எதைப் பேசக் கூடாது தெரியுமா? வாழ்க்கையை மாற்றும் சிறந்த அமைதியின் ரகசியம்!

எப்போது பேச வேண்டும், எப்போது மௌனமாக இருக்க வேண்டும் என்பதை அறிவதே வாழ்க்கையின் ஆகச்சிறந்த ஞானம்.
பேச்சுத்திறன்
பேச்சுத்திறன்Gemini image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

வாழ்க்கையில் மனித உறவுகளை மேம்படுத்துவதற்கும், நம்முடைய ஆளுமையை வளர்த்துக் கொள்வதற்கும் பேச்சுத்திறன் என்பது மிகவும் முக்கியமானது. மனதில் பட்டதை எல்லாம் பேசாமல் பக்குவமாகப் பேசப் பழக வேண்டும்.

கனிவான வார்த்தைகள் பேசுவதும், பிறர் பேசுவதை பொறுமையாகக் கேட்பதும், சூழ்நிலையை அறிந்து வார்த்தைகளைப் பயன்படுத்துவதும், சொல்ல வரும் கருத்தைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்வதும், கோபமான சூழ்நிலைகளிலோ அல்லது தேவையற்ற விவாதங்களிலோ தர்க்கம் செய்யாமல் மௌனம் காப்பதும் பேரறிவின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. 

 "எப்படிப் பேசுவது என்பது பக்குவம், எதைப் பேசுவது என்பது அறிவு, எதைப் பேசாமல் இருப்பது என்பது பேரறிவு" என்பது நமது வாழ்வியலில் பேசும் திறனின் ஆழத்தையும் மௌனத்தின் அவசியத்தையும் உணர்த்தும் அழகான பழமொழியாகும்.

ஒருவரிடம் பேசும்பொழுது நாம் பயன்படுத்தும் வார்த்தைகளை எங்கு, எப்படி, யாரிடம், எந்த வகையில் பயன்படுத்த வேண்டும் என்ற முதிர்ச்சி மற்றும் நாகரீகத்தை இது குறிக்கிறது. சூழலுக்குத் தகுந்த சரியான கருத்துகளையும், அவசியமான தகவல்களையும் தேர்ந்தெடுத்து பேசும் விவேகத்தை குறிப்பது தான் எதைப் பேசுவது என்பதைக் குறிக்கும். எதைப் பேசாமல் இருப்பது என்பதோ, எங்கு மௌனமாக இருக்க வேண்டும், எதைச் சொல்லக்கூடாது என்பதை அறிந்து நம்மை கட்டுப்படுத்திக் கொள்ளும் உயர்ந்த ஞானத்தை குறிக்கும்.

பேச்சுத்திறன்
பேச்சுத்திறன்Gemini image

சூழ்நிலை அறிந்து, அடுத்தவர் மனம் புண்படாமல் மென்மையாகவும் நாகரீகமாகவும் பேசும் குணம் வேண்டும். மற்றவர்களிடம் பேசும் பொழுது நம் குரல் இனிமையாகவும், பணிவுடனும், நயத்துடனும் இருப்பது நம்முடைய பக்குவத்தைக் காட்டும். கோபத்தில் கூட நம்மால் பிறர் மனம் காயப்படும்படி பேசாமல் அன்பாகவும் தெளிவாகவும் பேச முடியும்.

இந்தப் பக்குவம் மட்டும் நம்மிடம் வந்து விட்டால் போதும் நமக்கு எதிராளி அல்லது பகையாளி என யாரும் இருக்க மாட்டார்கள்.

உதாரணத்திற்கு அலுவலகத்தில் அல்லது வீட்டில் பணி செய்யும் ஒரு ஊழியர் தவறு செய்து விட்டால் உனக்கு மூளை இருக்கா, இப்படி செய்யலாமா என்று கத்துவது பக்குவமற்றது. இப்படி செய்திருப்பது தவறு, அடுத்த முறை கவனமாகச் செய் என்று அமைதியாக சுட்டிக் காட்டுவதே பக்குவம்.

அத்துடன் சூழ்நிலைக்குத் தகுந்த சரியான விஷயத்தைத் தேர்ந்தெடுத்து பேசுவது என்பது அறிவு. எந்த விஷயத்தைப் பற்றி பேசினால் மற்றவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றும், எதை எங்கு எப்படி பேச வேண்டும் என்ற தெளிவும் இருப்பதே உண்மையான அறிவாகும். இதற்கு நாம் யாரிடம் என்ன பேச வேண்டும் என்ற புரிதல் இருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு ஒரு மருத்துவமனைக்கு செல்கிறோம் என்றால் அங்குள்ள கடினமான சூழலில் நின்று கொண்டு அரசியல் பேசுவதோ, சினிமா கதைகளைப் பற்றி உரக்க பேசுவதோ அறிவற்ற செயலாகும். மாறாக நோயாளியின் உடல்நிலை பற்றி விசாரிப்பதும், ஆறுதல் வார்த்தைகளைக் கூறுவதும் அறிவு. இருக்கும் இடத்தின் சூழலைப் புரிந்துகொண்டு பதமாக நடக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
அப்துல் கலாம் சொன்ன தத்துவம்: சுயசிந்தனை இருந்தாலும் பிறர் ஆலோசனை தேவையா?
பேச்சுத்திறன்

தேவையானதை மட்டும் சரியான இடத்தில், அர்த்தமுள்ள தகவல்களாகப் பேசும் திறன் வேண்டும். அதேபோல் சில இடங்களில் அமைதி காப்பதே சிறந்த ஞானம் ஆகும். இது தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்க்க உதவும். வீண் விவாதங்களைத் தவிர்த்து, தேவையற்ற இடங்களில் மௌனமாக இருக்க பழகிக்கொள்வது வாழ்க்கையில் பல பிரச்னைகளை தவிர்க்கவும், உறவுகளை மேம்படுத்தவும் உதவும்.

அனைத்து சூழ்நிலைகளிலும் நாம் அனைத்தையும் பேச வேண்டும் என்பதில்லை. எங்கு மௌனம் காக்க வேண்டும், எதைப் பேசினால் குழப்பம் விளையும், தீமை விளையும் என்பதை உணர்ந்து தேவையற்ற விஷயங்களைத் தவிர்த்து அமைதி காப்பதே மிகச்சிறந்த பேரறிவாகும்.

இதையும் படியுங்கள்:
நகைச்சுவை உணர்வு ஏன் அவசியம்? வாழ்க்கை மாற உதவும் ரகசியம்!
பேச்சுத்திறன்

உதாரணத்திற்கு இரண்டு நண்பர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவரையொருவர் தவறாகப் பேசிக் கொள்ளும் போது நாமும் சேர்ந்து எதையாவது பேசி பிரச்னையை பெரிதாக்காமல், புத்திசாலித்தனமாக மௌனம் காப்பது அல்லது இருவரையும் சமாதானம் செய்ய முயன்று தேவையற்ற வம்பு பேச்சுகளைத் தவிர்ப்பது பேரறிவு. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் எனறால் வார்த்தைகளை அளந்து பேசுவது பக்குவம்; தேவைக்கேற்ப பேசுவது அறிவு; தேவையற்ற இடத்தில் பேசாமல் இருப்பது பேரறிவு. 

தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து, சூழலுக்கு ஏற்ப வார்த்தைகளைப் பயன்படுத்தவும், எப்போது மௌனமாக இருந்து உறவுகளையும் தன்மதிப்பையும் காப்பாற்றிக் கொள்வது என்பதையும் வாசகர் கற்றுக்கொள்வார்.

logo
Kalki Online
kalkionline.com