உங்களை கஷ்ட காலத்தில் கைவிட்டவர்களுக்கு நீங்கள் நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும்! ஏன் தெரியுமா?

ஏமாற்றங்களும் வீழ்ச்சியும் எப்படி நம்மை நாமே செதுக்கிக் கொள்ள உதவுகின்றன?
சோதனை
சோதனைGemini image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

நாம் கஷ்டத்தில் இருக்கும்போது நம்மை கைவிட்டவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கிறோம். ஏன் தெரியுமா? அவர்கள் அன்று நம்மை கைவிட்டதால் தான் நம்மையே நாம் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. நம்முடைய உண்மையான பலம் என்ன என்பதையும், நாம் யார் என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் நம்மை விட்டு விலகிய அந்த ஏமாற்றம்தான் நம்மை சுயசார்பு உடையவர்களாகவும், மனவலிமை மிக்கவர்களாகவும் மாற்றுகிறது.

வாழ்க்கையின் மிக ஆழமான ஒரு கசப்பான உண்மை இது. மனித வாழ்க்கையில் துன்பங்களும், ஏமாற்றங்களும் வெறும் வலியை மட்டும் தருவதில்லை. அவை நமக்கு பல முக்கியமான பாடங்களையும் கற்றுத் தருகின்றன. நாம் நல்ல நிலையில் இருக்கும்போது நம்மைச் சுற்றி இருக்கும் கூட்டத்தை விட, நாம் வீழ்ந்து கிடக்கும் போது நம்மோடு நிற்கும் சிலரே உண்மையானவர்கள்.

நம்மை கைவிட்டவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளும்போது, தேவையற்ற உறவுகளை நம் வாழ்க்கையில் இருந்து விலக்க அது உதவுகிறது.

மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து நாம் பலவீனமாக இருந்திருப்போம். ஆனால் யாரும் இல்லை என்ற நிலை வரும் போது நமக்குள் இருக்கும் தன்னம்பிக்கையும், அசாத்தியமான துணிச்சலும், திறமையும் வெளிப்படுகிறது. என்னால் தனியாகவும் சாதிக்க முடியும் என்ற உண்மையான சுய அடையாளத்தை அப்போதுதான் நாம் பெறுகிறோம்.

துன்பங்களும் தனிமையும் நம் மனதை பக்குவப்படுத்துகின்றன. உலகத்தையும் மனிதர்களின் சுயரூபத்தையும் மிகச் சரியாக எடை போடும் ஞானத்தை இந்தத் தருணங்கள் நமக்கு கற்றுக் கொடுக்கின்றன. எனவே நம்மை கஷ்ட காலத்தில் கைவிட்டவர்கள் மீது கோபப்படுவதை விட நம்மை நாமே செதுக்கிக் கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கிறோம்.

வீழ்ச்சி தான் எழுச்சிக்கான முதல் படி. மற்றவர்கள் நம்மை கைவிடும் போது நமக்கு நாமே தான் என்ற எண்ணம் வரும். அந்த தருணமே நம்மிடம் ஒளிந்திருக்கும் அசாத்திய துணிச்சலையும், எந்த பிரச்னைகளில் இருந்தும் மீண்டு வரும் திறனையும் நமக்குத் தருகிறது.

இந்த ஏமாற்றங்கள் நம்மை உணர்ச்சிவசப்படுபவர்களாக மாற்றாமல், வாழ்க்கையை இன்னும் முதிர்ச்சியோடு பார்க்கக் கற்றுக் கொடுக்கிறது. துன்பங்களும் துயரங்களும் நம்மை உடைப்பதற்காக வருவதில்லை. நாம் யார் என்பதை நமக்குக் காட்டுவதற்காகவே வருகின்றன.

தோள் கொடுக்க யாரும் இல்லாத போதுதான் நமக்குள் இருக்கும் துணிச்சல் வெளிப்பட்டு நம்மால் எதையும் சுயமாக சிந்திக்கவும், செய்யவும் முடிகிறது. இது நம்மை யாரையும் சாராமல், நம் சொந்தக்காலில் நிற்கப் பழகிக் கொள்ளவும், நம் தற்காப்புத் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. விழுவதெல்லாம் எழுவதற்கே தவிர, வீழ்வதற்கு அல்ல. நம்மை கைவிட்டவர்கள், நம்மை நாமே செதுக்கிக் கொள்ள உதவிய சிற்பிகள் என்பதை மறக்க வேண்டாம். இவர்கள்தான் நமக்கு ஒரு புதிய பாதையையும், சுய அடையாளத்தையும் தேடித்தந்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

சோதனை
சோதனைGemini image

தனியாக நின்றுப் போராடும் போதுதான் நம்முடைய வலிமை நமக்கே தெரிய வரும். அத்துடன் நம் சொந்தக் காலில் நிற்பதில் இருக்கும் நிம்மதியும், மரியாதையும் தனித்துவமானது என்பதை உணர்த்துவதும் இந்த ஏமாற்றங்கள் தான். நெருப்பில் வெந்த பிறகு தான் தங்கம் ஆபரணமாக மாறுகிறது. அதேபோல் சோதனைகளைக் கடந்து தான் நம்மை ஒரு வெற்றியாளராகவோ, பக்குவப்பட்ட மனிதராகவோ மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்:
உங்களை தேடி மற்றவர்கள் வரணுமா? அப்போ இந்த 4 விஷயத்தை பண்ணுங்க!
சோதனை

ஒரு ஊரில் திறமையான இளம் சிற்பி ஒருவன் இருந்தான். அவனுக்கு பெரிய அளவில் ஆர்டர்கள் எதுவும் கிடைக்காததால் தன் நண்பர்களையும் உறவினர்களையும் நம்பியே வாழ்ந்து வந்தான். அவர்கள் கொடுத்த சிறிய தொகையையும், உதவியும் வைத்து காலத்தைக் கடத்தினான். ஒருமுறை ஊரில் கடுமையான பஞ்சம் வந்த பொழுது சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் போனது. அப்பொழுது நண்பர்களிடமும் உறவினர்களிடமும் உதவி கேட்க அவர்களோ கைவிரித்ததுடன் அவனது திறமையை கேலி செய்து, இந்த கல்லுடைக்கும் தொழிலை விட்டுவிட்டு வேறு வேலைக்கு செல் என்று அறிவுரையும் கூறினார்கள்.

மிகுந்த வேதனையுடன் பசியுடன் கழித்த அவனுக்கு மனதிற்குள் திடீரென்று ஒரு பொறி தட்டியது. அடுத்தவரை நம்பி இருந்ததால்தான் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்று எண்ணி தன்னிடமிருந்த உளியையும், சுத்தியலையும் எடுத்து உழைப்பை செலுத்தத் தொடங்கினான். பசியையும் வலியையும் மறந்து பாறையில் அழகாக 'தன்னம்பிக்கை' என்ற மனித உருவச் சிலையை வடித்து சந்தைக்கு கொண்டு வந்தான்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் வளரும்போது ஏன் எல்லோரும் உங்களை எதிர்க்கிறார்கள்? தெரிந்துகொள்ளுங்கள்!
சோதனை

அதுவரை யாருமே பார்த்திராத அசாத்திய அழகுடன் இருந்த அந்தச் சிலையை ஒரு பெரிய தொழிலதிபர் அதன் தத்ரூபமான அமைப்பைக் கண்டு வியந்து வாங்கியதுடன், அவனது பெருமையை அறிந்து பல பெரிய வாய்ப்புகளையும் கொடுத்தார். மிகக் குறுகிய காலத்திலேயே பெரும் புகழையும் வசதியையும் தன்னுடைய உழைப்பால் பெற்றான்.

இப்பொழுது அவனை பாராட்டுவதற்கும் உறவாடுவதற்கும் அனைவரும் வந்து சேர்ந்தனர். அந்த சிற்பி அவர்களைப் புன்னகையுடன் பார்த்து, அன்று மட்டும் நீங்கள் என்னை கைவிடாமல் இருந்திருந்தால் நான் இன்று இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டேன். நீங்கள் என்னை கைவிட்டதால்தான் என் உளியின் பலமும், என் உண்மையான அடையாளமும் எனக்குத் தெரிந்தது என்றான்.

வாசகர்கள் ஒரு புதிய கண்ணோட்டத்தைப் பெறுகிறார்கள்; அதாவது, நெருக்கடியில், சோதனை காலத்தில் தங்களைக் கைவிட்டவர்கள்தான், அறியாமலேயே தங்களின் மிகப்பேராக்கமான தனிப்பட்ட மாற்றத்திற்குச் சிற்பிகளாக இருந்தனர் என்பதை உணர்ந்து அவர்கள் ஆழமான நன்றியுணர்வைப் பெறுகிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com