு நகராமல் அப்படியே நின்றுவிட்டது.

இதைக் கண்ட சிறுவன் அதற்கு உதவி செய்வதாக நினைத்து அந்தக் கூட்டின் துளையை மெதுவாக வெட்டி பெரிதாக்க, எந்தவித போராட்டமும் இல்லாமல் வண்ணத்துப்பூச்சி எளிதாக வெளியே வந்தது.

ஆனால் அந்த வண்ணத்துப்பூச்சியால் பறக்கவே முடியவில்லை. தன் சுருங்கிய சிறகுகளோடு தரையிலேயே ஊர்ந்து சென்று சில மணி நேரங்களில் இறந்துபோனது. சிறுவன் செய்த உதவி தான் அந்த வண்ணத்துப்பூச்சி இறந்ததற்கு காரணம் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை அதுதான்.

இதையும் படியுங்கள்:
எதைப் பேசக் கூடாது தெரியுமா? வாழ்க்கையை மாற்றும் சிறந்த அமைதியின் ரகசியம்!
வாழ்க்கை

வண்ணத்துப்பூச்சி அந்த சிறிய துளையிலிருந்து வெளியே வருவதற்கு போராடும் போதுதான் அதன் உடலில் உள்ள திரவங்கள் அனைத்தும் அதன் சிறகுகளுக்குள் பாயும். அந்த நெருக்கடியும் வலியும்தான் அதன் சிறகுகளுக்கு பறப்பதற்கான பலத்தை அளிக்கும்.

இயற்கை வைத்த அந்த வலி என்ற விதியை சிறுவன் சுலபமாக்கியதால் வண்ணத்துப்பூச்சி தன் சிறகுகளின் பலத்தை நிரந்தரமாக இழந்துவிட்டது. இதுபோல்தான் வலியில்லாத வாழ்க்கை நம்மை பலவீனம் ஆகிவிடும்.

வலிகளை எதிர்கொண்டு போராடும் போதுதான் நம்மிடம் இருக்கும் உண்மையான திறமையும் தைரியமும் வெளிப்படும். எனவே வலிகளைக் கண்டு முடங்கி விடவேண்டாம். அவை நம்மை வலுவிழக்கச் செய்யாது வானளவுக்கு உயரச்செய்யும்.

இந்த வாசிப்பின் முடிவில், வாசகர் தான் சந்திக்கும் துன்பங்களைக் கண்டு சோர்ந்துபோகாமல், அவை தன்னுடைய எதிர்கால வெற்றிக்கும் மனவளர்ச்சிக்கும் தேவையான அடித்தளம் என்பதை உணர்ந்து தெளிவடைவார்.

logo
Kalki Online
kalkionline.com