
தற்போது உள்ள காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு இருக்கும் பெரும் பிரச்சனையே படிக்கும் போது எதிலும் சரியாக கவனம் செலுத்த முடியாததேயாகும். படிப்பதற்கு புத்தகத்தை எடுத்து வைத்து படிக்க ஆரம்பித்த ஐந்தாவது நிமிடம் நம் மனம் போனை எதிர்ப்பார்க்கும். போனை எடுத்து எதையாவது பார்த்துக் கொண்டிருப்போம். படிப்பில் கவனத்தை கொண்டு செல்வது என்பது கடினமாக இருக்கும். இந்த பிரச்னையை சரிசெய்ய 4 ஆப்கள் இருக்கின்றன. அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
1.Forest app
நம்முடைய போனை வைத்துவிட்டு அமைதியாக ஒரு வேலையை முழுமையாக செய்து முடிக்கலாம் என்று நினைத்தாலும் பத்து முறை போனை திரும்ப திரும்ப எடுத்துப் பார்த்து விடுவோம். இது நம்மிடம் போனை பார்க்காமல் இருப்பதற்கான கட்டுப்பாடு இல்லாததைக் காட்டுகிறது. அதற்காக தான் Forest app உள்ளது. முதலில் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்துக் கொண்டு அதில் ஒரு Virtual tree ஐ நடுங்கள்.
இந்த மரம் நாம் போனை தொடாத வரை வளர்ந்துக்கொண்டே போகும். ஆனால், நம் போனை எடுத்து பயன்படுத்த தொடங்கினால் இந்த மரம் இறந்துவிடும். இதைக் கேட்கும் போது பாவமாக இருக்கிறதல்லவா? இனிமே, போனை தொடாமல் வேலையில் கவனம் செலுத்தலாம்.
2.Notion app
உங்களுக்கு படிப்பு விஷயங்களில் எதையுமே Organised ஆக வைத்துக் கொள்ள தெரியவில்லையா? அப்போ Notion app ஐ பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் நோட்ஸை பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம், என்ன செய்ய வேண்டும் என்ற to-do-list போட்டுக் கொள்ளலாம், track assignments, Revision schedule போன்றவற்றை நாமே செய்து வைத்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் ரெடிமேட் Template ஐ எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும்.
3.Anki app
ஆங்கி ஆப் ஒரு இலவச பிளாஷ் கார்ட் செயலியாகும். இதன் மூலம் உங்கள் சொந்த பிளாஷ் கார்ட்டையும் உருவாக்கலாம். இதில் ஆடியோ, படங்களை சேர்க்கலாம். நீங்கள் படித்ததை நினைவில் வைத்துக்கொள்ள, படித்ததை நினைவுக்கூற இச்செயலி உதவுகிறது. நீங்கள் ஒரு தகவலை மறக்க தொங்கும் போது தகவலை மீண்டும் காட்டுகிறது. இதனால் நீண்டகாலம் அந்த தகவலை நினைவில் வைத்திருக்க முடியும்.
4.Speechify app
இந்த ஆப்பின் மூலமாக படிக்காமலேயே கற்க முடியும். உங்களுக்கு பாட புத்தகங்களை படிக்க கஷ்டமாக இருக்கிறதா? அப்போ Speechify ஆப்பை பயன்படுத்துங்கள்.
இந்த ஆப்பின் மூலமாக உங்கள் புத்தகத்தை ஆடியோ ஃபார்மெட்டில் மாற்றி எந்த நேரம் வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். நடக்கும் போது, உடற்பயிற்சி செய்யும் போது அல்லது படுத்திருக்கும் போது கூட கேட்டுக் கொள்ளலாம். ஒரு விஷயத்தை கேட்டுக்கொண்டே அதை நினைத்துப் பார்ப்பது அதைப்பற்றிய நம் புரிதலை 29 சதவீதம் அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.
உங்களுடைய போனை பயன்படுத்தி நீங்கள் நன்றாக படிக்கவும் முடியும் அல்லது உங்கள் கவனத்தை சிதறடிக்கவும் முடியும். இனி, இந்த 4 ஆப்பை பயன்படுத்தி படிப்பதை சுலபமாக்கிக் கொள்ளலாம்.